Tuesday, November 3

Author: பக்தி யோகம் குழு

Azhagia Manavalar Temple-History (Tamil) /  உறையூர் என்னும் திருக்கோழி

Azhagia Manavalar Temple-History (Tamil) / உறையூர் என்னும் திருக்கோழி

108 Divya Desham History (Tamil)
கோழியும் கடலும் கோயில் கொண்டகோவலரே யொப்பர் குன்றமன்னபாழியும் தோழுமோர் நான்குடையர்பண்டிவர் தம்மையுங் கண்டறியோம்வாழியரோ விவர் வண்ண மென்னில்மாகடல் போன்றுளர் கையில் வெய்யஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றிஅச்சோ ஒருவர் அழகியவா (1762)- பெரிய திருமொழி 9-2-5என்று நாகபட்டினம் (திருநாகை) சுந்தர்ராஜப் பெருமாளைமங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார். அப்பெருமானின்பேரழகானது திருக்கோழியில் கோயில் கொண்டுள்ள பெருமானின் அழகுக்கு ஒப்பானதாகும் என்று கூறுகிறார்.எனவே நாகை எம்பெருமானின் பேரழகு இப்பெருமானின் அழகுக்கு ஒப்பு என்று கூறுவதால் இவரே அவரினும் பேரழகு பொருந்தியவராகி, தனக்கு ஒப்புமை கூறக்கூடியவர்களைத்தான் பெற்றிருக்கிறாரேயொழிய தனக்கு மிக்காரில்லை யென்னு மாற்றான் செம்மாந்து திகழ்கிறார்.இது நான் கூறும் கருத்தல்ல. ஆழ்வார்கள் விஷயம். இத்தகைய பேரழகு கொண்டுள்ள திருக்கோழி என்னும் உறையூர்திருச்சி நகருக்குள...
Kuralin Kural – Paramatma (Tamil) / குறளின் குரல் – பரமாத்மா

Kuralin Kural – Paramatma (Tamil) / குறளின் குரல் – பரமாத்மா

குறளின் குரல்
நம்முடன் சேர்ந்து, நமது இதயத்தில் இறைவன் பரமாத்மாவாக இருக்கிறார் என்பதை பகவத் கீதையின் பதின்மூன்று, பதினைந்தாவது அத்யாயங்கள் உறுதி செய்கின்றன."மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ் வார்"-  (திருக்குறள் 3)"இதயமாகிய தாமரை மலரில் இருப்பவனின் மாட்சிமை பொருந்திய அடிகளைச் சேர்ந்தவர் எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்".எல்லா உலகங்கட்கும் அவைகளில் உள்ள உயிர்கட்கும் காரணமான முழுமுதற்கடவுளாகிய ஆதி பகவான் இதயத்தியிருக்கிறான் என்பதை வள்ளுவர் மூன்றாவது குறளில் உறுதி செய்கின்றார். அந்தர்யாமியாக இருக்கும் இறைவனைப் பரமாத்மா என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன. இங்கே வீடு என்பது நிலையான அழிவற்ற உல்கமாகிய வைகுந்தத்தைக் குறிக்கிறது.உபத்ரஷ்டானு மந்தா ச பர்தா போக்தா மஹேஷ்வர:பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹே ஸ்மின் புருஷ: பர:"*(பகவத் கீதை 13.23)இருப்ப...
Thiruvarangam / Srirangam History (Tamil) / திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம்

Thiruvarangam / Srirangam History (Tamil) / திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம்

108 Divya Desham History (Tamil), Posts
இரும்பனன் றுண்ட நீரும்போதருங் கொள்க, என்றன் அரும்பிணி பாவ மெல்லாம்அகன்றன என்னை விட்டுசுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்டகரும்பினைக் கண்டு கொண்டென்கண்ணினை களிக்கு மாறே-திருக்குறுந்தாண்டகம் 13.எந்நேரமும் வண்டுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அழகிய சோலைகள் சூழ்ந்த அரங்கத்தில் பள்ளிகொண்ட கரும்பாகிய என் அரங்கனைக் கண்ட மாத்திரத்தில், சூடான இரும்பில் பட்ட நீர் எவ்வாறு வேகமாக உட்கவரப்பட்டு காணாமல் போகிறதோ அதுபோல், என் பாவமெல்லாம் என்னைவிட்டு பறந்தோடிவிட்டது என்று திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் இன்றைய இந்தியாவிலேயே மிகச் சிறப்பான தலமாகும்.ஸ்ரீரங்கம் ரயில்வே நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீட்டருக்குக் குறைவான தூரமே, திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரமாகும்.திருமாலின் திவ்ய தேசங்கள் 108ல் இத்திருவரங்கம் தலையாயது சோழநாட்ட...
A quick fall by unwanted thinking (Tamil) / வேண்டாத சிந்தனையால் வரும் விரைவான வீழ்ச்சி

A quick fall by unwanted thinking (Tamil) / வேண்டாத சிந்தனையால் வரும் விரைவான வீழ்ச்சி

மஹாபாரதம்
ஒரு விஷயத்தை சிந்திப்பதால் அதில் பற்று உண்டாகிறது. அப்பற்றினால் அதை அனுபவிக்கும் ஆசை உண்டாகிறது. அவ்வாசை நிறைவேறாத போது கோபம் உண்டாகிறது. கோபத்தால், மதிமயக்கம் ஏற்படுகிறது. மதிமயக்கத்தால் நினைவு நிலை இழப்பும் உருவாகிறது. இதனால் புத்தி நாசமாக, புத்திநாசத்தால் ஒருவன் முற்றிலும் வீழ்ச்சி அடைகிறான்.- பகவத்கீதை (2.62-63)த்யாயதோ விஷயான் பும்ஸ: ஸங்கஸ் தேஷூபஜாயதே ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ (அ) பிஜாயதே ரோதாத் பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி-விப்ரம: ஸ்ம்ருதி - ப்ரம்ஷாத் புத்தி-நாஷோ புத்தி-நாஷாத் ப்ரணஷ்யதிஆதாரம்: மஹாபாரதம்ஒருநாள் பஞ்சபாண்டவர்கள், வனவாசத்தின்போது காம்யக வனத்தில் ஆஸ்ர மத்தில் திரௌபதியை தனியாக விட்டு விட்டு உணவு தேடி காட்டிற்குள் சென்றனர். அந்த சமயம், சிந்து தேச மன்னனின் மகனான ஜெயத்ரதன், சால்வ மன்னனின் மகளை மணமுடிப்பதற்காக, நன்கு உடை உடுத்தி அந்த காம்யக வனத்தின் வழி...
மோக்ஷத ஏகாதசி

மோக்ஷத ஏகாதசி

ஆன்மீகப் பதிவு, Videos, ஏகாதசி
https://youtu.be/wN9fehB9AAU மோக்ஷத ஏகாதசி மகிமைகுருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரால் அர்ஜுனருக்கு கீதை சொல்லப்பட்ட நாள் இது என்பது மோக்ஷத ஏகாதசிக்கு மற்றொரு சிறப்பு.மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியின் மகிமையை விளக்குமாறு கிருஷ்ணரை வேண்டுகிறார் யுதிஷ்டிரர். அந்த ஆர்வமே பாவங்களைப் போக்கி மோக்ஷம் தரவல்லது என்கிறார் கிருஷ்ணர்.இப்புனித நாளில் தூபம், நெய் தீபம், நறு மலர்கள், மற்றும் துளசி மஞ்சரிகளைக் கொண்டு தாமோதரரை வணங்குதல் வேண்டும்.இதன் மகத்துவத்தைக் கேட்போரது இறந்துபோன மூதாதையர் நரகத்திற்குச் சென்றோராயினும் மீண்டு சுவர்கலோகம் செல்வர்.சம்பக நகரம் எனும் அழகிய நகரை வைக்காணசா என்னும் ஒரு பக்தி நிறைந்த மன்னன் ஆண்டு வந்தான். இறந்து போன அவன் தந்தை நரகத்தில் மிகுந்த வேதனை அனுபவிப்பதுபோல் அவனுக்கு ஒரு நாள் கனவு வந்தது. துக்கத்தால் நெகிழ்ந்து போன மன்னன் தன் ஆலோசகர்களான அ...
Srila Jiva Goswami (Tamil) / ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி

Srila Jiva Goswami (Tamil) / ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி

வாழ்க்கை வரலாறு
ஶ்ரீல ஜீவ கோஸ்வாமிபெருமை மிக்க வைஷ்ணவ ஆச்சாரியர்வழங்கியவர்: நித்யானந்த தாஸ்"""""'"""""""""""""""""""""""""'""""""""ரூபர், ஸநாதனர், ரகுநாத தாஸர், ரகுநாத பட்டர், கோபால பட்டர், ஜீவர் ஆகிய ஆறு கோஸ்வாமிகள் பகவான் சைதன்யரின் முதன்மையான சீடர்களாவர். .ரூபரும் ஸநாதனரும்சைதன்யரைக் காண ஏங்குதல்சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, வங்காளத்தின் தலைநகரமான ராமகேலி எனும் இடத்தில் நவாப் ஹுசேன் ஷா என்பவரின் ஆட்சியில் ரூபரும் ஸநாதனரும் அமைச்சர்களாகப் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் பிறப்பால் உயர்ந்த பிராமணர்களாக இருந்தபோதிலும், சமூக நெருக்கடியினால் மிலேச்ச அரசருக்குக் கீழ் பணிபுரியும் நிலையில் இருந்தனர். எனினும், அவர்கள் தங்களின் உள்ளுணர்வின் மூலமாக, ராதையும் கிருஷ்ணரும் இணைந்து ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக தோன்றியுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே, “நாங்கள் உங்களை அடைவதற்கும் உங்களுக்குத் தொ...
Panihati Chida-Dahi Festival (Tamil) / பானிஹட்டி சீடா தஹி உற்சவம்

Panihati Chida-Dahi Festival (Tamil) / பானிஹட்டி சீடா தஹி உற்சவம்

திருவிழாக்கள், Festivals-Tamil
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் ரகுநாத தாஸ கோஸ்வாமியும் சந்தித்தல்                இந்த அத்தியாயத்தின் சுருக்கம் பக்தி வினோத தாகூரால் தமது அம்ரித-ப்ராவாஹ-பாஷ்ய உரையில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பிரேமையின் தெய்வீக வலிப்பினுள் நுழைந்தபோது , இராமானந்த ராயரும் ஸ்வரூப தாமோதாரும் அவரை கவனித்துக் கொண்டனர் . அவர் விரும்பியபடி திருப்திப்படுத்தினர் . ரகுநாத தாஸ் கோஸ்வாமி நீண்ட காலமாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தாமரைத் தமது திருவடிகளை அடைவதற்கு முயன்று கொண்டிருந்தார் . இறுதியாக , அவர் இல்லத்தை விட்டு விலகி மஹாபிரபுவைச் சந்திக்க வந்தார் . ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குப் போகும் வழியில் சாந்திபுரத்திற்குச் சென்றிருந்தபோது , ரகுநாத தாஸ கோஸ்வாமி தமது வாழ்வினை மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளில் அர்ப்பணித...
நவ நரஸிம்ம திருக்கோவில், அஹோபிலம், ஆந்திரா

நவ நரஸிம்ம திருக்கோவில், அஹோபிலம், ஆந்திரா

பகவான் நரஸிம்மர்
                      பகவான் நாராயணரின் மற்ற அவதாரங்களிலிருந்து வேறுபட்ட அவதாரம் நரஸிம்ம அவதாரம். உலக மக்களுக்காகவும் தேவர்களின் அபயக் குரலுக்காகவும், ஒரு தனி நபருக்காக, உண்மையான பக்திக்குப் பரிசாக எடுக்கப்பட்ட அவதாரம்."அஹோபிலம்" என்ற பெயர் எப்படி வந்தது ?                      நாராயணரை நரஸிம்மராகத் தரிசிக்கும் ஆர்வத்துடன் கருட பகவான் இத்தலத்தில் அமர்ந்து கடும்தவம் செய்தார். கருடனின் தவத்தை மெச்சி அவருக்கு நரஸிம்மராகக் காட்சியளிக்க திருவுளம் கொண்டார் பரந்தாமன்.                       சத்திய சொரூபமாக, மகாபுருஷராக, நெருப்பின் உக்கிரத்தோடு நரஸிம்மர் அம்மலைத் தொடரில் ஓர் உயரமான குகையில் அவருக்குக் காட்சியளித்தார்.                                நவ நரஸிம்ம ஆலயம் இந்தியாவில், ஆந்திராவின் "நந்தியால்" என்ற இடத்திற்கு அருகில் அஹோபிலத்தில் அமைந்துள்ளது. நரஸிம்மரைக் குறிக்கும், வணங்கப்பட்ட வைணவ ஆலயங்கள...
Kartal Course (Tamil)

Kartal Course (Tamil)

Kartal Course (Tamil), Most Viewed, Uncategorized
கர்தால் வகுப்புகர்தால் வகுப்பு (அடிப்படை)இந்த வகுப்பு Bhakti Yogam வளையதலத்தில் அல்லது Bhakti Yogam app மூலம் எளிதில் கற்றுக் கொள்ளலாம், கீழே உள்ள பாடத்திட்டங்கள் Video வாக பார்க்கலாம், உங்களுக்கு சந்தேகம் இருந்தால் "Doubts/சந்தேகம்" என்ற Button கிளிக் செய்வதன் மூலம், எங்கள் குழுவின் நபர்மூலம் தீர்க்கப்படும். வாரம் ஒரு முறை Google Meet மூலம் உங்கள் சந்தேகங்களை Live வகுப்பில் கேட்டுக் கொள்ளலாம். ( What's app , Telegram Group link கீழே உள்ளது)வயது / Age : வயது வரம்பு இல்லை / No age Limitகட்டணம் / Fee : உங்கள் ஆர்வமே / Your interest is the fee** கிருஷ்ணர் பக்தி பற்றி அறிந்திருக்க வேண்டும் / Should know basic of Krishna Consciousnessகர்தால்:சங்கு, மணி, கரதாளம் இவைகளின் ஓசையுடன், மிருதங்கம் மிக இனிமையாக வாசிக்...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.