Friday, April 19

கர்ம யோகம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கர்மம் புரிந்து கொள்வதற்கு கடினமானது ?

பகவத்கீதையின் 4.16 இல் கூறுவது போல், “அறிவுடையோரும் செய்யத்தக்கது எது ?, செய்யத்தகாதது எது ?. செய்யத்தக்கது எது ? என்று முடிவு செய்வதில் குழம்புகின்றனர்” என்றும்.

    ப.கீ 4.17 இல், ” செயலைப் புரிந்து கொள்வது கடினமானது. செய்யத்தக்கது என்பது என்ன ? செய்யத்தகாதது என்பது என்ன ? செயலின்மை என்பது என்ன ? என்பதை ஒருவர் செளிவாக அறிய வேண்டும்” என்றும் கூறுவது, கர்மயோகம். அதாவது செயல்களை யோகமாக செய்வது, மிக மிகக் கடினமானது என்பதை உணர்த்துகிறது.

.

கர்மயோகத்தை விட ஜப யோகம் உயர்வானதா ?

 

ஆம். நிஷ்காம கர்மா, அதாவது கடமைகளை செய்து பலங்களை பகவானுக்கு அர்ப்பணிப்பதானது, ஸகாம கர்மா, அதாவது உலக ஆசைகள் அற்ற செயல்களை விட உயர்வானது.

    ஆயினும், நிஷ்காம கர்மாவில், செயல்களின் பலங்களே பகவானுக்கு அர்ப்பணிக்கப்படுவதால், அது மறைமுகமான பக்தியோகமாகும். ஆனால் பகவான் நாமம் கூறும் பக்தி யோகத்தில், நேரடியாக பகவானுக்காகச் செயல்கள் அர்ப்பணிக்கப் படுவதால், இது கர்ம யோகத்தை விட உயர்வானதாகும்.

+2
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question