A quick fall by unwanted thinking (Tamil) / வேண்டாத சிந்தனையால் வரும் விரைவான வீழ்ச்சி
ஒரு விஷயத்தை சிந்திப்பதால் அதில் பற்று உண்டாகிறது. அப்பற்றினால் அதை அனுபவிக்கும் ஆசை உண்டாகிறது. அவ்வாசை நிறைவேறாத போது கோபம் உண்டாகிறது. கோபத்தால், மதிமயக்கம் ஏற்படுகிறது. மதிமயக்கத்தால் நினைவு நிலை இழப்பும் உருவாகிறது. இதனால் புத்தி நாசமாக, புத்திநாசத்தால் ஒருவன் முற்றிலும் வீழ்ச்சி அடைகிறான்.- பகவத்கீதை (2.62-63)த்யாயதோ விஷயான் பும்ஸ: ஸங்கஸ் தேஷூபஜாயதே ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ (அ) பிஜாயதே ரோதாத் பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி-விப்ரம: ஸ்ம்ருதி - ப்ரம்ஷாத் புத்தி-நாஷோ புத்தி-நாஷாத் ப்ரணஷ்யதிஆதாரம்: மஹாபாரதம்ஒருநாள் பஞ்சபாண்டவர்கள், வனவாசத்தின்போது காம்யக வனத்தில் ஆஸ்ர மத்தில் திரௌபதியை தனியாக விட்டு விட்டு உணவு தேடி காட்டிற்குள் சென்றனர். அந்த சமயம், சிந்து தேச மன்னனின் மகனான ஜெயத்ரதன், சால்வ மன்னனின் மகளை மணமுடிப்பதற்காக, நன்கு உடை உடுத்தி அந்த காம்யக வனத...