
Utthana ekadhasi (Tamil) / உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசி
ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி ஸ்கந்த புராணத்தில் பிரம்மாவிற்கும் நாரத முனிவருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை நாரத முனிவரிடம் பிரம்மா கூறினார். ஓ! முனிவர்களில் சிறந்தோனே! ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அழித்து புண்ணியத்தை அதிகரித்து முத்தியை அளிக்கக்கூடிய உத்தான ஏகாதசியை பற்றி கூறுகிறேன், கேள். ஓ! அந்தணர்களில் சிறந்தோனே! கார்த்திகை மாத (அக்டோபர் / நவம்பர்) வளர்பிறையில் தோன்றக்கூடிய உத்தான ஏகாதசி இந்த உலகில் தோன்றாத வரை கங்கையின் மேன்மை மாறாமல் நிலையாக இருந்தது. மேலும் உத்தான ஏகாதசி தோன்றாதவரை கடல் மற்றும் குளங்களின் புண்ணியத்தின் செல்வாக்கு ஈடு இணையற்று இருந்தது. இதன் பொருள் என்ன வெனில் இந்த உத்தான ஏகாதசி. கங்கையின் மேன்மைக்கும் குளங்களின் புண்ணியத்திற்கும் ஈடானது, இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது. ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் ச...