Saturday, July 27

Panihati Chida-Dahi Festival (Tamil) / பானிஹட்டி சீடா தஹி உற்சவம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் ரகுநாத தாஸ கோஸ்வாமியும் சந்தித்தல்

                இந்த அத்தியாயத்தின் சுருக்கம் பக்தி வினோத தாகூரால் தமது அம்ரித-ப்ராவாஹ-பாஷ்ய உரையில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பிரேமையின் தெய்வீக வலிப்பினுள் நுழைந்தபோது , இராமானந்த ராயரும் ஸ்வரூப தாமோதாரும் அவரை கவனித்துக் கொண்டனர் . அவர் விரும்பியபடி திருப்திப்படுத்தினர் . ரகுநாத தாஸ் கோஸ்வாமி நீண்ட காலமாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தாமரைத் தமது திருவடிகளை அடைவதற்கு முயன்று கொண்டிருந்தார் . இறுதியாக , அவர் இல்லத்தை விட்டு விலகி மஹாபிரபுவைச் சந்திக்க வந்தார் . ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குப் போகும் வழியில் சாந்திபுரத்திற்குச் சென்றிருந்தபோது , ரகுநாத தாஸ கோஸ்வாமி தமது வாழ்வினை மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளில் அர்ப்பணித்திருந்தார் . இருப்பினும் , இதற்கிடையில் , ஒரு முஸ்லிம் அலுவலர் ரகுநாத தாஸ கோஸ்வாமியின் பெரியப்பாவான ஹிரண்ய தாஸரின் மீது பொறாமை கொண்டு , அவரைக் கைது செய்யும்படி ஒரு பெரிய அமைச்சரைத் தூண்டினான் . அதனால் , ஹிரண்ய தாஸர் தமது இல்லத்திலிருந்து தலைமறைவாக இருந்தார் . ஆனால் ரகுநாத தாஸரின் நுட்பமான அறிவினால் அந்தத் தவறான புரிந்துணர்வு அகற்றப்பட்டது . அதன் பின்னர் , ரகுநாத தாஸர் பானிஹாட்டிக்குச் சென்று , நித்யானந்த பிரபுவின் கட்டளைகளைப் பின்பற்றி , தயிருடன் கலந்த அவலை விநியோகம் செய்து ஒரு திருவிழாவினை ( சிடா -தஹி , மஹோத்ஸவ ) அனுசரித்தார் . திருவிழாவிற்கு மறுநாள் , ரகுநாத தாஸர் விரைவில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் புகலிடத்தினை அடைவார் என்று நித்யானந்த பிரபு அவருக்கு ஆசி வழங்கினார் . இந்த சம்பவத்திற்குப் பின்னர் , ரகுநாத தாஸர் தமது புரோகிதரான யதுநந்தன ஆச்சாரியரின் உதவியுடன் தந்திரமாக வீட்டிலிருந்து வெளியேறி ஓடினார் . வழக்கமான பாதையினை அணுகாமல் , ரகுநாத தாஸ் கோஸ்வாமி இரகசியமாக ஜகந்நாத புரிக்குச் சென்றார் . பன்னிரண்டு நாள் பயணத்திற்குப் பின்னர் அவர் ஜகந்நாத புரியில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளை அடைந்தார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ரகுநாத தாஸ் கோஸ்வாமியை ஸ்வரூப தாமோதா கோஸ்வாமி கோஸ்வாமியின் பொறுப்பில் ஒப்படைத்தார் . இதனால் , ரகுநாத நாத கோஸ்வாமியின் மற்றொரு பெயர் ஸ்வரூபேர ராகு ( ஸ்வரூப தாமோதாரின் ரகுநாதம் ) என்பதாகும் . ஐந்து நாள்கள் ரகுநாத தாஸ கோயிலில் பிரசாதம் எடுத்துக் கொண்டார் . ஆனால் , அதன் பின்னர் , அவர் சிம்ம துவாரத்தில் நின்று யாசகம் செய்து கிடைப்பதை மட்டும் உண்டு வந்தார் . அதன் பின்னர் , அவர் வெவ்வேறு உணவு விநியோகிக்கும் தர்ம சத்திரங்களில் யாசித்து வாழ்ந்து வந்தார் . இந்தச் செய்தி ரகுநாதரின் தந்தையை அடைந்தபோது , அவர் ஆட்கள் சிலரை பணத்துடன் அனுப்பி வைத்தார் . ஆனால் ரகுநாத தாஸ் கோஸ்வாமி பணத்தினை ஏற்க மறுத்தார் . ரகுநாத தாஸ கோஸ்வாமி சத்திரத்தில் யாசகம் செய்து வாழ்ந்து வருகிறார் என்பதைப் புரிந்துகொண்ட ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தம்முடைய குஞ்ஜா மாலையையும் கோவர்தன மலையிலிருந்து எடுத்து வரப்பட்ட கல்லினையும் அவருக்குப் பரிசளித்தார் . அதன் பின்னர் , ரகுநாத தாஸ கோஸ்வாமி புறக்கணிக்கப்பட்ட உணவினைச் சேகரித்து , அதனைக் கழுவி உண்டு வந்தார் . இத்தகைய துறவற வாழ்வினால் ஸ்வரூப தாமோதர கோஸ்வாமி , ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஆகிய இருவரும் அவர்மீது மிகவும் திருப்தியடைந்தனர் . ஒருநாள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பலவந்தமாக அந்த உணவில் சிறிதளவு எடுத்து உண்டதன் மூலமாக ரகுநாத தாஸ கோஸ்வாமியின் துறவறத்திற்கு ஆசி வழங்கினார்.

– ஸ்ரீ சைதன்ய சரிதாமிருதம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question