Tuesday, April 23

அஷ்டாங்க யோகம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

அஷ்டாங்க யோகம், என்றால் என்ன ?

அஷ்டஅங்கங்கள் அல்லது எட்டு படிகளைக் கொண்ட யோகம் அஷ்டாங்க யோகம் ஆகும். யோகி ஒவ்வொன்றாக கடக்க வேண்டிய அந்த எட்டு படிகள்

1. யம் 2. நியம 3. ஆசன 4. பிராணாயாம 5.பிரத்யாஹார 6. தாரண 7. தியான 8. சமாதி

        முதல்படியான “யம” என்பது “சமுதாய பொது ஒழுங்கு” ஆகும். இந்த அங்கம், அஹிம்சை, சத்யம், அஷ்டேயா (திருடாமை), பிரம்மச்சயம், அபரிகிரஹா (ஸொந்தம் கொண்டாடாமை) என்ற ஐந்து ஒழுங்குகளைக் கொண்டது.

          இரண்டாவது படியான “நியம”  என்பது “தனி மனித ஒழுங்கு” ஆகும். இந்த அங்கம் செளசம் (தூய்மை), சந்தோஷம் (திருப்தி), தவம், ஸ்வாத்யாய (கல்வி), ஈஸ்வர ப்ரணிதானா (பகவானிடம் சரணடைதல்) என்ற ஐந்து ஒழுங்குகளைக் கொண்டது.

        மூன்றாவது படியான, “ஆசன” என்பது “அமரும் நிலை” ஆகும். அதாவது, யோகியானவன் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும் வண்ணம், உடலை குறிப்பிட்ட நிலையில் இருக்க பயிற்சி செய்வதாகும்.

        நாங்காவது படியான, “பிராணாயாம” என்பது “சுவாச ஒழுங்கு முறைகள்” ஆகும். அதாவது முறையான சுவாசப் பயிற்சியால் ஆன்மீக சாதனைக்கு அதிமுக்கியமான, பிராணா உயிர்ச் சக்தியை உருவாக்குவதாகும்.

        ஐந்தாவது படியான, “பிரத்யாஹார” என்பது “புலன்களை புலன் நோக்குப் பொருட்களில் இருந்து விலக்குதல்” ஆகும். அதாவது, புலங்களை, புலன் விஷயங்களில் இருந்து விலக்கி, யோகியானவன் ஆன்மீக சக்தி சிதறீ விடாமல் காக்கிறான்.

        ஆறாவது படியான, “தாரண” என்பது “ஆழ்ந்த சிந்தனை” ஆகும். அதாவது யோகியானவன் அடைய வேண்டிய ஆன்மீக குறிக்கோளைப் பற்றிய சிந்தனையில் ஆழ்வதாகும்.

        ஏழாவது படியான, “தியானம்” என்பது “முற்றிலும் ஆழ்ந்த சிந்தனை” ஆகும். அதாவது யோகியானவன் வேறு எந்த சிந்தனையும் இன்றி அடைய வேண்டிய குறிக்கோளில் முற்றிலும் ஆழ்ந்து போகும் நிலையாகும்.

        எட்டாவது படியான “சமாதி” என்பது “அஷ்டாங்க யோகத்தின் இறுதி நிலை” ஆகும். அதாவது யோகி, அஷ்டாங்க யோகத்தின் குறிக்கோளை அடைதலாகும்.

அஷ்டாங்க யோகத்தின் சிரமங்கள் யாவை ?

 அஷ்டாங்க யோகம் என்பது படிப்படியாக பயிற்சி செய்து கடக்க வேண்டிய எட்டு நிலைகளை கொண்டது. ஒவ்வொரு படியும் கடப்பதற்கு மிகச் சிரமமானதாகும்.

            முதல் படியில் பயிற்சி செய்ய வேண்டிய ஐந்தில், பிரம்மச்சர்யம் ஒன்றே போதும், மிக மிகக் கடின மானது. யக்ஞவால்க்ய ஸ்ம்ருதி எனும் நூல் , “செயலால், மனதால், சொல்லால் எந்நிலையிலும், எந்நேரத்திலும், எவ்விடத்திலும் காமத்தில் இருந்து முற்றிலும் விலகி இருக்கும் உறுதியே பிரம்மச்சர்யம ஆகும்” என்று குறிப்பிடிகிறது. இத்தகைய பிரம்மச்சர்யத்தை நடைமுறையில் கொண்டு வருவது எவ்வளவு கடினமானது என்பது எல்லோருக்கும் புரியும்.

            இரண்டாவது படிக்கு ஒருவர் செல்ல, முதல் படியின் ஐந்து ஒழுங்குகளிலும் பூரணம் அடைந்த பின்னரே செல்ல வேண்டும். இரண்டாவது படியிலும் பயிற்சி செய்ய வேண்டிய ஐந்து ஒழுங்குகள் நடைமுறைப் படுத்த மிக மிக சிரமமானவை.

        “செளசம்” அல்லது தூய்மை என்பது உடல், உள்ளம், வார்த்தை அனைத்திலும் தூய்மையாக இருப்பதைக் குறிக்கும்,

        “தவம்” என்பது உடல், உள்ளம், வார்த்தை மூன்றிற்கும் பொருந்தும், பகவத்கீதை 17.14-16ல் கூறுவது போல், “பகவான், இரு பிறப்பாளர், குரு, மற்றும் வழிபடத் தகுந்தவர்களை பூஜித்தல், தூய்மை, எளிமை, பிரம்மச்சர்யம், அஹிம்சை இவை உடலின் தவங்களாகும்”. “கிளர்ச்சி செய்யாத வாக்கியம், சத்தியமான, பிரியமான, நன்மை பயக்கும் சேச்சு வேதக் கல்வி பயிற்சி இவை வாக்கின் தவங்களாகும்”.” மனத் திருப்தி, வஞ்சனை இல்லாமை, மெளனம், சுயக்கட்டுப்பாடு, தன் இருப்பின் தூய்மை, இவை மனதின் தவங்களாகும்”.

            ஈஸ்வர ப்ரணிதானா’ அல்லது பகவானிடம் சரணடைதல் என்பது பகவத்கீதை 18.66 கூறுவது போல், “ஸ்ர்வ தர்மாங்களை விடுதல்”, மேலும் “அவரை மட்டுமே சரணடைதல்” இவ்விரண்டும் அவ்வளவு எளிதானதல்ல.

            மூன்றாவது படியான, ‘ஆசன’ என்ற நிலைக்கு முதலிரண்டு படிகளின் பத்து ஒழுங்குகளிலும் பரிபூரணம் அடைந்தவரே செல்ல வேண்டும். இந்த படி நிலையும் கடினமானதே. பகவத்கீதை 6.11-12ல், “தூய்மையான இடத்தில் நிலையாகவும், அதிஉயரமும், தாழ்வும் இல்லாமலும், மெல்லிய துணி மற்றும் மான் தோலால் மூடப்பட்டும், தர்பைப் புல் பரப்பியும், அமைக்கப்பட்ட ஆசனத்தில் மனம், புலன், செயல்களை அடக்கி ஒருமுக மததோடு ஆத்ம சுத்திக்காக யோகியானவன் யோகம் பயில வேண்டும்” என்று கூறுவது இம்மூன்று படியும் எவ்வளவு கடினமானது என்பதை புரிய வைக்கும்,

            நான்காவது படியான பிராணாயாமா என்ற நிலைக்கு முதல் மூன்று படிகளிலும் பரிபக்குவம் அடைந்த ஒருவரே செல்ல வேண்டும். சுவாசப் பயிற்சியை ஒழுங்கு படுத்த விரும்பும் ஒருவர் நேரடியாகப் பிரணாயாம பயிற்சிக்கு வர இயலாது. வந்தாலும் சிதறிய மனமும், பலமற்ற உடலும் அப்பயிற்சியை பலனற்றதாகச் செய்து விடும்.

        ஐந்தாவது படியான “பிரத்யாஹார”வில், முதல் நாங்கு படிகளில் வெற்றி  பெற்ற நுழைய முடியும். புலன் நுகர்விலிருந்து விடுபட விரும்பும் ஒருவர், கட்டாயப்படுத்தியோ அல்லது செயற்கையாகவோ அச்சுவையிலிருந்து விடுபட இயலாது. எவ்வளவு முயற்சி செய்தாலும் அதற்கான சுவை மனதில் இருப்பதால் மீண்டும் அச்சுவைக்கு பலியாவார்.

        ஆறாவது படியான, “தாரணா” வில் நொடிக்கு ஆயிரக்கணக்கான எண்ணங்கள் அலைபாயும் மனம் உடைய ஒருவரால், எப்படி ஒரே விஷயத்தில் சிந்தனையைச் செலுத்த முடியும்.

            ஆறாவது படியான, “தாரண” அல்லது ஒரே விஷயத்தில் சிந்தனையைச் செலுத்த இயலாத ஒருவர் ஏழாவதுபடியான “தியானம்” அல்லது ‘முற்றிலும் தொடர்ந்த சிந்தனையை ஒரே விஷயத்தில் செலுத்துதல்’. எவ்வாறு இயலும் ?

        இந்த ஏழு இயலாத படிகளையும் தாண்டிய ஒருவரே, அஷ்டாங்க யோகத்தின் எட்டாவது படியும் இறுதி இலக்குமான ‘சமாதி’ அல்லது நிரந்தரமாக ஒரு விஷயத்தில் லயிக்க முடியும்.

அஷ்டாங்க யோகத்திற்கு தகுதியான குரு தேவை :

அஷ்டாங்க யோகம், அதிகாரப் பூர்வமான, பக்குவம் அடைந்த குருவின் வழிகாட்டலின் கீழ் செய்யப்பட வேண்டும், அஷ்டாங்க யோகப் பயிற்சியில் தவறு இருந்தால், மன நோய்கள் உண்டாகும். மனமும், உடலும் நாசமாகும்.

அஷ்டாங்க யோகம் அர்ஜூனனாலும் முடியாத யோகம்:-

    சுமார் 5000 வருடங்களுக்கு முன்பே, சூழ்நிலைகள் அஷ்டாங்க யோகத்திற்கு சாதகமாக இருந்த போதே பெரும் வீரரான அர்ஜூனன் கிருஷ்ணரிடம், “கிருஷ்ணா ! மனம் அமைதியற்றதும், குழப்பம் நிறைந்ததும், அடங்காததும், சக்தி வாய்ந்ததும் ஆயிற்றே. வீசும் காற்றை, அடக்குவதை விட, மனதை அடக்குவது கடினமாகவே எனக்கு தோன்றுகிறது, நீங்கள இப்போது கூறிய யோகமுறை (அஷ்டாங்க யோகம்) நடைமுறைக்கு ஒத்து வராததாகவும், தாங்க முடியாததாகவும் தோன்றுகிறது” என்று பகவத்கீதை 6.33-34லில் கூறுகிறார்.

                இது அஷ்டாங்க யோக முறை எவ்வளவு சிரமமானது என்பதைப் புரிய வைக்கிறது.

+3
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question