Tuesday, July 8

ஆன்மீகப் பதிவு

அயோத்தியா

அயோத்தியா

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீ இராமச்சந்திர பகவான்
அயோத்தியா- பகவான் இராமசந்திரரின் திருத்தலம்அழகான சரயு நதிக்கரை, 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று, ஸ்ரீ இராமர் பிறந்த புண்ணிய பூமி. அவர் சுமார் 12,000 ஆண்டுகள் ஆட்சி செய்த ஸ்தலம், சமீப கால இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய இடம் என பல்வேறு அடைமொழிகளைக் கொண்டு, உத்திர பிரதேச மாநிலத்தின் பைசாபாத் நகரிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அயோத்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்ற எமது நீண்டநாள் விருப்பம் சமீபத்தில் நிறைவேறியது.இராம ஜென்ம பூமிஅயோத்தியாவிற்குச் செல்பவர்கள் அனைவரும் தவறாமல் பார்க்கக்கூடிய இடம், இராம ஜென்ம பூமி. பகவான் ஸ்ரீ இராமர் தனது லீலைகளை அரங்கேற்றுவதற்காக இவ்வுலகில் அவதரித்த இடம், தற்போது இராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படுகிறது. அந்த சிறப்பு வாய்ந்த இடத்தைக் காண்பதற்காக நாங்களும் சென்றோம். சமீப காலத்தின் பல்வேறு சர்ச்சைகளின் காரணமாக, இராம ஜென்ம பூமி தற்போது ...
பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

ஆன்மீகப் பதிவு, Festivals-Tamil, திருவிழாக்கள்
கிருஷ்ணருக்கும் பக்தனுக்கும் இடையில் நிகழும் அன்புப் பரிமாற்றங்கள் மிகவும் இனிமையானவை. பகவானின் சொல்லை பக்தன் தட்ட மாட்டான் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். ஆனால் பக்தனின் சொல்லையும் பகவான் தட்ட மாட்டார் என்பதை நீங்கள் அறிவீர்களா?அன்னை யசோதையால் உரலில் கட்டிப்போடப்பட்ட கிருஷ்ணர் அந்த உரலுடன் நகர்ந்து இரண்டு மரங்களை வீழ்த்தி குபேரனின் இரண்டு மகன்களை விடுவித்தார். இந்த லீலையில் கிருஷ்ணர் எவ்வாறு தனது அன்பிற்குரிய பக்தரான நாரதரின் வார்த்தைகளை நிரூபித்தார் என்பதை சற்று காணலாம்.கிருஷ்ணர் செய்த குறும்புச் செயல்"அம்மா பசிக்குது," என்றபடி கிருஷ்ணர் தயிர்கடைந்து கொண்டிருந்த அன்னை யசோதையின் முந்தானையைப் பிடித்து அன்புடன் இழுக்கின்றார். குழந்தையைத் தடுக்க முடியாமல் அவனை எடுத்து மடியில் கிடத்தி அந்த அழகிய திருமுகத்தை ரசித்தபடி யசோதை பால் கொடுக்கத் தொடங்கினாள். கிருஷ்ணரும் அன்னையின் அன்பில...
கம்யூனிச ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி எவ்வாறு பரவியது? / Krishna Consciousness in Russia

கம்யூனிச ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி எவ்வாறு பரவியது? / Krishna Consciousness in Russia

ஆன்மீகப் பதிவு
ஹரே கிருஷ்ண இயக்கம் என்று பரவலாக அறியப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) மிகவும் குறுகிய காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். தற்போது இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் கிருஷ்ண பக்தர்கள் வாழும் நாடாக ரஷ்யா திகழ்கிறது. ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போரினால் உலக நாடுகளெல்லாம் அச்சம்கொள்ளும் அளவிற்கு ரஷ்யா வலிமையாக இருந்த காலகட்டத்தில், கடவுள் மறுப்புக் கொள்கை வேரூன்றியிருந்த கம்யூனிச நாடான ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி விதைக்கப்பட்டு வளர்ந்த விதம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கக்கூடியதாகும். இத்தகு அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது? அறிந்துகொள்ளலாம் வாருங்கள்!ஸ்ரீல பிரபுபாதரின் ரஷ்ய விஜயம்அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) 1966ஆம் ஆண்டு தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதரால் அமெரிக்காவில் ஸ்த...
நம்பிக்கை / Faith (Tamil)

நம்பிக்கை / Faith (Tamil)

ஆன்மீகப் பதிவு
நம்பிக்கைஆன்மீக வாழ்வின் அஸ்திவாரம்நம்பிக்கை ஆன்மீக முன்னேற்றத்தின் அஸ்திவாரம். நம்பிக்கையுடன் இருப்பது நமது இயற்கையாகும். ஆனால் அந்த நம்பிக்கை எப்படி பட்டதாக இருக்க வேண்டும்?பொதுவாக நம்பிக்கையில் பல வகைகள் இருக்கின்றன. இருப்பினும் நம்பிக்கையை குறிப்பாக இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று ஆன்மீக நம்பிக்கை, மற்றொன்று பௌதிக நம்பிக்கை.ஆன்மீக நம்பிக்கைஸ்ரீலரூப கோஸ்வாமி அவர்கள் இந்த ஆன்மீக நம்பிக்கையை 'ஆஷா பந்த' என்று குறிப்பிடுகிறார். ஆன்மீக நம்பிக்கை இருக்கக் கூடிய ஒரு பக்தர், “நான் என்னால் முடிந்தவரை பக்தி நெறிகளை கடைபிடித்து வருகின்றேன். ஆகவே எப்படியாவது என்றைக்காவது நான் பகவானின் கருணையை பெறுவேன். கண்டிப்பாக என்னால் பகவானிடம் திரும்பிச் செல்ல முடியும். எனக்கு எந்த விதமான தகுதியும், ஞானமும், பகவானின் மேல் அன்பும் இல்லை என்றாலும், நான் பகவானிடம் செல்ல விரும்புகின்றேன். அதற்க...
பரம ஏகாதசி / Parama Ekadashi (Tamil)

பரம ஏகாதசி / Parama Ekadashi (Tamil)

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
தற்போது வரக்கூடிய ஏகாதசி, 32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் #பரம ஏகாதசி ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த வருடம் 'அதிக' மாதம் வந்துள்ளது.யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார். "பரம்பொருளே, மதுஸூதனா! 'அதிக' மாதத்தில், கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம். பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள்" என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "ஓ யுதிஷ்டிரா,...
Improve in Bhakti step by step (Tamil) / படிப்படியாகப் பக்தியில் முன்னேறுதல்

Improve in Bhakti step by step (Tamil) / படிப்படியாகப் பக்தியில் முன்னேறுதல்

கதைகள், ஆன்மீகப் பதிவு
மனிதனாக பிறவி எடுத்த அனைவருக்குமே ஐடம் புலன் இன்பத்தில் கூடநாட்டம் உண்டு. புலனின்பத்தை முற்றிலுமாகத் தவிர்த்து, கிருஷ்ண பக்தியை நேரடியாகவோ அல்லது முழு மையாகவோ ஏற்றுக் கொண்டு பயிற்சி செய்வது என்பது எல்லோருக்கும் இயலாத ஒரு காரியம்.ஜடப் புலனின்பத்தை விரும்பித் தான் அனை வரும் இவ்வுலகில் செயல்படுகின்றனர். புலன் இன்பத்தை விரும்பும் இவர்கள், முழு கிருஷ்ண பக்தியில் ஈடுபட இயலாமல் போகலாம். ஆனால், தங்களுடையப் புலனின்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேதங்களால் ஒழுங்குபடுத்தப் பட்ட வகையில், வேதங்கள் பயிலல், யாகங்கள், தவங் கள், தான தர்மங்கள் செய்தல் ஆகியவற்றைப் பக்தி யுடன் செய்யலாம்.இவ்வாறு செய்வதால் படிப்படியாகக் கிருஷ்ண உணர்வில் அவர்கள் முன்னேற வாய்ப்பு உண்டு. சிறிதளவாகிலும் இவ்வாறு கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொண்டுள்ள ஒருவனை, நேரடியாகக் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தி விடலாம்.ஆகையால், கிருஷ்ண உணர்...
A biography of Lord Krishna (Tamil) / கிருஷ்ணரின் வாழ்க்கைக் குறிப்பு

A biography of Lord Krishna (Tamil) / கிருஷ்ணரின் வாழ்க்கைக் குறிப்பு

ஸ்ரீ கிருஷ்ணர், ஆன்மீகப் பதிவு
மாதவன் அவதரித்த மதுராபிறப்பற்ற இறைவன் இவ்வுலகிற்கு இறங்கி வரும்போது, அவதாரம் என்று அறியப்படுகிறார். ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திலிருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (மாதவன்) தனது பக்தர்களைக் காப்பதற்காகவும் துஷ்டர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு இப்பூவுலகில் தற்போதைய டில்லி நகரத்திலிருந்து 150 கிமீ தெற்கிலுள்ள மதுரா நகரில் தோன்றினார். இதனால் மதுரா நகரம் மிகவுயர்ந்த புண்ணிய பூமியாகும்.கி.மு. 3228, ஜூலை 19ம் நாள், ஸ்ரவன மாத தேய்பிறையின் அஷ்டமி திதியின் நள்ளிரவில், மதுராவின் சிறைச்சாலையில் கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்தார், அன்றிரவே கோகுலம் சென்றடைந்தார்.3 வருடம், 4 மாதங்கள் வரை கோகுலத்தில் வசித்த பின், விருந்தாவனம் சென்றார். மேலும் 3 வருடம் 4 மாதங்களை விருந்தாவனத்தில் கழித்த பின், 6 வருடம் 8 மாத வயதில், நந்தகிராமத்...
Tulasi Mahima – Glories of Tulasi (Tamil) / துளசி மஹிமா

Tulasi Mahima – Glories of Tulasi (Tamil) / துளசி மஹிமா

Most Viewed, ஆன்மீகப் பதிவு
துளசி பாடல்கள்துளசி வழிபாடு என்பது தொன்று தொட்டு செய்யப்பட்டு வரும் வழிபாடுகளுல் ஒன்று. லக்ஷக்கணக்கான மரம், செடி, கொடிகள் இருக்கை யில் துளசிக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு?கல்வியறிவு இல்லாத பிராமணர் கண்ட துளசி வனம்நீண்ட காலத்திற்கு முன்பு, கல்வியறிவு இல்லாத பிராமணர் ஒருவர் விவசாயத் தொழில் புரிந்து வந்தார். அவர் எந்த வித மதச் சடங்குகளையும் செய்ததில்லை. வாட்ட, சாட்டமான அவர் ஒரு முறை, விற்பனை செய்வதற்காக புல் சேகரிக்க கயிறு ஒன்றுடன் காட்டிற்குச் சென்றார். போது மான அளவு புல் சேகரித்து இருந்தாலும், இன்னும் அதிகப் புல்லைத் தேடி காட்டினுள் அழைந்தார் அவர்.அப்போது அழகிய துளசி வனம் ஒன்றை அவர் கண்டார். பச்சை மரகதம் போல் அது ஒளிர் விட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியே அவருக்கு தூய்மையை அளித்து, மனதில் ஆனந்தத்தை அளித் தது. "இந்தச் செடி பசுக்களுக்கும், மனிதர்களுக் கும் உணவாகுமானால், ந...
Understanding Bhagavad Gita (Tamil) / பகவத் கீதையைப் புரிந்துகொள்ளுதல்

Understanding Bhagavad Gita (Tamil) / பகவத் கீதையைப் புரிந்துகொள்ளுதல்

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
12 செப்டம்பர் 1973ல், லண்டன் நகரில், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் சில பத்திரிகை நிருபர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி.நிருபர்: பகவத் கீதையில் போதிக்கப்படும் மையக் கருத்து என்ன?ஸ்ரீல பிரபுபாதர்: பகவானைப் புரிந்து கொள்வதே மையக் கருத்தாகும். மக்கள் மூடர்களாகி விட்டார்கள். அவர்கள் பகவானைப் பற்றி தெரிந்து கொள்வதையும். தான் யார் என்பதை தெரிந்துகொள்வதையும் மறந்துவிட்டனர். ஒவ்வொருவரும் "நான் இந்த உடல்" என்று தவறாக எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஆன்மீக ஆத்மாக்கள். ஆத்மாவை அறிவதற்கான கல்வியறிவு அவர்களிடம் இல்லை. அனைவரும் அறியாமையில் உள்ளனர். மிகப்பெரிய பேராசிரியர்கள்கூட அறியாமையில் உள்ளனர். இந்த உடல் முடிந்த பிறகு, எல்லாமே முடிந்து விடும்" என்று ரஷ்யாவின் பேராசிரியர் கோட்டாவ்ஸ்கி என்னிடம் கூறினார். ஆனால் அஃது உண்மை அல்ல.நிருபர்: ஸ்ரீ கிருஷ்ணர...
Gita Saaram (Tamil) / கீதாசாரம்

Gita Saaram (Tamil) / கீதாசாரம்

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
வழங்கியவர்: தெய்வத்திரு. அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியர்தெய்வீக ஞானத்தை அங்கீகரிக்கப்பட்ட சீடப் பரம்பரையின் மூலம் பெறாமல், அனுபவ அறிவை அடிப்படையாகக் கொண்ட விவாதங்களால் கவரப்பட்டு, வழிதவறிச் செல்லும் நபர்களுக்காக பகவத் கீதையின் முக்கிய கருத்துக்களை இங்கு சுருக்கமாக கீதாசாரம் என்னும் தலைப்பில் தொகுத்துள்ளோம். (1940களில் வைராக்ய வித்யா எனும் தலைப்பில் ஸ்ரீல பிரபுபாதரால் வங்காள மொழியில் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளில் ஒன்று)பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பரம் பொருள். அவரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள். அவரே எல்லா காரணங்களுக்கும் காரணம் "யாரிட மிருந்து இவ்வுலகம் தோன்றியதோ, யாரால் இவ்வுலகம் தோற்றுவிக்கப் பட்டதோ, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் யார் கட்டுப் படுத்துகின்றாரோ, அவரே கடவுள்" என்று கடவுளைப் பற்றி வேதாந்த சூத்திரம...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.