Saturday, July 27

Tulasi Mahima – Glories of Tulasi (Tamil) / துளசி மஹிமா

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

துளசி வழிபாடு என்பது தொன்று தொட்டு செய்யப்பட்டு வரும் வழிபாடுகளுல் ஒன்று. லக்ஷக்கணக்கான மரம், செடி, கொடிகள் இருக்கை யில் துளசிக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு?

கல்வியறிவு இல்லாத பிராமணர் கண்ட துளசி வனம்

நீண்ட காலத்திற்கு முன்பு, கல்வியறிவு இல்லாத பிராமணர் ஒருவர் விவசாயத் தொழில் புரிந்து வந்தார். அவர் எந்த வித மதச் சடங்குகளையும் செய்ததில்லை. வாட்ட, சாட்டமான அவர் ஒரு முறை, விற்பனை செய்வதற்காக புல் சேகரிக்க கயிறு ஒன்றுடன் காட்டிற்குச் சென்றார். போது மான அளவு புல் சேகரித்து இருந்தாலும், இன்னும் அதிகப் புல்லைத் தேடி காட்டினுள் அழைந்தார் அவர்.

அப்போது அழகிய துளசி வனம் ஒன்றை அவர் கண்டார். பச்சை மரகதம் போல் அது ஒளிர் விட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியே அவருக்கு தூய்மையை அளித்து, மனதில் ஆனந்தத்தை அளித் தது. “இந்தச் செடி பசுக்களுக்கும், மனிதர்களுக் கும் உணவாகுமானால், நிறைய அளவு இதைச் சேகரிப்பேன். பரிசோதனையாக, இன்று சிறிய அளவு இதை சேகரித்துச் சென்று, பக்கத்தில் உள்ளவர்களிடம் விற்பனை செய்து பார்க்கிறேன்” என்று அவர் எண்ணினார்.

வாழ்வின் இறுதி நேரத்தில் அந்தப் பிராமணர்

அந்த நேரத்தில் அவர் வாழ்வின் முடிவு நெருங்கியது அவரால் பார்க்க இயலாத வகையில் யமதூதர்கள் அவரை அணுகினார்கள். கொடிய விஷம் உள்ள நல்ல பாம்பு ஒன்றிடம், “உன்னுடைய விஷக்கடியால், நீ அந்த மனிதருக்கு மரணத்தை உண்டாக்குவாயாக. பிறப்பினால் மட்டுமே பிராமணரான இவர் எந்தவொரு பிராம ணருக்கான சடங்குகளையும் செய்ததில்லை. ஆகையால், இத்தகைய அமங்கலமான மரணத்தை அவர் அடைய வேண்டியுள்ளது. புனிதமான துளசி யை அவர் தொடுவதற்கு முன் அவரை நீ தீண்ட வேண்டும். அவர் துளசியை தொட்டுக் கொண் டிருக்கும் போது, அவருக்கு மரணம் சம்பவித்தால், அவர் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பால் சென்று விடுவார்” என்று கட்டளை இட்டார்கள்.

துளசியால் கிடைத்த சுதர்ஸன சக்கரத்தின் பாதுகாப்பு

அக்கட்டளைப்படி அந்தப் பாம்பும் அவரை நோக்கி நகர்ந்தது. அவரும் அந்தப் பாம்பைக் கவனிக்கவில்லை. அவருடைய நல்லதிர்ஷ்டம் அந்த பாம்பு அவரை நெருங்கும் முன்பு, அவர் ஒரு குத்து துளசியை தன் கையில் சேகரித்துவிட்டார். அவர் பார்க்க இயலாத படி பகவான் விஷ்ணுவின் சுதர்ஸன சக்கரம் அவருக்கு பாதுகாப்பாக உடனே அங்கு தோன்றியது. அந்தப் பிராமணர், சுதர்ஸனச் சக்கரத்தால் முற்றிலும் பாதுகாக்கப்பட்டவரானார்.

அந்த நேரத்தில் யாராலும் கவனிக்கப்படாத வகையில், அந்தப் பாம்பு அவர் சேகரித்து வைத்தி ருந்த புல் கட்டினுள் நுழைந்து விட்டது. புல் கட்டை தலையில் சுமந்தவாறு, அந்தப் பிராம ணரும் தன்னுடைய கிராமத்தை நோக்கி நடந்தார். யாரும் பார்க்க இயலாத வகையில் சுதர்ஸன சக்கரமும், யமதூதர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். புல் கட்டில் இருந்த பாம்பும் அவரைக் கடிப்பதற்கு சரியான தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தது.

விஷ்ணு பக்தனின் கருணை

இதற்கிடையில், பகவான் விஷ்ணுவின் தூய பக்தர் ஒருவர் வீட்டை அந்தப் பிராமணர் அடைந் தார். பகவானிடம் அவருக்கு இருந்த தூய பக்தி யால், அந்தப் பக்தரால் முழு நிலைமையையும் புரிந்து கொள்ள முடிந்தது. துளசியின் அதியற்புத சக்தியைக் கண்டு வியந்த அந்த பக்தர், மிக்க ஆர் வத்துடன் அந்தப் பிராமணர்களைப் பின் தொடர்ந்து வந்திருந்த யமதூதர்களிடம் என்ன நடந்தது என வினவினார். அந்தப் பிராமணருக்கு பாதுகாப்பு தர சுதர்ஸன் சக்கரம் உடன் வந்திருப்ப தால், அவர் துளசியைக் கீழே வைப்பதற்காக தாங்கள் காத்துக் கொண்டிருப்ப தாகவும், துளசி யைக் கீழே அவர் வைத்தவுடன் பாம்பு அவரைத் தீண்டி அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்றும், அதன்பின் தாங்கள் அவரை யமலோகம் கொண்டு செல்லப் போவதாகவும் கூறினர். அறியாமையில் இருக்கும் அந்தப் பிராமணருக்காக பரிதாபப்பட்ட அந்த விஷ்ணு பக்தர், யமதூதர்களிடம், “ஓ யமதூதர்களே, இந்தப் பிராமணர் மீது கருணை காட்டுங்கள். அவர் துளசி யை கீழே வைத்தவுடன், பாம்பு அவரைத் தீண்டி அவரைக் கொல்லும் என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால் இந்தப் பிராமணர் புனித துளசியை எனக்காகச் சேகரித்து வந்துள்ளார். ஆகையால் அவரை விட்டுவிட நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.” என்றார்.

யமதூதர்கள் காட்டிய வழி

இதைக் கேட்ட யமதூதர்கள், நாங்கள் என்ன செய்ய இயலும் ? நீதியை நிலை நாட்டும் எங்கள் தலைவரான யமராஜாவின் கட்டளைகளைத் தான் நாங்கள் நிறைவேற்றுகிறோம். இந்தப் பிராமணருக்கு இன்னும் இரண்டு முகூர்த்தங்கள் தான் வாழ்வு மீதி உள்ளது. அதன்பின் பாம்பால் தீண்டப்பட்டு மரணமடைவார். பகவான் ஹரி மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும். பகவானுக்கு பிரியமான துளசியால் நீங்கள் அவருக்கு நைவேத்யம் செய்தால், அவர் திருப்தியடைந்து உங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளலாம்.” என்று பதில் அளித்தனர்.

மேலும் யமதூதர்கள் விஷ்ணு பக்தரிடம் ‘ஒரு துளசி இலையை யாராவது ஒருவர் எனக்கு ‘அளிப்பர்’ என்று எண்ணிக் கொண்டு, பகவான் விஷ்ணு துளசி வனத்தில் எப்போதும் தங்குகிறார்.” (பதம் 50) என்றும் “நல்லவரோ, கெட்டவரோ, பகவான் 66 விஷ்ணுவை ஒருவர் துளசியால் வழிபட்டால், நாங்கள் அவரை அனுக முடியாது. மரணத்திற்கு பின், விஷ்ணு தூதர்களால் அவர்கள் வைகுந்தம் கொண்டு செல்லப்படுவர். பகவான் நாராயணர் துளசி மீது ஏன் இத்தனை பிரியமாக இருக்கிறார் என்பது எங்களுக்கு பெரிய மர்மமாகவே உள்ளது. யார் துளசியை தங்கள் கரங்களில் ஏந்திச் செல்கிறார்களோ, அவர்களுக்கு பாதுகாப்பும் துணைபோகிறது. ஆகையால் அந்த பிராமணரைக் காப்பாற்ற விரும்பினால், தாமதமில்லாமல் துளசியால் பகவான் விஷ்ணுவை வழிபடுவீராக” ( பதம் 52-54 ) என்றும் கூறினர்.

யமதூதர்களிடம் இருந்து காப்பாற்றப்படுதல்

யமதூதர்களின் வார்த்தைகளைக் கேட்ட அந்த விஷ்ணு பக்தர், துளசியை பக்தியுடன் பகவான் விஷ்ணுவுக்கு அர்ப்பணித்து பகவான் விஷ்ணுவிற்கு சிறப்பு வழிபாடு செய்தார். உடனே அந்தப் பக்தர் கண் முன்னாலேயே பாம்பும், யமதூதர்களும் அங்கிருந்து நீங்கினர். அதன்பின், விஷ்ணு பக்தர் அந்தப் பிராமண னுக்கு நடந்தது அனைத்தையும் விவரித்தார். அவர்கள் இருவரும் அதன் பின் புனித யாத்திரை மேற்கொண்டு, பகவான் ஹரிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். பகவான் ஹரிக்கு அவர்கள் செய்த பக்தியின் பலனாக, அவர்கள் இருவரும் வாழ்வின் இறுதியில் பரமபதம் அடைந்தனர்.


tulasi arati song tamil ISKCON Songs Tamil

துளசியின் 8 நாமங்கள்

விருந்தாவனி : விருந்தாவனத்தில் தோன்றுபவள்

விருந்தா: பல செடிகளிலும், மரங்களிலும் தோன்றுபவள்.

விஸ்வ-பூஜிதா: பிரபஞ்சங்களில் பூஜிக்கப்படுபவள்

புஸ்ப-சாரா : புஷ்பங்களில் சாரமானவள்.

நந்தினி: அடையப்படும் போது நம்பிக்கையும், மகிழ்வும் தருபவள்

கிருஷ்ண-ஜீவனி: கிருஷ்ணரின் ஜீவனாய் இருப்பவள்

விஸ்வ-பாவனி: பிரபஞ்சங்களைத் தூய்மைப்படுத்துபவள்.

துளசி: ஒப்பிட இயலாதவள்


துளசி மஹிமா

“துளசியைப் பார்த்தால், செய்த பாவங்கள் அழியும். துளசியைத் தொட்டால், உடல் தூய்மை அடையும். துளசியைப் பணிந்தால், நோய்கள் தீரும். துளசிக்கு நீர் வார்த்தால், யமனுக்கு பயம் உண்டாகும். துளசியை நட்டால் பகவான் கிருஷ்ணரை நெருங்கலாம். துளசியைப் பகவான் கிருஷ்ணரின் பாதத்தில் அர்ப்பணித்தால், சிறப்பு முக்தி (கிருஷ்ண பிரேமை) கிடைக்கும். அத்தகைய துளசிக்கு நமஸ்காரம்.’

– (ஸ்ரீ ஹரி பக்தி விலாச 9.104, பக்தி ரசாமிருத சிந்து 1.2.203, ஸ்கந்த புராணத்தில் இருந்து)

“பகவான் ஹரியிடம் பக்தி மிகுந்த குழந்தை புகழ் வாய்ந்தது. ஆனால் ஹரியிடம் பக்தி இல்லாத முதியவர் வாழ்வு வீணானது. அது போல சிறிய துளசி செடிக்கு, பெரிய மரம் ஈடாகுமா? பகவான் ஹரி, தேவலோக பாரிஜாத மலர்களால் ஆன மாலையை அணிவதில் கூட அத்தனை விருப்பம் கொள்வதில்லை. ஆனால் துளசியால் அவர் ஆனந்தம் அடைகிறார். எந்த ஒரு மரமோ, செடியோ ஈடு சொல்ல இயலாத அளவிற்கு, துளசி பெருமை மிக்கது.” (ஹரி பக்தி சுதோதயா 18.28-29) “தன்னுடைய பக்தர்களிடம் அதிகப் பிரியம் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர், ஒரு துளசி இலையும், உள்ளங்கை அளவு நீரும் அளிக்கும் பகதனுக்கு தன்னையே விற்று விடுகிறார்.”

-(சைதன்ய சரிதாமிருதா ஆதி-லீலா 3.104, கௌதமிய தந்திரத்தில் இருந்து)


KA- Jan 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question