
ஸ்ரீமதி ராதாராணியின் 25 பக்தி குணங்கள்
https://youtu.be/XIu2tiVu37M
ப்ரேமே ரேபரமஸாரா மஹா பாவ ஜானி
குஸமஹா பாவரூபா ராதா தாக்கூராணி
ஆனந்த குண ஸ்ரீராதிகாரா பஞ்சீக ப்ரதான
ஏகுணேர வாசி ஹயா க்ருஷ்ண பகவான்
-சைதன்ய சரிதாமிருதம் (8.160)
பக்தியுடைய சாரம் மஹாபாவம் ( ஆன்மீகஆனந்தம் ) என்று அழைக்கப்படுகிறது . அவைகளை ஸ்ரீமதி ராதாராணி பிரதிபலிக்கிறாள். ஸ்ரீமதிராதாராணியை விட உயர்ந்த பக்தர் யாரும் கிடையாது. அளவற்ற வகையில் பக்தி குணங்கள் உடையவள். அவள் தன்னிடமுள்ள இருபத்தைந்து பிரதானமான பக்தி குணங்களால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தன்வசம் வைத்திருக்கிறாள்.
1. மதுரா : மிகவும் இனிமை நிறைந்தவள்
2. நவ்யா : புத்துணர்வோடு இளமையாக இருத்தல்
3. சால அபங்க :கண்கள் ஓய்வற்று கிருஷ்ணரை நாடிக் கொண்டிருக்கும்.
4. உஜ்வல ஸ்மிதா : பிரகாசமான சிரிப்பை உதிர்ப்பவள்
5. சாது சௌபாக்ய ரேக ஆத்யா :உடலில் அழகும் மங்களமும் நிறைந்த ரேகைகள் கொண்டவள்.
6. கந்த அன் மடித்த மாதவ : தன் உடலில...



