
Understanding Bhagavad Gita (Tamil) / பகவத் கீதையைப் புரிந்துகொள்ளுதல்
12 செப்டம்பர் 1973ல், லண்டன் நகரில், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் சில பத்திரிகை நிருபர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி.நிருபர்: பகவத் கீதையில் போதிக்கப்படும் மையக் கருத்து என்ன?ஸ்ரீல பிரபுபாதர்: பகவானைப் புரிந்து கொள்வதே மையக் கருத்தாகும். மக்கள் மூடர்களாகி விட்டார்கள். அவர்கள் பகவானைப் பற்றி தெரிந்து கொள்வதையும். தான் யார் என்பதை தெரிந்துகொள்வதையும் மறந்துவிட்டனர். ஒவ்வொருவரும் "நான் இந்த உடல்" என்று தவறாக எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஆன்மீக ஆத்மாக்கள். ஆத்மாவை அறிவதற்கான கல்வியறிவு அவர்களிடம் இல்லை. அனைவரும் அறியாமையில் உள்ளனர். மிகப்பெரிய பேராசிரியர்கள்கூட அறியாமையில் உள்ளனர். இந்த உடல் முடிந்த பிறகு, எல்லாமே முடிந்து விடும்" என்று ரஷ்யாவின் பேராசிரியர் கோட்டாவ்ஸ்கி என்னிடம் கூறினார். ஆனால் அஃது உண்மை அல்ல.நிருபர்: ஸ்ரீ கிருஷ்ணர...









