Friday, April 19

ஸ்ரீல பிரபுபாதர் – உபன்யாசம்

நீங்கள் கடவுளா?

நீங்கள் கடவுளா?

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
கடவுளுக்கும் கடவுளின் சக்திக்கும் இடையிலான வேற்றுமையை உணராமல், அனைவரும் கடவுள் என்று வாதிட்ட சில விருந்தினர்களுடன் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், அமெரிக்காவின் போஸ்டன் நகரில் டிசம்பர் 23, 1969இல் நடத்திய உரையாடல். ஸ்ரீல பிரபுபாதர்: ஒருவர் எந்த வழிமுறையைப் பின்பற்றினாலும், கடவுளின் மீதான அன்பை வளர்த்துக் கொண்டால் அது நல்லது. இல்லையெனில் அது தேவையற்ற கால விரயமே. ஒரு குருவினை அல்லது கொள்கையினை சோதனை செய்வதற்கு இதுவே வழியாகும். எனக்குத் தெரிந்த வரையில், யோகிகள் தம்மைத் தாமே கடவுள் என்று கூறுவர். மேலும், "எல்லோரும் கடவுள்' என்று கூறுவர். அப்படியெனில், இந்த நாய் யார்? கடவுளா? இவர்களது கருத்து உகந்ததல்ல. எல்லோரும் எவ்வாறு கடவுளாக முடியும்? எல்லோரும் கடவுள் என்றால், கடவுள் என்பதன் பொருள் என்ன? கடவுள் என்றால் என்ன என்பதற்கு நீங்கள் விளக்கமளிக்க வேண்டும். உங்களால் வி...
செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு? / How to make a profession noble?

செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு? / How to make a profession noble?

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
சாதாரண மக்களால் செய்யப்படும் செயலுக்கும் பக்தனால் செய்யப்படும் செயலுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் ஓர் உரையாடல். சீடன்: நாம் பற்றற்று இருக்க வேண்டும் என பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லும்போது என்ன நோக்கத்தோடு சொல்கிறார்? ஸ்ரீல பிரபுபாதர்: நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்வதை மட்டுமே விரும்ப வேண்டும் என்ற பொருள்பட சொல்கிறார். ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம் வா ஜகத் ஈஸ காமயே, "எனக்கு பொருள் தேவையில்லை. சீடர்கள் தேவையில்லை, அழகான பெண்கள் தேவையில்லை. என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். அப்போது அவருக்கு என்ன வேண்டுமென கோருகிறார்? "நான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும். என்கிறாரே தவிர, “எனக்கு எதுவும் தேவையில்லை. நான் ஒன்றுமில்லாத சூன்யமாக விரும்புகிறேன் என்று அவர் கூறவில்லை. சீடன்: பக்தரல்லாதவர்கூட தன்னுடைய தேவை என்ன என்பதை அறிந்துள்ளான். ஆனால் கிருஷ்...
எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும்

எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும்

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
நெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது சீடர்களில் ஒருவருடன் 1974ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரத்தில் பரிமாறிக் கொண்ட கருத்துகள் சீடர்: சமீபத்தில் இந்தியாவிலுள்ள ஓர் அரசியல்வாதி, தமது சொற்பொழிவில், இந்திய மக்களில் எட்டு சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வசிப்பதாகவும். விளைநிலங்களில் தொழில் நுட்பத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும். கோதுமையைக் கையால் அறுவடை செய்வதற்குப் பதிலாக அறுவடை இயந்திரத்தையும் காளைகளைப் பூட்டி ஏர் உழுவதற்குப் பதிலாக டிராக்டர்களையும் பயன்படுத்த வேண்டுமென்றும் கூறியுள்ளார். ஸ்ரீல பிரபுபாதர்: இந்தியாவிலுள்ள பலர் ஏற்கனவே வேலையின்றி இருப்பதால், அதிகமான இயந்திரங்களைப் புகுத்துவது நல்ல திட்டமல்ல. நூறு மனிதர்களால் செய்யப்படும் ஒரு வேலையை இயந்திரத்தைக் கொண்டு ஒரு மனிதன் செய்துவிடமுடியும். ஆனால் மீதமுள்ளமனிதர்கள் வேலை...
Understanding Bhagavad Gita (Tamil) / பகவத் கீதையைப் புரிந்துகொள்ளுதல்

Understanding Bhagavad Gita (Tamil) / பகவத் கீதையைப் புரிந்துகொள்ளுதல்

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
12 செப்டம்பர் 1973ல், லண்டன் நகரில், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் சில பத்திரிகை நிருபர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி. நிருபர்: பகவத் கீதையில் போதிக்கப்படும் மையக் கருத்து என்ன? ஸ்ரீல பிரபுபாதர்: பகவானைப் புரிந்து கொள்வதே மையக் கருத்தாகும். மக்கள் மூடர்களாகி விட்டார்கள். அவர்கள் பகவானைப் பற்றி தெரிந்து கொள்வதையும். தான் யார் என்பதை தெரிந்துகொள்வதையும் மறந்துவிட்டனர். ஒவ்வொருவரும் "நான் இந்த உடல்" என்று தவறாக எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஆன்மீக ஆத்மாக்கள். ஆத்மாவை அறிவதற்கான கல்வியறிவு அவர்களிடம் இல்லை. அனைவரும் அறியாமையில் உள்ளனர். மிகப்பெரிய பேராசிரியர்கள்கூட அறியாமையில் உள்ளனர். இந்த உடல் முடிந்த பிறகு, எல்லாமே முடிந்து விடும்" என்று ரஷ்யாவின் பேராசிரியர் கோட்டாவ்ஸ்கி என்னிடம் கூறினார். ஆனால் அஃது உண்மை அல்ல. நிருபர்: ஸ்ரீ கிருஷ்ண...
Gita Saaram (Tamil) / கீதாசாரம்

Gita Saaram (Tamil) / கீதாசாரம்

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
வழங்கியவர்: தெய்வத்திரு. அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வீக ஞானத்தை அங்கீகரிக்கப்பட்ட சீடப் பரம்பரையின் மூலம் பெறாமல், அனுபவ அறிவை அடிப்படையாகக் கொண்ட விவாதங்களால் கவரப்பட்டு, வழிதவறிச் செல்லும் நபர்களுக்காக பகவத் கீதையின் முக்கிய கருத்துக்களை இங்கு சுருக்கமாக கீதாசாரம் என்னும் தலைப்பில் தொகுத்துள்ளோம். (1940களில் வைராக்ய வித்யா எனும் தலைப்பில் ஸ்ரீல பிரபுபாதரால் வங்காள மொழியில் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளில் ஒன்று) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பரம் பொருள். அவரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள். அவரே எல்லா காரணங்களுக்கும் காரணம் "யாரிட மிருந்து இவ்வுலகம் தோன்றியதோ, யாரால் இவ்வுலகம் தோற்றுவிக்கப் பட்டதோ, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் யார் கட்டுப் படுத்துகின்றாரோ, அவரே கடவுள்" என்று கடவுளைப் பற்றி வேதாந்த சூத்திர...
மனிதனுக்கும், கடவுளுக்கும் உள்ள வித்தியாசம்? / Different b/w Human & God?

மனிதனுக்கும், கடவுளுக்கும் உள்ள வித்தியாசம்? / Different b/w Human & God?

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
பொதுவாக மாயாவதிகள் என்பவர்கள் 'எல்லாம் மாயை, மற்றும் கிருஷ்ணரும் மாயை' என்று கூறுவார்கள். கிருஷ்ணர் செயல்முறையில் இதெல்லாம் மாயை அல்ல என்று காட்டினாலும், இது முழுமையாக ஆன்மீகமானது என்று கூறினாலும் அவர்களுடைய மந்த புத்தி 'கிருஷ்ணர் தலையாய பூரண உண்மை' என்று ஏற்றுக் கொள்ளாது. கிருஷ்ணர் 'மன்மனாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு' (ப.கீ. 18.65) 'என்னுடைய பக்தன் ஆவாய். எனக்கு உன் வந்தனைகளை சமர்ப்பிப்பாய். எப்போதும் என்னை நினைத்து இரு' என்று கூறுகிறார். இதற்கு அந்த அறிஞர்கள் என்று கூறப்படுபவர்கள், "இது கிருஷ்ணர் என்ற நபருக்கு அல்ல. இது அவருள் பொதிந்திருக்கும் ஒன்று'' என்று கூறுவர். இந்த மூடர்களுக்கு கிருஷ்ணரின் அகத்திற்கும் புறத்திற்கும் வித்தியாசம் இல்லை என்று தெரியாது. நமக்கும், கிருஷ்ணருக்கும் வித்தியாசம்? கிருஷ்ணர் பூரணமானவர். இருமைக்கு அங்கு இடமில்லை, இந்த அறிவு அவர்களுக்கு கி...
சமுதாயத்தைத் திருத்துவதற்கான கல்லூரிகள்

சமுதாயத்தைத் திருத்துவதற்கான கல்லூரிகள்

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
கலி யுகத்தின் சீரழிந்த சமுதாயத்தை திருத்துவதற்கு கிருஷ்ண பக்தியைக் கற்றுக் கொடுக்கும் கல்லூரிகள் தேவை என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்களுடன் உரையாடுகிறார். மார்ச், 1974—விருந்தாவனம், இந்தியா ஸ்ரீல பிரபுபாதர்: இந்த கலி யுகத்தில் அரசியல்வாதிகளின் தொழில் ஏழை மக்களைச் சுரண்டுவதாகவே இருக்கும். குடிமக்கள் பல்வேறு சங்கடத்திற்கும் தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்படுவர். ஒருபுறம் மழை பற்றாக்குறையால் உணவிற்குத் தட்டுப்பாடு ஏற்படும், மறுபுறம் அரசாங்கம் அதிகப்படியான வரியை வசூலிக்கும். இவ்வண்ணம் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி, வீடுகளைத் துறந்து வனத்திற்குச் சென்று விடுவர். ஆத்ரேய ரிஷி தாஸ்: இப்போதுகூட அரசு பணம் வசூலிக்கிறதே தவிர, வேறு ஒன்றும் செய்வதில்லை. ஸ்ரீல பிரபுபாதர்: ஒவ்வொருவருக்கும் அவரவரது திறமைக்கேற்ப வேலைவாய்ப்பு அமைத்துக் கொடுப்பது அரசின் கடமையாகும். வேலையில்லா திண்டாட்ட...
வேத ஞானமெனும் மரத்தின் கனிந்த பழம்

வேத ஞானமெனும் மரத்தின் கனிந்த பழம்

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் நிகம–கல்ப–தரோர் கலிதம் பலம்  ஷுக–முகாத் அம்ருத–த்ரவ–ஸம்யுதம் பிபத பாகவதம் ரஸம் ஆலயம்  முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா: “சிந்தனை நிறைந்த வல்லுநர்களே, வேத இலக்கியங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகிய ஸ்ரீமத் பாகவதத்தை அனுபவியுங்கள். அமிர்தம் போன்ற இந்த ஸ்ரீமத் பாகவத ரஸம், முக்தி பெற்ற ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் ஏற்கனவே அனுபவிக்கக்கூடியதாக இருந்தபோதிலும், தற்போது ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமியின் திருவாயிலிருந்து மலர்ந்திருப்பதால் மேலும் சுவையுடையதாகியுள்ளது.” (ஸ்ரீமத் பாகவதம் 1.1.3) கற்பக விருட்சம் ஸ்ரீமத் பாகவதம் வேத இலக்கியங்களின் கனிந்த பழமாகும். வேத இலக்கியம் கற்பக மரத்துடன் (கல்ப–தருவுடன்) ஒப்பிடப்படுகின்றது. கல்ப என்றால் “விருப்பம்” என்றும், தரு என்றால் “மரம்” என்றும் பொருள். பௌதிக உலகில் வாழும் நமக்கு கல்ப–...
ஸ்ரீல பிரபுபாதர் ஆடியோ I Srila Prabupada Audio

ஸ்ரீல பிரபுபாதர் ஆடியோ I Srila Prabupada Audio

ஆன்மீகப் பதிவு, New Posts, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
ஸ்ரீல பிரபுபாதர் பாடிய பாடல்கள் ஹரே கிருஷ்ண - (Hare Krishna Mantra) கீர்த்தனை கீர்த்தனைSrila Prabhupada Kirtan I ஸ்ரீல பிரபுபாதர் கீர்த்தனை (Hare Krishna Mantra) கீர்த்தனைSrila Prabhupada Kirtan I ஸ்ரீல பிரபுபாதர் கீர்த்தனை (Hare Krishna Mantra) ஜபம் ஜய ஸ்ரீ கிருஷன் சைதன்ய... பாடல் ஜய ராதமாதவ... பாடல் யசோமதி-நந்தன
நரசிம்ம சதுர்தசி -ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல்

நரசிம்ம சதுர்தசி -ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல்

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல், மும்பை நரசிம்ம சதுர்தசி என்று அறியப்படும் நரசிம்மர் தோன்றிய நன்னாளில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரால்,மே 5, 1974ல், மும்பை நகரில் வழங்கப்பட்ட உபன்யாஸம். பகவான் நரசிம்மர் தோன்றிய தினத்தை நரசிம்ம சதுர்தசி என்று அழைப்பர். நரசிம்மருக்கும் ஹிரண்ய கசிபுவிற்கும் இடையில் நடைபெற்ற போர், ஆஸ்திகத்திற்கும் நாஸ்திகத்திற்கும் இடையிலான போராட்டமாகும். இத்தகு போராட்டம் எப்போதுமே உண்டு. ஒருவர் கடவுளிடம் பக்தி கொள்ளத் தொடங்கினால், அதாவது கிருஷ்ண உணர்வுடையவராக மாறினால், அவருக்கு பல எதிரிகள் தோன்றுவர். ஏனெனில், இவ்வுலகம் அசுரர்களால் நிரம்பியுள்ளது. கிருஷ்ணரையும் கொல்ல முயற்சிப்பர் பக்தர்கள் மட்டுமல்ல, பகவான் கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றிய போதும், அவர் பல அசுரர்களை வதம் செய்ய வேண்ட...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question