Sunday, November 10

Improve in Bhakti step by step (Tamil) / படிப்படியாகப் பக்தியில் முன்னேறுதல்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

மனிதனாக பிறவி எடுத்த அனைவருக்குமே ஐடம் புலன் இன்பத்தில் கூடநாட்டம் உண்டு. புலனின்பத்தை முற்றிலுமாகத் தவிர்த்து, கிருஷ்ண பக்தியை நேரடியாகவோ அல்லது முழு மையாகவோ ஏற்றுக் கொண்டு பயிற்சி செய்வது என்பது எல்லோருக்கும் இயலாத ஒரு காரியம்.

ஜடப் புலனின்பத்தை விரும்பித் தான் அனை வரும் இவ்வுலகில் செயல்படுகின்றனர். புலன் இன்பத்தை விரும்பும் இவர்கள், முழு கிருஷ்ண பக்தியில் ஈடுபட இயலாமல் போகலாம். ஆனால், தங்களுடையப் புலனின்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேதங்களால் ஒழுங்குபடுத்தப் பட்ட வகையில், வேதங்கள் பயிலல், யாகங்கள், தவங் கள், தான தர்மங்கள் செய்தல் ஆகியவற்றைப் பக்தி யுடன் செய்யலாம்.

இவ்வாறு செய்வதால் படிப்படியாகக் கிருஷ்ண உணர்வில் அவர்கள் முன்னேற வாய்ப்பு உண்டு. சிறிதளவாகிலும் இவ்வாறு கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொண்டுள்ள ஒருவனை, நேரடியாகக் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தி விடலாம்.

ஆகையால், கிருஷ்ண உணர்வில் பக்குவம் பெற்ற ஆத்மா, இத்தகையோரது செயலிலும், புத்தியிலும் குழப்பம் உண்டாக்காது, செயல்களின் பலன்களையும் கிருஷ்ணரின் சேவை யில் எவ்வாறு ஈடுபடுத்துவது என்பதை அவர் களுக்கு அறிவுறுத்த வேண்டும். தாங்களும் நடை முறையில் அவர்களுக்கு வாழ்ந்து காட்ட வேண் டும். படிப்படியாக அவர்களை கிருஷ்ண பக்தி யில் முன்னேற்ற வேண்டும். கிருஷ்ண உணர்வில் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை புலன் இன்பத்தில் நாட்டம் கொண்ட இத்தகையோர் அறிந்து கொள் ளும் வகையில் கிருஷ்ண உணர்வுடையவன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இக்கருத்தையே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதை பதம் 3.26ல் ”ஞானம் அற்றவர்கள், பலன் நோக்குச் செயல்களில் பற்றுக் கொண்டு செயல்படும் போது, அவர்களுடைய புத்தியை கற்றறிந்த பண்டிதர்கள் குழப்பக் கூடாது. மாறாக அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் பக்தியில் இணைத்துச் செயல்படுமாறு அறிஞர்கள் அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.” என்று குறிப்பிடுகிறார்.

துருவ மகாராஜனின் வரலாறு இதற் கோர் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

துருவனின் ஏமாற்றம்

பிரம்மாவின் புத்திரன் ஸ்வாயம்புவ மனு. ஸ்வாயம்புவ மனுவின் புத்திரர்கள் உத்தானபாதனும் பிரியவிரதனும் ஆவார் கள். உத்தானபாதனின் மூத்த மனைவி சுனீதி துருவனையும், அவருக்குப் பிரிய மான இளைய மனைவி சுருசி உத்தம னையும் பெற்றெடுத்தார்கள்.

ஒரு நாள், மன்னன் உத்தானபாதன், தன் பிரிய மகனான உத்தமனைத் தன் மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்ட மற்றொரு மகனான துருவன், தானும் அவர் மடி மீது ஏறி அமர முயற்சி செய்தான். ஆனால் மன்னரோ துருவனின் இந்த முயற்சியை விரும்பவில்லை.

சுருசியின் கடுஞ்சொல்

மேலும், துருவனின் இந்த முயற்சியைக் கண்ட சுருசி, துருவனின் மீது வெறுப் புக் கொண்டவளாய், மன்னன் உத்தான பாதன் செவிகளில் விழுமாறு, துருவனி டம், ”எனதன்புக்குரிய குழந்தாய், மன் னனின் மகனாக நீ இருந்தாலும், என் வயிற்றில் பிறக்காததால், மன்னனின் மடி யிலோ, இருக்கையிலோ அமரும் தகுதி உனக்கில்லை. உன் விருப்பத்தை நிறை வேற்றிக் கொள்வது மிகவும் கடினமானதா கும். மன்னனின் அரியாசனத்தில் அமர நீ விரும்பினால், கடுமையான தவங்களை மேற்கொண்டு, பகவான் நாராயணரை நீ முதலில் திருப்தி செய்ய வேண்டும். உன் னுடைய இந்த வழிபாட்டால் அவர்திருப்தி யடைந்தால், மறுபிறவியில் என் வயிற்றில் பிறப்பாய்.” என்று கர்வத்துடன் கூறினாள்.

துருவனுக்கு சுனீதியின் அறிவுரை

சுனீதியின் கடுஞ்சொற்களைக் கேட்ட துருவன், அடிபட்ட பாம்பு போல் சினத்துடன் பெருமூச்சு விட்டார். மேலும், தன் தந்தை இந்நிகழ்ச்சியைக் கண்டும் காணா தவர் போல் இருப்பதைக் கண்டு, அங்கி ருந்து நீங்கி தன் தாய் சுனீதியிடம் சென்றார்.

நடந்ததைக் கேள்விப்பட்ட சுனீதி, சோகத்தீயில் வாடியவளாய், கண்களில் நீர் பெருக்கெடுத்தோட, துருவனிடம், “மகனே, யாருக்கும் கேடுநினையாதே.பிற ருக்கு கேடு நினைப்பவன் தனக்கே கேடு விளைவித்துக் கொள்கிறான். சுருசி இவ்வாறு நடந்து கொள்வதற்கு காரணம், உன் தந்தை என்னைத் தன் மனைவியாக நடத்தாததே. சுருசி கடுமையாகப்பேசி இருந்தாலும், அவள் கூறியது அனைத் தும் உண்மை தான். உன் தந்தையின் மடியில் உத்தம னைப் போல் அமர நீ விரும்பினால், சுருசி கூறிய அறிவு ரைகளைச் செயல் படுத்துவாயாக. தாமதம் ஏதுமின்றி, பக வானின் பத்ம பாதங்களை வழிபடுவதில் ஈடுபடுவாயாக.

பகவானின் பத்ம பாதங்களை வழிபட்டதால், உன்னு டைய கொள்ளுத் தாத்தாவான பிரம்மா இந்தப் பிரபஞ்சத் தினைப்படைக்கும்தகுதியைப்பெற்றார். பிறப்பற்றவரான அவர், பகவானின் கருணையாலேயே, அனைத்து ஜீவன் களுக்கும் தலைவராக விளங்குகிறார். உனது தாத்தாவான ஸ்வாயம்புவ மனுவும் வேள்விகளும், தான தர்மங்களும் செய்து, பகவானை பக்தியுடன் வழிபட்டு திருப்தி செய்த தாலேயே. இகவுலக சுகங்களை அனுபவித்து, பின்தேவர் களை வழிபடுவதால் கிடைக்காத முக்தியையும் பெற்றார்.

அன்பு மகனே, ஆகையால் பக்த வத்சலனானபகவானி டம் நீ சரணடைய வேண்டும். முக்தியை விரும்புவோரும் பக்தியில் பகவானின் பாத சேவையில் ஈடுபடுகின்றனர். உன்னுடைய ஸ்வதர்மத்தை முறையாக செய்து, தூய்மை அடைந்து, பகவானை சதா மனதில் இருத்தி, கணமும் வீணடிக்காமல் அவருடைய சேவையில் ஈடுபடுவாயாக. பகவானைத் தவிர உன்னுடையதுயர் தீர்ப்பவர் யாரையும் நான் காணவில்லை. யாருடைய கருணையை பிரம்மா போன்றோரும் நாடுகின்றார்களோ அந்த லக்ஷ்மியும், கையில் தாமரை மலருடன் பகவானுக்குச் சேவை செய்ய எந்நேரமும் ஆயத்தமாக உள்ளாள்.” என்று நீண்ட அறிவுரையைக் கூறினாள்.

சுனீதி கூறிய அறிவுரைகள், துருவனின் விருப்பத்தினை நிறைவேற்றுவதற்கு உகந்ததா கும். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, தீர்க்க புத்தியுடன், மாறாத உறுதி கொண்டவராய் துருவன், தன்னுடைய தந்தையின் அரண் மனையை விட்டு வெளியேறினார்.

நாரதர் துருவனை யோக முயற்சியை விட அறிவுறுத்துதல்

துருவனின் செயல்களைக் கேள்விப்பட்டு வியப்படைந்த மாமுனிவரான நாரதர், துருவனை அடைந்து, அவர் தலை மீது கை வைத்து, ”என்ன அதிசயம். இந்த சத்திரியர் கள் சிறிது மானபங்கத்தையும் பொறுத்துக் கொள்வதில்லை. சிறுவனாக இருந்தாலும் இந்த துருவனால், தன் சிற்றன்னையின் வார்த் தைகளை தாங்கிக் கொள்ள இயலவில்லை. எனதன்பு புத்திரனே, வேடிக்கை விளை யாட்டுகளில் சுகம் காணும் சிறுவனான நீ ஏன் அவமான வார்த்தைகளால் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டாய். நல்லதோ, கெட்டதோ எதுவரினும், அது இறைவன் செயல் என ஏற் றுக் கொள்ள வேண்டும்.

உனது அன்னையின் அறிவுரைப்படி பகவா னுடைய கருணையைப் பெற யோக முறையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளாய். ஆனால் சாமான்ய மனிதனுக்கு இது எளிதல்ல. பல பிறவிகளில் பயிற்சி செய்த சித்தர்களாலும் நிறைவு காண இயலாதது இந்த யோக முறை. ஆகையால் குழந்தாய், நீ இம்முயற்சியை விட்டுவிட்டு திரும்பிச் செல்வாயாக. பெரிய வனான பின் பகவான் கருணையால் வாய்ப்புக் கிட்டுமானால் அப்போது இந்த யோகத்தைப் பயிற்சி செய்வாயாக.” என்று அறிவுரை கூறினார்.

துருவன் நாரதரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ள இயலாமையை கூறுதல்

இதைக் கேட்ட துருவன், ”சுக துக்கத்தால் பாதிக்கப்பட்ட மனிதன் மன அமைதி பெறுவ தற்கு தங்கள் அறிவுரை மிக உகந்தது.ஆனால் உ அறியாமையால் மூடப்பட்ட என் மனதை இந்த அறிவுரை தொடவில்லை. உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பணிவும் என்னிடம் இல்லை. இது என் குற்றமன்று. நான் பிறந்த சத்திரிய குலத்தின் தாக்கம் இது. எனது சிற் றன்னை கொடிய வார்த்தைகளால் என் உள்ளத்தைக் குதறி விட்டாள். இந்நிலையில் தங்கள் அறிவுரைகள் என் உள்ளத்தில் இடம் பெறவில்லை.

எனது தந்தையரும், முந்தையரும், மூவுலகங்களிலும் உள்ள யாரும்அடையாத உயர்நிலையை அடையவேண் டும் என நான் விருப்பப்படுகிறேன். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், வாழ்க்கையின் இந்த லட்சியத்தை அடைவதற்கு எனக்கு வழிகாட்டுவீராக. ” என்று நாரதரி டம் வேண்டினார்.

நாரதர் துருவனின் விருப்பம் நிறைவேற அறிவுரை கூறுதல்

துருவனின் வேண்டுகோளை கேட்டு, அவர் மீது கருணை மிகக் கொண்ட நாரதர், அளவற்ற கருணை யுடன் அவருக்கு உபதேசம் செய்தருளினார். ”உன் அன்னை சுனீதியால் உனக்கருளப்பட்ட உபதேசம் மிகப் பொருத்தமானதாகும். முழுமூச்சுடன்பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுவாயாக. தர்ம, அர்த்த, காமம், மோக்ஷம் என்ற நான்கையும் நாடும் ஒருவன், பகவானின் பக்தித் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அவருடைய பாத சேவையால் இந்த நான்கும் நல்லபடியாக நிறைவேறும்.

யமுனை நதிக் கரையில் உள்ள மதுவனத்திற்குச் சென்று உன்னைத் தூய்மைப் படுத்திக் கொள். நாள் தோறும் மும்முறை நீராடி அமைதியான சூழ்நிலையில் யோக இருப்பில் உன்னை நிலை நிறுத்திக் கொள். பின் னர் சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டு பிராண வாயு, மனம் மற்றும் புலன்களை கட்டுப்படுத்தி ஜடக் களங்களில் இருந்து விடுபடுவாயாக. பின் பொறு மையுடன் பகவானைத் தியானிக்கத் தொடங்குவா யாக.” என்று கூறிய நாரதர், துருவன் தியானிக்க வேண் டிய பகவானின் உருவை மிக தெளிவாக விவரித்தார்.

அடுத்தபடியாக தியானத்திற்குரிய மந்திரமாக, “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்ற மந்திரத்தை துருவனுக்குக் கற்பித்தார் நாரதர். பகவானின் மூர்த்தி யினை முறைப்படி பிரதிஷ்டை செய்து, முறைப்படி நைவேத்யம் செய்து இம்மந்திரத்தை உச்சரிக்க அறிவுறுத்தினார்.


“ந புத்தி பேதம் ஜனயேத் அக்ஞானாம்
கர்ம ஸ்ங்கினாம்
ஜோஷயேத் ஸர்வ கர்மாணி வித்வான்
யுக்த: ஸமாசரன்”

‘ஞானம் அற்றவர்கள், பலன் நோக்குச் செயல்களில் பற்றுக் கொண்டு செயல் படும் போது, அவர்களுடைய புத்தியை கற்றறிந்த பண்டிதர்கள் குழப்பக் கூடாது. மாறாக அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் பக்தியில் இணைத்துச் செயல்படுமாறு அறிஞர்கள் அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.”

– பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் 3.28


துருவனின் வழிபாடும் தியானமும்

நாரதரால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்ட துரு வன், நாரதரை மும்முறை வலம் வந்து அவருக்கு மரியாதை செலுத்தினார். பின் மதுவனம் நோக்கிச் சென்றார். அங்கு நாரதர் கூறியபடி பகவானை வழிபடுவதில் ஈடுபட்டார்.

முதல் மாதம், மூன்று நாட்களுக்கு ஒரு முறை, கனிகளை மட்டும் உண்டவாறு பகவானைத் தியானித்தார்..இரண்டாவது மாதம், ஆறு நாட் களுக்கு ஒரு முறை காய்ந்த புற்களையும், இலை களையும் உண்டவாறு தன் பக்தி சேவையைத் தொடர்ந்தார். மூன்றாவது மாதம், ஒன்பது நாட் களுக்கு ஒரு முறை நீர் மட்டும் பருகி சமாதி நிலையில் பகவானை வழிபட்டார். நான்காவது மாதம், பன்னிரெண்டு நாட்களுக்கு ஒருமுறை காற்றை மட்டுமே சுவாசித்தவாறு பகவான் வழி பாட்டில் ஈடுபட்டார். ஐந்தாவது மாதம், தனது மூச்சினை முழுவதும் கட்டுப்படுத்தி, அசை வின்றி ஒற்றைக் காலில் நின்று, மனதினை பரமன் மீது செலுத்தி வழிபட்டார்.

துருவனுடைய வழிபாட்டின் உச்ச நிலையில் அனைத்துப் பிரபஞ்சமும் அசைவின்றி செய லின்றித் திணறிப் போக, தேவர்கள் அனைவரும் பகவானை அணுகி தீர்வு வேண்டினர்.

துருவனுக்கு பகவான் விஷ்ணுவின் தரிசனம்

தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, பகவான் தன் கருட வாகனத்தின் மீது ஏறி, தன் பக்தன் துருவனைக் காண மதுவனத்திற்குச் சென்றார். துருவனின் தியானத்தில் தோன்றிய பகவானின் உருவம் கண நேரத்தில் மறைய, அவர் தியானம் தடைப்பட்டு கண் விழித்துப் பார்க்க பகவான் அவர் கண்ணெதிரே நின்று கொண்டிருந்தார். பகவானை நேரில் கண்ட துருவன் சாஸ்டாங்கமாக அவருக்கு நமஸ்காரம் செய்து, அவருடைய பாதங்களை தன் இதழ்களினால் முத்தமிட்டு, தன் இரு கரங்களாலும் பகவானை அணைத்துக் கொண்டார். குவித்த கரங்களுடன் தன் முன்னே நின்று கொண்டிருந்த துருவனை, கருணையுடன் பகவான் தன் சங்கால் தொட்டார். அதனால் அருள் பெற்ற துருவன், பகவானை துதி பாடினார்.

 துருவனுக்கு அவர் விரும்பியவாறு. பகவான் விஷ்ணு வரமளித்தல்

பகவான் துருவனிடம் “அரசகுமாரனே, புனித மான விரதங்களை நீ நிறைவேற்றி இருக்கிறாய் உனது உள்ளத்தின் ஆசையைநான் அறிவேன்.அந்த ஆசை பேராசையாகவும், நிறைவேற்றுவதற்கு அரிதானதாக இருந்த போதிலும், அது நிறைவேற நான் துணை புரிவேன்.

இதுவரைக்கும் யாரும் ஆளாத, சூரியமண்டலங் கள், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களால் சூழப் பட்ட, பிரம்மாவின் கல்ப இறுதியிலும் நிலைத்து நிற்கும், துருவ லோகத்தை உனக்கு நான் அளிக்கப் போகிறேன். செக்கைச் சுற்றி வரும் காளைகள் போல், அனைத்து ஒளி பொருந்திய கிரகங்களும் இந்த கிரகத்தைச் சுற்றி வரும்.

உனது தந்தை வனம் சென்ற பிறகு, முப்பதாயிரம் ஆண்டுகள் இந்நிலவுலகம் முழுவதையும் ஆள் வாய். உனது புலன்கள் அனைத்தும் இறுதி வரை இளமையுடனேயே இருக்கும். முதுமை என் பது உனக்குக் கிடையாது. இவ்வாழ்வில், ஜட வாழ்க் கையின் ஆனந்தத்தை அனுபவிப்பாய். வாழ்வின் இறுதியில் என்னை நினைப்பாய். ஜட உடலை நீத்த பின், எனது உலகத்தை அடைவாய். அதன் பின் இவ்வுலகிற்கு மீண்டும் திரும்பி வரமாட் டாய்” வரமளித்தார். அதன் பின் தன் வாகனமாகிய கருடனின் மீதேறி தன் லோகமாகிய வைகுண் டத்திற்கு திரும்பிச் சென்றார்.

துருவனின் வாழ்க்கை கற்பிக்கும் பாடம்

துருவன் தன் தந்தையினும், மூதாதையரினும் பெரும் நிலையை அடைய விரும்பினான். பெரும் ராஜ்ஜியத்தை ஆள விரும்பினான். அது ஜட ஆசையாக இருந்த போதிலும் அந்த ஆசையை . அவன் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

முதலில் துருவனின் சிற்றன்னையான சுருசி, துருவனின் அந்த ஆசை நிறைவேற பகவான் விஷ்ணுவை வழிபடக் கூறினாள். பின்னர் துருவனின் தாயான சுனீதியும் அதே அறிவுரையைக் கூறி னாள். இறுதியாக நாரதர், துருவனிடம், சிறுவனாக இருப்பதால் அவனுடைய முயற்சியைக் கைவிடுமாறு கூறினார். ஆனால் தன்னால் அந்த ஆசையைக் கைவிடுவது சாத்தியமல்ல என்று உறுதிப்படுத்திய துருவனிடம், நாரதர் துருவனை அவருடைய ஆசையைக் கைவிடச்சொல்வதை விட்டுவிட்டு, அதே ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பகவான் விஷ்ணுவை நோக்கித் தவம் செய்யக் கூறி அதற்கான அறிவுரைகளையும் கூறினார்.

பகவத் கீதை பதம் 3.26ல் பகவான் கிருஷ்ணர் கூறியவாறு, ஜட ஆசை கொண்ட துருவனைக் குழப்பி விடாமல், பக்குவப்பட்ட ஆத்மாவான நாரதர், கிருஷ்ண பக்தியுடன் துருவன் செயல் பட்டு அவன் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வழி காட்டினார்.

பிரபுபாதா பயிற்றுவித்த பக்திக்கான வழி

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபகாச்சாரியர் ஆன ஸ்ரீல பிரபுபாதாவும், நாரதர் போல் தன்னுடைய பக்தர்களுக்கு இவ் வாறே வழிகாட்டினார்.

தங்கள் புலன் இன்பத்தை முற்றிலும் துறந்து பக்தியை முழுவதும் மேற்கொள்ள தயாராக அவர்கள் இருக்கவில்லை. ஆனால், ஸ்ரீல பிரபு பாதாவோ மிக்க கருணையுடன் அவர்கள் சுபாவத் திற்கு ஏற்ப, அவர்கள் இருந்த நிலையைச் சித றடித்து விடாது, அதே சமயம் கிருஷ்ண பக்தித் தொண்டையும் தொடர்ந்து பயிற்சி செய்து வரச்செய்தார்.

இல்லறத்தில் இருந்தவாறோ, தொழிலில் இருந்தவாறோ, வேலையில் இருந்தவாறோ புலனின்பத்தில் ஈடுபட்டு இருந்த பக்தர்களை, கிருஷ்ண பக்தி சேவைகளிலும் ஈடுபடுத்தி, படிப் படியாக அவர்களை கிருஷ்ண பக்தியில் முன்னேற்றி னார். விஞ்ஞானம், ஓவியம், வியாபாரம்,சமையல் மற்றும் அலங்காரம் போன்ற குறிப்பிட்டதுறை களில் ஈடுபாடு கொண்டு அவற்றில் இன்பம் கண்ட வர்களையும், அத்துறைகளிலேயே அவர் கிருஷ்ண பக்தி செயல்களில் ஈடுபடுத்தி, கிருஷ்ண பக்தியில் முன்னேற்றினார். இவ்வாறாக அவர்கள் படிப்படியாக கிருஷ்ண பக்தியில் முன்னேறினர். அவர்கள் ஜட வாழ்க்கை விருப்புகளை கிருஷ்ண பக்தியில் ஸ்ரீல பிரபுபாதா இணைத்தார்.

இது தான் ஸ்ரீல பிரபுபாதாவின் பெருமை. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாது, புலனின்ப வாழ்க்கையில் மூழ்கி சமுதாயத்தின் அடித்தளத்தில் வீழ்ந்து கிடந்த ‘ஹிப்பிகள்’ எனப்படுவோரையும், இம்முறையால் படிப்படியாக பக்தியில் முன் னேற்றி பக்த பாகவதர்களாக்கிய மாபெரும் பெருமை ஸ்ரீல பிரபுபாதாவையேச் சேரும்.

Thank you – KA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question