Saturday, July 27

Understanding Bhagavad Gita (Tamil) / பகவத் கீதையைப் புரிந்துகொள்ளுதல்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

12 செப்டம்பர் 1973ல், லண்டன் நகரில், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் சில பத்திரிகை நிருபர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி.

நிருபர்: பகவத் கீதையில் போதிக்கப்படும் மையக் கருத்து என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: பகவானைப் புரிந்து கொள்வதே மையக் கருத்தாகும். மக்கள் மூடர்களாகி விட்டார்கள். அவர்கள் பகவானைப் பற்றி தெரிந்து கொள்வதையும். தான் யார் என்பதை தெரிந்துகொள்வதையும் மறந்துவிட்டனர். ஒவ்வொருவரும் “நான் இந்த உடல்” என்று தவறாக எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஆன்மீக ஆத்மாக்கள். ஆத்மாவை அறிவதற்கான கல்வியறிவு அவர்களிடம் இல்லை. அனைவரும் அறியாமையில் உள்ளனர். மிகப்பெரிய பேராசிரியர்கள்கூட அறியாமையில் உள்ளனர். இந்த உடல் முடிந்த பிறகு, எல்லாமே முடிந்து விடும்” என்று ரஷ்யாவின் பேராசிரியர் கோட்டாவ்ஸ்கி என்னிடம் கூறினார். ஆனால் அஃது உண்மை அல்ல.

நிருபர்: ஸ்ரீ கிருஷ்ணர் யார் என்பதை எனக்குக் கூற முடியுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: நன்று, கிருஷ்ணரே முழுமுதற் கடவுள். பரம புருஷ பகவான்.

நிருபர்: அவரை அறிந்து கொள்வதால் நமக்கென்ன இலாபம்?

ஸ்ரீல பிரபுபாதர்: பொளதிக வாழ்விலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். அதுவே இலாபம். பொளதிக வாழ்வு என்றால் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றின் சுழற்சி

நிருபர்: நம்மிடம் அவர் எப்படி பேசுவார்?

ஸ்ரீல பிரபுபாதர்; அவர் 5000 வருடங்களுக்கு முன் இந்த உலகத்தில் தோன்றி பகவத் கீதையை உபதேசித்தார். அது பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிருபர்: தாங்கள் “பகவத் கீதை உண்மையுருவில் எழுதியதற்கான காரணம்?

ஸ்ரீல பிரபுபாதர்: உண்மையுருவில்: ஏனெனில், தேவையில்லாமல் பகவத்கீதையை திரித்துக் கூறும் முட்டாள்களும் அயோக்கியர்களும் பலர் உள்ளனர். உதாரணமாக, குருக்ஷேத்திரம் என்பதை எடுத்துக் கொள்வோம். குருக்ஷேத்திரம் என்பது இந்தியாவில் உள்ள ஓர் இடம். அந்த குருக்ஷேத்திரம், பகவத் கீதையில், தர்ம-கேடித்ரே குரு- சேஷத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: (பகவத் கீதை 1.1). அதாவது, குருக்ஷேத்திரம் தர்மம் சம்பந்தபட்ட இடம் என்றும். பாண்டவர்களும் கௌரவர்களும் போர் புரிவதற்காக அங்கு ஒன்று கூடினர் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெயரளவிலான தலைவர்கள், பண்டிதர்கள். அரசியல்வாதிகள், குருக்ஷேத்திரம் “குருக்ஷேத்திரம் என்பது உடலைக் குறிக்கிறது என்றுதவறான அர்த்தத்தைக் கற்பிக்கின்றனர்.

நிருபர்: எனக்கு ஜெபத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். உங்களைப் பின்பற்றுபவர்கள் ஏன் ஜெபம் செய்து கொண்டிருக்கிறார்கள்?

ஸ்ரீல பிரபுபாதர்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம. ராம ராம, ஹரே ஹரே. இஃது உன்னதமான ஒலியதிர்வு, தெய்வீக சப்தம். இதை ஜபம் செய்வதன் மூலம். மூடர்களின் அறியாமை நாளடைவில் நீங்கிவிடும். உண்மை அறிவிற்கு வருவீர்கள். நீங்கள் தூய்மையடைவீர்கள். இந்தியாவில் ஏராளமான பாம்பாட்டிகள் இன்றும் உள்ளனர். அவர்கள் மந்திரத்தின் மூலம் பாம்பின் விஷத்தை வெளியேற்று கின்றனர். பௌதிகமாக அது சாத்தியம் என்றால். ஆன்மீகத்தில் இஃது இன்னும் எளிமையானதாகும்.

நிருபர்: கிருஷ்ண பக்தியைப் பற்றி சிறிது கூறுங்களேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: பகவத் கீதையை உள்ளது உள்ளபடி பின்பற்றுவதே கிருஷ்ண பக்தி. பகவத் கீதையை ஸ்ரீ கிருஷ்ணர் 5000 வருடங்களுக்கு முன் கூறினார். அதையே நாங்கள் அப்படியே பிரச்சாரம் செய்கிறோம். பகவத் கீதையில் கிருஷ்ணர் முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார். அதனால் நாங்களும், ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்று பிரச்சாரம் செய்கிறோம்.

நிருபர்: கிருஷ்ண பக்தி உண்மையானதா?

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், நாங்கள் எங்களது நேரத்தை வீணடிக்கின்றோம் என்று நினைக்கிறீர்களா? நாங்கள் என்ன முட்டாள்களா? இப்படி முட்டாள் தனமான கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்? உண்மையானதா? இஃது உண்மை யல்லஎனில், நாங்கள் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்கிறோம்?

நீருபர்: இஃது இளைஞர்களிடம் மிகவும் புகழ் பெற்றுள்ளது ஏன்?

ஸ்ரீல பிரபுபாதர்: ஏனெனில். அவர்களிடம் அறிவு உள்ளது. அதனால் அவர்கள் இதனை வரவேற்கின்றனர். இளமைப் பருவத்தில்தான் கல்வியறிவு கொடுக்கப்படுகிறது. முதுமையில் அல்ல. வயதானவர்கள் கல்வி கற்க முடியாது. அவன் ஏற்கனவே அறிந்துள்ள அபத்தங்களை மறப்பதற்கே அவனுக்கு இன்னும் ஐம்பது வருடங்கள் ஆகும். சில சமயங்களில், அவர்கள் “வயதான முட்டாள்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இளைஞர்களோ இதில் ஏதோ உள்ளது என்று புரிந்து கொள்கிறார்கள். அவர்களிடம் மூளை இருக்கிறது.

நிரூபர்: மிகவும் நன்றி. நான் தங்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question