
மனிதனுக்கும், கடவுளுக்கும் உள்ள வித்தியாசம்? / Different b/w Human & God?
பொதுவாக மாயாவதிகள் என்பவர்கள் 'எல்லாம் மாயை, மற்றும் கிருஷ்ணரும் மாயை' என்று கூறுவார்கள். கிருஷ்ணர் செயல்முறையில் இதெல்லாம் மாயை அல்ல என்று காட்டினாலும், இது முழுமையாக ஆன்மீகமானது என்று கூறினாலும் அவர்களுடைய மந்த புத்தி 'கிருஷ்ணர் தலையாய பூரண உண்மை' என்று ஏற்றுக் கொள்ளாது.கிருஷ்ணர் 'மன்மனாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு' (ப.கீ. 18.65) 'என்னுடைய பக்தன் ஆவாய். எனக்கு உன் வந்தனைகளை சமர்ப்பிப்பாய். எப்போதும் என்னை நினைத்து இரு' என்று கூறுகிறார்.இதற்கு அந்த அறிஞர்கள் என்று கூறப்படுபவர்கள், "இது கிருஷ்ணர் என்ற நபருக்கு அல்ல. இது அவருள் பொதிந்திருக்கும் ஒன்று'' என்று கூறுவர். இந்த மூடர்களுக்கு கிருஷ்ணரின் அகத்திற்கும் புறத்திற்கும் வித்தியாசம் இல்லை என்று தெரியாது.நமக்கும், கிருஷ்ணருக்கும் வித்தியாசம்?கிருஷ்ணர் பூரணமானவர். இருமைக்கு அங்கு இடமில்லை, இந்த அறிவு அவர்களுக்கு கிடையாத...