Sunday, November 10

மனிதனுக்கும், கடவுளுக்கும் உள்ள வித்தியாசம்? / Different b/w Human & God?

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பொதுவாக மாயாவதிகள் என்பவர்கள் ‘எல்லாம் மாயை, மற்றும் கிருஷ்ணரும் மாயை’ என்று கூறுவார்கள். கிருஷ்ணர் செயல்முறையில் இதெல்லாம் மாயை அல்ல என்று காட்டினாலும், இது முழுமையாக ஆன்மீகமானது என்று கூறினாலும் அவர்களுடைய மந்த புத்தி ‘கிருஷ்ணர் தலையாய பூரண உண்மை’ என்று ஏற்றுக் கொள்ளாது.

கிருஷ்ணர் ‘மன்மனாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு’ (ப.கீ. 18.65) ‘என்னுடைய பக்தன் ஆவாய். எனக்கு உன் வந்தனைகளை சமர்ப்பிப்பாய். எப்போதும் என்னை நினைத்து இரு’ என்று கூறுகிறார்.

இதற்கு அந்த அறிஞர்கள் என்று கூறப்படுபவர்கள், “இது கிருஷ்ணர் என்ற நபருக்கு அல்ல. இது அவருள் பொதிந்திருக்கும் ஒன்று” என்று கூறுவர். இந்த மூடர்களுக்கு கிருஷ்ணரின் அகத்திற்கும் புறத்திற்கும் வித்தியாசம் இல்லை என்று தெரியாது.

நமக்கும், கிருஷ்ணருக்கும் வித்தியாசம்?

கிருஷ்ணர் பூரணமானவர். இருமைக்கு அங்கு இடமில்லை, இந்த அறிவு அவர்களுக்கு கிடையாது. ஆனால் அவர்கள் தங்களை பேரறிஞர்கள் என்று காட்டிக் கொள்கிறார்கள்.

கிருஷ்ணர் உள்ளும் புறமும் வேறுபட்டவர் அல்ல. உயிர்வாழிகளான நாம் ‘நான் ஆத்மா. இந்த உடலில் இருக்கிறேன்’ என்று கூறலாம். ஆனால் கிருஷ்ணர் அப்படியல்ல. அவரிடம் ஆத்மா, உடல் என்று வேறுபாடு இல்லை. அவரிடம் ஆன்மீகமானது, பெளதிகமானது என்ற வேற்றுமை இல்லை. அவரைப் பொறுத்தவரை எல்லாமே ஆன்மீகம் தான்

ஜடசக்தி மற்றும் ஆன்மீக சக்தி இரண்டுமே கிருஷ்ணருடைய சக்திகள். வித்தியாசம் இல்லை. அவர் ஜடசக்தியை ஆன்மீகமாக மாற்றுவார். ஆன்மீக சக்தியை ஜடசக்தியாக மாற்றுவார். ஏனெனில் அவரே இரண்டு சக்திகளுக்கும் மூல காரணம் ஆவார்.

உதாரணமாக சிறந்த எலக்ட்ரீசியன் ஒருவர், ஒரு வெப்பப்படுத்தும் சாதனத்தை குளிர் சாதன மாக மாற்றுவார். அதேபோல் குளிர்சாதனத்தை வெப்பமூட்டும் சாதனமாக மாற்றுவார். இரண்டும் நேர் எதிரானவை. ஏனெனில் அவருக்கு மின்சக்தியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியும்.

கிருஷ்ணர் பூரணமானவர்

அதுபோல் கிருஷ்ணர் கூறுகிறார் “இந்த ஜட பொருட்கள் எல்லாம் என்னுடைய பௌதீக சக்தி. மேலும் ஜீவராசிகள் எல்லாம் என்னுடைய ஆன்மீக சக்தி”. ஜடசக்தியும் ஆன்மீக சக்தியும் இணைந்து பௌதிக உலகமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால் கிருஷ்ணர் பூரணமானவர்.

கிருஷ்ணருக்கு பௌதிகமாகவோ, ஆன்மீகமாக வோ செய்ய வேண்டியது எதுவுமில்லை. இன்னொரு உதாரணம், ஒரு அரசாங்கம்.

அரசாங்கத்தில் பலவித துறைகள் உண்டு. அதில் குற்றவியல்துறையும் கல்வித்துறையும் உண்டு. கல்வித்துறை மக்களுக்கு அறிவூட்டுகிறது. குற்றவியல் துறை குற்றம் செய்தவர்களை தண்டிக்கிறது. நாம் இந்த வித்யாசத்தை உணரலாம்.

கல்வித்துறையில் அரசாங்கம் பரந்த மனப்பான்மை உடையதாய் எல்லோருக்கும் கல்வியை வழங்குகிறது. ஆர்வமுடன் கற்று மகிழ்கின்றனர்.

ஆனால் குற்றவியல்துறை, மக்களும் தண்டிக்கிறது. எனவே அரசாங்கம் வேறுபாடு காட்டுவதாக ஒருவர் கருதக் கூடும். ஒரு துறை சாதகமாகவும் வேறொரு துறை பாதகமாகவும் செயல்படுவதாக நினைக்கலாம். ஆனால் அரசாங்கத்தை பொறுத்தவரை அதற்கு இரண்டு துறைகளும் சமமே. சில நேரங்களில் அரசாங்கம் குற்றவியல் துறைக்கு கல்வித்துறையைவிட அதிகம் செலவிட வேண்டி வரும். ஏனெனில் இரண்டு துறைகளையும் பராமரிக்க வேண்டி உள்ளது.

 கடலளவு நீரும், ஒருதுளியும்

நாம் கிருஷ்ணருடைய அங்க உறுப்புகள், ஆதலால் நமக்கு சிறிதளவு சுதந்திரம் உண்டு. எவ்வாறு கடலின் ஒரு துளி நீரிலும் கூட உப்புத் தன்மை இருப்பது போல். எனவே கடலின் தன்மையை ஒவ்வொரு சொட்டு நீரிலும் காணலாம். அதுபோல் பகவானின் தன்மையான சுதந்திரம் அவருடைய அங்க உறுப்பான நமக்கும் உண்டு.

நீங்கள் எல்லாம் இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி கிருஷ்ண உணர்வை எடுத்துள்ளீர்கள். அதே சமயம் எல்லா அமெரிக்க பையன்களும் பெண்களும் கிருஷ்ண உணர்வை மேற்கொள்ளவில்லை. இது ஒன்றும் கட்டாயம் இல்லை. யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். யாரொருவர் புத்திசாலியோ அவர் கிருஷ்ண உணர்வை எடுத்துக் கொள்வார். இது அவருக்குள்ள சுதந்திரத்தினால் தான் சாத்தியம். கடவுள், நமக்கு சிறிதளவு சுதந்திரம் கொடுத்துள்ளதால் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று ‘பௌதிகம்’, மற்றொன்று ‘ஆன்மீகம்’.

பௌதிக சக்தி, ‘மாயா’ என்று அழைக்கப்படுகிறது யார் ஒருவர்.அறிவுப்பற்றாக்குறையில் இருக்கிறாரோ அவருக்கு கிருஷ்ணருடைய ஆன்மீக சக்தியை பார்க்க முடியாது. அவர்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே தான் அவர்கள் மாயாவதி என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த துரதிர்ஷ்ட வாதியான மாயாவதியால் ஜபம் செய்ய முடியாது. அவர்கள் ஜபம் செய்வதை உணர்ச்சி வசப்படுவது என்று விமர்சனம் செய்வார்கள்.

ஸ்ரீசைதன்ய மகாபிரபு காசி நகரத்தில் கீர்த்தனை செய்யும்போது இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டார். ஒரு புகழ் பெற்ற மாயாவதி சந்நியாசியான பிரகாசானந்த சரஸ்வதி கூறினார், “இந்த சந்தியாசி (சைதன்ய மஹாபிரபு) உணர்ச்சி வசப்படுபவர். ஒரு சந்நியாசியின் தொழில் வேதங்களை படிப்பது. ஆனால் இவர் நடனமாடியும் கீர்த்தனை செய்து கொண்டும் இருக்கிறார்”.

எனவே சைதன்ய மகாபிரபு இந்த மாயாவதி சந்நியாசியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மகாபிரபு அவருக்கு வேதாந்தத்தை கற்பித்தார். அவரை தோற்கடிக்கவும் செய்தார். அந்த மாயாவதி சந்நியாசி தனது 60,000 சீடர்களுடன் சைதன்ய மகாபிரபுவின் சீடர்களானார். எனவே நீங்கள் கீர்த்தனை செய்வது நடனமாடுவதுடன் தத்துவமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் கிருஷ்ணரின் வீரர்கள்

நிறைய மாயாவாதிகள் உள்ளனர். நீங்கள் அவர்களை தோற்கடிக்க வேண்டும். நாம் கோழைகள் அல்ல. நாம் கிருஷ்ணரின் வீரர்கள். எப்போதெல்லாம் மாயாவதி தாக்குகிறார்களோ அப்போது நீங்கள் உடனே அவர்களை தோற்கடிக்க வேண்டும். நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டு வருகின்றன.

வாசுதேவே பகவதி பக்தி யோக பிரயோஜித ஜனயதி ஆஸூ வைராக்யம் ஞானம் யத் அஹைதுகம் (பாக.1.2.7)

நீங்கள் ஒரு தூய பக்தரானால், இந்த மாயாவாதி தத்துவத்தை தோற்கடிக்கும் ஞானத்தை தெரிய வருவீர்கள். கிருஷ்ணர் உங்களுள் இருக்கிறார். ஒரு பக்தர் உண்மையாகவும் தீவிரமாகவும் பயிற்சி செய்து வந்தால் கிருஷ்ணர் எல்லா அறிவையும் கொடுப்பார். ஆனால் நீங்கள் சந்தேகப்பட்டால் இந்த ஞானத்தை கிருஷ்ணர் தரமாட்டார். புத்தியில்லாதவரிடம் அவர் பேச மாட்டார். உண்மையான பக்தி சேவையில் ஈடுபட்டால் அப்போது கிருஷ்ணர் உள்ளிருந்து பேசுவார். உண்மை என்னவெனில் யாரொருவர் கிருஷ்ணருடைய லீலைகள் பற்றி கேட்கவில்லையோ அவர்களுடைய காது பாம்புக்குழி என்று கூறப்பட்டுள்ளது.

 நீங்கள் நெல் வயலில் நடந்து சென்றால் நீங்கள் நிறைய குழிகளை பார்க்கலாம். கடற்கரையில் கூட நீங்கள் நிறைய குழிகளைகாணலாம். நெற்வயல்களில், நெல்லை சாப்பிடுவதற்காக வரும் எலிகள் நிறைய குழிகளை தோண்டி அவற்றில் வசிக்கின்றன. இதை பாம்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன. அவை குழிகளில் நுழைந்து எலியை உண்டு வாழ்கின்றன. இவ்வாறு இந்த குழிகளில் பாம்பு வசிப்பதால் யாரும் அதை பயன்படுத்த மாட்டார்கள். அதுபோல் நம்முடைய காது கிருஷ்ணரைப் பற்றிய செய்தியை கேட்காவிடில் அது சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்று அர்த்தம்.

அதுபோல் உங்களுக்கு நாக்கு உள்ளது. நாம் தேவையில்லாத விஷயங்களை பேசுகிறோம், பாடுகிறோம், அதன் முடிவு நாம் நம்முடைய வாழ்நாளை குறைத்துக் கொண்டே வருகிறோம். கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை பயன்படுத்தாமல் வீணாக்குகிறோம். ஏனெனில் சூரியனுடைய வேலை கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய வாழ்நாளை குறைத்துக் கொண்டே வருவதாகும்.எவ்வாறு தவளை கத்திக் கொண்டே யிருப்பதால் பாம்புக்கு இரையாகிறதோ அது போல், யாரொருவர் கிருஷ்ண கதையை பேசாமல் தேவையற்ற விஷயங்களை பேசுகிறார்களோ அவர்கள் எமராஜனை வரவழைக்கின்றனர்.

எல்லாம் கிருஷ்ணருக்காக பயன்படுத்துங்கள்

 (பாகவதம் 2.3.20 பொருளுரை) நம்முடைய உடல் அங்கங்கள் எல்லாம் பகவானுக்கு பக்தி சேவை செய்வதில் ஈடுபடுகின்றன. இது  ஆன்மீகப் பொறியின் உன்னத சக்தி. எனவே இது ஒரு பக்தர் நூறு சதவிகிதம் கிருஷ்ணருடைய சேவையில் ஈடுபடுகிறார். ஒருவர் தன்னுடைய புலன்களை தூய்மைப்படுத்தும் போது. பகவானுக்கு சேவையில் ஈடுபட முடியும். புலன்களின் உதவியால் தான் ஒருவர் பகவானுக்கு சேவை செய்ய முடியும் புலன்கள் மற்றும் புலனுகர்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது அவை தூய்மையற்றவை மற்றும் பௌதிகமானவை என்றும் கருதப்படுகின்றன.

காதுகள் மூலம் வானொலி செய்தியை கேட்கலாம். சில விளம்பரங்கள் மற்றும் பல விஷயங்களை கேட்கலாம். அதே காதுகள் மூலம் நீங்கள் ‘ஹரே கிருஷ்ணா’ உச்சரிப்பையும் கேட்கலாம். நீங்கள் சொந்த புலனுகர்ச்சிக்காக எதையாவதுகாதில் கேட்டால் அது பௌதிகமானது. நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி கேட்டால் அது ஆன்மீகமானது. இதுதான் வித்தியாசம். உங்களுக்கு காது, நாக்கு, கை, கால், கண் எல்லாம் உள்ளது. நீங்கள் அவற்றை பௌதிக காரியங்கள் அல்லது ஆன்மீக காரியங்களுக்கு பயன்படுத்தலாம். நீங்கள் உங்கள் உணர்வு நிலையை மாற்றினால் நீங்கள் இதை உணர்வீர்கள். உணர்வு நிலையை கிருஷ்ண உணர்வு நிலையாக மாற்றி புலன்களை கிருஷ்ணருக்காக பயன்படுத்துங்கள்.

~ ஸ்ரீல பிரபுபாதர் (1972 ஜூன் 16ம் தேதி, இடம் : விருந்தாவனம்) ஸ்ரீமத் பாகவத சிற்ப்புரையிலிருந்து 2.3.20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question