Saturday, July 27

Gita Saaram (Tamil) / கீதாசாரம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

வழங்கியவர்: தெய்வத்திரு. அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியர்

தெய்வீக ஞானத்தை அங்கீகரிக்கப்பட்ட சீடப் பரம்பரையின் மூலம் பெறாமல், அனுபவ அறிவை அடிப்படையாகக் கொண்ட விவாதங்களால் கவரப்பட்டு, வழிதவறிச் செல்லும் நபர்களுக்காக பகவத் கீதையின் முக்கிய கருத்துக்களை இங்கு சுருக்கமாக கீதாசாரம் என்னும் தலைப்பில் தொகுத்துள்ளோம். (1940களில் வைராக்ய வித்யா எனும் தலைப்பில் ஸ்ரீல பிரபுபாதரால் வங்காள மொழியில் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளில் ஒன்று)

  1. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பரம் பொருள். அவரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள். அவரே எல்லா காரணங்களுக்கும் காரணம் “யாரிட மிருந்து இவ்வுலகம் தோன்றியதோ, யாரால் இவ்வுலகம் தோற்றுவிக்கப் பட்டதோ, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் யார் கட்டுப் படுத்துகின்றாரோ, அவரே கடவுள்” என்று கடவுளைப் பற்றி வேதாந்த சூத்திரம் வர்ணிக்கின்றது. எல்லையற்ற பிரிவுகளைக் கொண்ட இந்த பௌதிக உலகம், அளவிட முடியாத ஆன்மீக வானமான வைகுண்டம் ஆகிய இரண்டிற்கும் முக்கிய ஆதாரம் அவரே. ஆன்மீக உருவில் நித்தியமாக வசிக்கும் அவர். உன்னத பரம புருஷராவார். அவரது உடலிலிருந்து வரும் பிரகாசமான ஒளியே பிரம்மஜோதி. அவரோ தன்னிகரற்ற பரம்பொருள். ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருப்பவரும். பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப் பவருமான பரமாத்மா, ஸ்ரீ கிருஷ்ணரின் விரிவங்கமே.
  2. ஜீவன்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நுண்ணிய பகுதிகளாவர், ஜீவன். குணத்தின் அடிப்படையில் இறைவனுடன் ஒன்றாக இருந்தாலும், அளவைப் பொறுத்தவரையில் வேறுபட்டவன். ஏனெனில், பகவான் எல்லையற்றவர். ஜீவனோ மிகச்சிறிய வன். பகவானின் நடுநிலை சக்தியில் அமைந்துள்ள ஜீவன்கள். எண்ணிப் பார்க்க முடியாத அளவில் ஒரே சமயத்தில் பகவானுடன் ஒன்றாகவும் மாறுபட்டும் உள்ளனர்.
  3. பகவானின் நடுநிலை சக்தியில் படைக்கப்பட்டு. உள்ள ஜீவன்கள். வைகுண்டத்திலோ இந்த பௌதிக உலகிலோ நிரந்தரமாக வாழும் தகுதியை உடையவர்கள். ஜீவனின் எண்ணிலடங்காத பாவச் செயல்களே அவன் இந்த பௌதிக அறியாமையில் வீழ்ச்சியுற்று இருப்பதற் கான காரணமாகும். மேலும், இத்தகு களங்கமுற்ற சூழலில். பிரம்மாவின் கிரகத்திலிருந்து பாதாள லோகம் வரை மேலும் கீழுமாக அவன் பயணம் செய்கின்றான். பிறப்பு, இறப்பு, முதுமை. நோய் ஆகியவற்றை இப்பௌதிக உலகில் அனுபவிக்கும் ஜீவன். மனதாலும் உடலாலும் எழும் துன்பங்கள், மற்ற உயிர்வாழிகளால் கொடுக்கப்படும் துன்பங்கள். தேவர்களால் வரக்கூடிய துன்பங்கள் (இயற்கைச் சீற்றங்கள்) ஆகிய மூவகைத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றான்.
  4. பௌதிக உலகம் என்றழைக்கப் படும் பலமுகம் கொண்ட சிறைச்சாலையில் ஜீவன்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பராமரிக்கப்பட்டு. அழிக்கப்படுவதே இவ்வுலகின் இயற்கை யாகும். படைப்பின் போதும் பராமரிப்பின் போதும் இந்த பௌதிக இயற்கை தோன்றிய நிலையில் இருக்கும். அழிவின் போது அது மறைந்துவிடுகிறது. சில நேரத்தில் தோன்றியும் சில நேரத்தில் தோன்றாமலும் இருப்பதால், இந்த பெளதிக மாய உலகம். பகவானின் தாழ்ந்த சக்தியாகும்.
  1. தோன்றி மறையும் பகவானின் இந்த பகிரங்க (வெளிப்புற சக்திக்கு அப்பால். திவ்யமானதும் ஆன்மீகத் தன்மை வாய்ந்ததுமான மற்றொரு இயற்கை உள்ளது. அஃது என்றென்றும் நிலைத்திருக்கும் வைகுண்டம் எனப்படும் ஆன்மீக வானமாகும். அந்த ஆன்மீக உலகம் என்றும் நிலைத்திருப்பது, அஃது என்றுமே மறையாது. படைப்பிற்கோ அழிவிற்கோ அஃது உட்பட்டதல்ல.
  2. மாயையான இந்த பௌதிக இயற்கையுடன் தன்னை அடையாளம் காண்பதால். கர்வத்தின் காரணத்தினால். பரம் புருஷ பகவானைப் பற்றி

பகவத் கீதை அன்றி வேறு கதி உண்டோ?


கார்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்
பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான் – சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை
என்னினைந்து போக்குவரிப் போது

கருமை நிற மேனியுடையவரும் கையில் சக்கரம் ஏந்தியவரும் (நன்கு உழுத நிலம் போன்ற வலிமையான வயிற்றினை உடையவரும் பாம்பில் சயனிப்பவருமான ஸ்ரீ கிருஷ்ணரின் சிறப்பு வாய்ந்த சொற்களை (பகவத் கீதையை) நினைத்து போக்காவிடில் நம்மைச் சூழ்ந்துள்ள வினைகளின் ஆழ்ந்த துயரை வேறு எதை நினைத்து போக்க முடியும்?
– நம்மாழ்வார் அருளிய பெரிய திருவந்தாதி (86)

ஏற்க வேண்டும். நாம் ஏற்கனவே வீழ்ச்சியுற்றவர்களாக உள்ளோம். இந்த வீழ்ச்சியுற்ற நிலையிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க வேண்டுமெனில். கிருஷ்ணரிடமிருந்து உபதேசத்தை ஏற்க வேண்டும். இதிலிருந்து சற்றும் பிறழாமல் இருக்க வேண்டும்; அயோக்கியத்தனமான வழியில் தான்தோன்றித் தனமாக பகவத் கீதைக்கு வியாக்கியானம் கொடுக்க முயற்சி செய்யக் கூடாது.

சூரியதேவனுக்கு உபதேசிக்கப்பட்டது

சூரியனை அனைவரும் காண் கின்றனர். ஆனால் அதனுள் என்ன உள்ளது என்பதை பெயரளவு விஞ்ஞானிகளாலோ தத்துவவாதி களாலோ கூற முடியாது. ஆனால் சூரிய தேவனிடம் நேருக்கு நேர் பேச முடியும். கிருஷ்ணர் அவ்வாறு பேசியதற்கான தகவல் இந்த ஸ்லோகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்பதால். அவரால் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். சூரிய கிரகம் வெப்பம் மிகுந்த கிரகம் என்பதால். அங்குள்ள உயிர்வாழிகள் நெருப்பினால் ஆன உடலை பெற்றுள்ளனர். இங்கு வாழும் மக்களின் உடல்கள் நிலத்தினால் ஆக்கப்பட்டவை. அதே போல இதர உலகங்களிலோ அங்கு வசிப்பதற்கு ஏற்றவாறு நீரினாலோ. நெருப்பினாலோ. காற்றினாலோ உடல்கள் இருக்கக் கூடும்.

உதாரணமாக. நாம் இப்பூமியில் வாழ்வதற்குத் தகுந்த உடலை பெற்றிருக்கலாம். மீன் நீரில் வாழ்வதற்குத் தகுந்த உடலை பெற்றிருக்கலாம். நீரில் வாழ்பவை நிலத்தில் வாழ முடியாது. நிலத்தில் வாழும் நம்மால் சமுத்திரத்தினுள் வாழ முடியாது. நம்மால் நீரில் வாழ முடியாது என்பதால், நீரில் வாழ்வதே அசாத்தியம் என்பது பொருளல்ல. அதுபோல, நம்மால் நெருப்பில் வாழ முடியாது என்பதால், மற்றவர்களாலும் அது முடியாது என்று நினைத்து விடக் கூடாது, அவ்வாறு நினைப்பது முட்டாள்தனம். சூரிய கிரகம் நெருப்பினால் உண்டானது. நெருப்பி னாலான உடல்களைக் கொண்டு அங்கு வசிக்கலாம். எவ்வாறு நீரிலுள்ள சூழ்நிலை நிலத்திலிருந்து மாறுபட்டுள்ளதோ. அதுபோல ஒவ்வொரு கிரகத்திலும் சூழ்நிலைகள் மாறுபடுகின்றன.

முதல் ஆன்மீக பாடம்

ஆனால் நிலம், நீர், நெருப்பு, காற்று. ஆகாயம் என அனைத்து சூழ்நிலையிலும் உயிர்வாழிகள் உண்டு. இப்படி பலதரப்பட்ட உடலை உயிர்வாழி களான நாம் ஏற்றிருந்தாலும், நாம் அனைவரும் ஆத்மாக்களே. இந்த உடல் ஓர் உடையைப் போன்றது என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. நான் இந்தியன் என்னும் உடையையும் நீங்கள் அமெரிக்கன் என்னும் உடையையும் அணிந்துள்ளீர் என்பதே வேறுபாடு. நான் இந்த உடலல்ல என்பதே ஆன்மீகத்தின் முதல் பாடம். பின்னரே ஆன்மீக அறிவு தொடங்குகின்றது. இல்லையெனில், ஆன்மீக ஞானத்திற்கான வாய்ப்பு இல்லை.

எவனொருவன் தன்னை இந்த உடல் என்று தவறாக அடையாளம் காண்கின்றானோ. அவன் கொடூரமான விலங்காக கருதப்பட வேண்டும் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (10.84.13) கூறப்பட்டுள்ளது. இந்த மிருகத்தனமே உலகெங்கிலும் சென்று கொண்டிருக்கிறது. நான் அமெரிக்கன். இந்தியன், பிராமணன், சத்திரியன் என்று கூறுவதெல்லாம் வெறும் அயோக்கியத் தனமே. இதைக் கடந்து செல்லும் போதே ஆன்மீக ஞானம் தொடங்குகின்றது. அதுவே பக்தி-யோகம், இந்த பக்தி யோக முறையை புரிந்துகொள்வதற்கு அஹம் ப்ரஹ்மாஸ்மி, நான் ஆன்மீக ஆத்மா என்பதை உணர்ந்திருக்க வேண்டும். ஏனெனில், பக்தி யோகத்தினால் மட்டுமே ஆன்மீகத் தளத்திற்கு வர முடியும்.

நமது உண்மையான நிலை

வேதப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நான்கு வர்ணங்கள் மற்றும் ஆஸ்ரமங்களான பிராமணர், சத்திரியர். வைசியர். சூத்திரர். பிரம்மசாரி. கிருஹஸ்தன், வானபிரஸ்தன். சந்நியாசி போன்ற உடலளவு அடையாளங்கள்

அனைத்தையும் பகவான் சைதன்ய மஹாபிரபு நிராகரிக்கிறார். ஒருவரது நிலை என்னவாக இருக்க வேண்டு மென்று அவர் கூறுகிறார்: கோபி-பர்து: பத-கமலயோர் தாஸு-தாஸானுதாஸ: (சைதன்ய சரிதாம்ருதம், மத்ய லீலை 13.80). “கோபியர்களது தலைவனின் நித்ய சேவகன், அதாவது, கிருஷ்ணரது சேவகன். மேலும், ஜீவேர ஸ்வரூப ஹயா நித்ய-கிருஷ்ண-தாஸ் (சைதன்ய சரிதாம்ருதம், மத்ய லீலை 20.108) என்ற கூற்றின் மூலம். “ஜீவன்களின் அறியாமையே. உண்மையான அடையாளம், கிருஷ்ண ருக்கு நித்தியமாக சேவை புரிவதே என்பதை அவர் பிரச்சாரம் செய்தார்.

கிருஷ்ண பக்தியில் இணையுங்கள்

கிருஷ்ணர் இங்கு வந்ததை பயன்படுத்திக் கொண்டு அவர் விட்டுச் சென்ற பகவத் கீதையை படித்து வாழ்க்கையை பக்குவப்படுத்தி கொள்வோமாக. இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். இஃது ஒரு போலியான இயக்கம் அல்ல. மாறாக விஞ்ஞானப் பூர்வமான இயக்கம். வெளிநாட்டவர்களான ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் இவ்வாய்ப்பினை பின்பற்றி நன்மை அடைகின்றனர். ஏன் இந்திய இளைஞர்கள் இதை எடுத்துக் கொள்ள தயங்குகின்றனர்! இத்தகு தயக்கம் அவர்களுக்கு நல்ல தல்ல. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை மும்முரமாக பரப்புவோம். அதன் மூலம் துயருற்றிருக்கும் மனித சமுதாயத்தை மீட்க முடியும். இதுவே எமது நோக்கம். மக்கள் துன்புறுவதற்கான காரணம் தேவையான அனைத்தும் இங்கு நிறைவாகவே உள்ளது. அயோக்கியர்களாலும் திருடர் களின் தவறான வழி நடத்துதலாலும் மட்டுமே மக்கள் துன்புறுகின்றனர். ஆகையால் நீங்கள் இந்த கிருஷ்ண பக்தியில் பக்குவமுடையவர்களாகி, நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள். உமது வாழ்வு வெற்றிகரமாக அமையும்.

மிக்க நன்றி ஹரே கிருஷ்ண!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question