Wednesday, December 4

உங்கள் இயக்கத்தில் இளம் வயதினர் அதிகம் ஏன்? / Why more young people in ISKCON?

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பிரபுபாதாவை யாரெல்லாம் முதல் முறையாக பார்க்கிறார்களோ அவர்களது வாழ்க்கையில் அது மிகவும் முக்கியமான நிகழ்வாக இருக்கும்.

அப்படி ஒரு நிகழ்வு, ஸ்ரீல பிரபுபாதா கெய்ன்ஸ்வெல நகரத்திற்கு வந்த போதும் நடந்தது.

 புளோரிடாவில் உள்ள இந்த ‘கெய்ன்ஸ்வெல’ நகரம் மிக மிகச் சிறிய இடமாகும். அதே போல் இங்கிருந்த இஸ்கான் மையமும் சிறியது தான்.

உலகளவிலான இஸ்கான் கோயில் பட்டியலில் கூட இதன் பெயர் இடம் பெற வில்லை. இருந்தும் பிரபுபாதா வந்தது எங்களுக்கு மிகவும் சந்தோசம்             வந்ததும் பிரபுபாதா ஒரு அறிமுக உரையை அளித்தார்.

அந்த உரையில் பிரபுபாதா “ஸ்ரீ சைதன்ய மஹாப்பிரபுவின் பிறப்பிடத் திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் இந்த இடத்தில் இருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷம்” என்றார்.

தொடர்ந்து பிரபுபாதா பேசுகையில், ‘எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இந்த இடத்தில் நீங்கள் எல்லோரும் இவ்வளவு சந்தோஷமாக பகவானின் நாமத்தை சொல்லி ஆடி பாடுவதை பார்ப்பதற்கு எனக்கு மேலும் மேலும் சந்தோஷம்” என்றார்.

அப்பொழுது அங்கு ஒரு பெண் பத்திரிக்கை நிருபர் வந்திருந்தார். அவர் ஒரு முக்கியமான கேள்வியினை பிரபுபாதாவிடம் கேட்டார்.

 “பிரபுபாதா! உங்கள் இயக்கத்தில், பெரும்பாலும் இளம் வயதினர் தான் அதிகம் இருக்கின்றனர் ஏன்? முதியவர்களை காண முடியவில்லையே” என்றார்.

உடனே பிரபுபாதா சட்டென்று,

“பல்கலைக் கழகங்களில் எந்த தரப்பினரை அதிகம் காண்கிறீர்கள்? இளம் வயதினரையா? முதுமையானவர்களையா?”

‘வயதானவர்களை அங்கு நீங்கள் காண முடியாது. ஏனெனில் நீங்கள் இளம் வயதில்தான் கல்வி கற்க முடியும். அதுபோல ஆன்மீக பயிற்சிகளுக்கும் இளம் வயதினருக்குத் தான் முதலிடம். வயதான பிறகு பார்க்கலாம் என்றால் அது மூடத்தனம்” என்று பதிலளித்தார்.

கேள்வி கேட்ட நிருபரும், அங்கு கூடியிருந்தவர்களும் பிரபுபாதாவின் ஆணித்தரமான பேச்சை வரவேற்றனர்.

பிறகு பிரபுபாதா, புளோரிடா பல்கலைக்கழகத்தில் சுமார் எழுநூறு மாணவர்களுக்கு பகவத் கீதை சிறப்புரை வழங்கினார்.

இதில் பகவத்கீதையின் ஆறாம் அத்தியாயத்திலிருந்து தத்துவார்த்தமாக பேசினார்.

தொடர்ந்து ஆழ்ந்த தத்துவரீதியாக அளித்த விளக்கம் எனக்கே சற்று புரிவதற்கு கடினமாக இருந்தன. எனவே நான் நினைத்தேன், நமக்கே ஒன்றும் புரிய வில்லையே, இந்த மாணவர்களுக்கு எப்படி தத்துவரீதியான இந்த சொற்பொழிவு புரிய போகிறது” என்று.

ஆனால் என்ன ஆச்சர்யம். சொற்பொழிவு முடிந்து பிரபுபாதா கீழே இறங்கிய போது, மாணவர்கள் கூட்டம் கூட்டமாக பின் சென்றனர்.

அவர்கள் அருகில் சென்ற நான் மாணவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை சற்று ஆழ்ந்து கேட்டேன்.

“ஸ்வாமிஜி வழங்கிய பகவத்கீதை சொற்பொழிவு மிகவும் அருமை” இது வரை நாம் கேட்டதிலேயே இது தான் மிக சிறந்த விளக்கங்கள் அடங்கிய சொற்பொழிவு” “இந்த சொற்பொழிவு நல்ல ஆனந்தமாக இருந்தது” இப்படி மாணவர்கள் பேசிக் கொண்டே நடந்து சென்றனர்.

இதைக் கேட்டதும் எனக்கு வியப்பும், சந்தோஷமும் ஏற்பட்டது.

உரையை கேட்க வந்திருப்பவர்கள் யார் என்பதை அறிந்து அவர்களது தேவைக்கேற்ப விழிப்போடு பேசுவதில் திறன் பெற்றவர் பிரபுபாதா. –

~திரு.அமரேந்திர பிரபு


ஸ்ரீல பிரபுபாதா வழங்கிய சொற்பொழிவுகளை கேட்டும், அவரது புத்தகங்களை படித்தும் எராளமான மாணவர்கள், இளைஞர்கள் நல்வழிப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks to Krishna Amutham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question