புத்த பூர்ணிமா I Buddha Purniama (Tamil)
புத்த பூர்ணிமா- பகவான் ஸ்ரீ புத்தர் அவதார தினம்கலியுக ஆரம்பத்தில், கயா மாநிலத்தில், அஞ்சனாவின் புதல்வரான புத்த பகவான் தோன்றினார். நம்பிக்கையுள்ள ஆஸ்திகர்களிடம் பொறாமை கொண்டவர்களை தந்திரமாக வழிப்படுத்துவதே அவருடைய அவதார நோக்கமாகும். (ஸ்ரீமத் பாகவதம் - 1.3.24)பொருளுரைமுழுமுதற் கடவுளின் ஒரு சக்திவாய்ந்த அவதாரமான பகவான் புத்தர், அஞ்சனா தேவியின் புதல்வராக கயா (பீகார்) மாநிலத்தில் தோன்றினார். அவர் தமது சொந்த கருத்தான அகிம்சையைப் பிரச்சாரம் செய்து, வேதங்களில் அனுமதிக்கப்பட்ட மிருக பலியையும் கூட நிராகரித்தார். புத்த பகவான் தோன்றிய சமயத்தில், மக்கள் பொதுவாக நாஸ்திகத் தன்மை கொண்டவர்களாகவும், மிருக மாமிசத்தை விரும்பி உண்பவர்களாகவும் இருந்தனர். யாக பலி என்ற பெயரில், கிட்டத்தட்ட ஒவ்வொரு இடமும் ஒரு கசாப்புக் கூடமாக மாற்றப்பட்டு இருந்தது. மேலும் மக்கள் மிருக பலியில் எவ்வித கட்டுப்பாடும் ...