Tuesday, June 25

Author: unknown Social media

Srila Bhaktivinoda Thakura (Tamil) Iஸ்ரீல பக்திவினோத தாகுரர்

Srila Bhaktivinoda Thakura (Tamil) Iஸ்ரீல பக்திவினோத தாகுரர்

வாழ்க்கை வரலாறு
பக்திவினோத தாகுர் தன் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடைவிடாது தொண்டு செய்வதில் கழித்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க அவர் ஆற்றிய நற்தொண்டானது ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும். இந்த தனி ஒருவரின் ஆன்மீக முயற்சியும் தெய்வீக எழுத்துகளும் பகவான் சைதன்யரின் உபதேசங்களை படித்தவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தது. சைதன்ய மஹாபிரபுவின் ஆழ்ந்த, உயர்ந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட வைஷ்ணவ சம்பிரதாயம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவு சீர்குலைந்து இருந்தது என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க இயலாது. சைதன்ய மஹாபிரபுவின் தத்துவங்கள் மிகவும் ஆழமானவை, கற்றறிந்த பண்டிதர்களாலும் அதன் ஆழத்தை உணர முடியாது. இருப்பினும், பண்பாடற்ற மனிதர்களின் அறியாமையின் காரணத்தினால், அவரது உயர்ந்த வைஷ்ணவ சம்பிரதாயம் சீர்குலைந்து காணப்பட்டது. வேதங்கள்,...
Bhishma Panchaka (Tamil) / பீஷ்ம  பஞ்சங்கம்

Bhishma Panchaka (Tamil) / பீஷ்ம பஞ்சங்கம்

திருவிழாக்கள், Festivals-Tamil
தாமோதர மாதத்தின் கடைசி ஐந்து நாட்களை பீஷ்ம பஞ்சங்கம் அல்லது விஷ்ணு பஞ்சங்கம் என்று அழைக்கப்படுகிறது. பிதாமஹர் பீஷ்மர் கார்த்திகை மாதத்தில் கடைசி ஐந்து நாட்கள் தூய கிருஷ்ண உணர்வில் மிகவும் கடுமையான இந்த விரதத்தை மேற்கொண்டு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தி தொண்டில் ஈடுபட , தனது முழு கவனத்தையும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரில் மூழ்கச் செய்தார். பீஷ்ம பஞ்சங்கம், சதுர்மாஸத்தில் வரும் கடைசி ஐந்து நாட்கள்  அதாவது உத்தான ஏகாதசி முதல் பௌர்ணமி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாட்களில் விரதம்  இருப்பவர்களுக்கு மிகவும் விரைவில்  ஆன்மிக பலன்களை அடைவார்கள். அதுமட்டுமின்றி ஆன்மிக சேவைகளில் வரும் தடைகள் நீங்கி விரைவில் முன்னேற இந்த விரதம் உதவும். விரத முறைகள் ஒரு பக்தருக்கு ஆன்மீகத்தில் முன்னேற, பரம புருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்திபடுத்த சிலபதார்த்தங்களை தவிர்த்து உபவாசம் அனுஷ்டிக்க ம...
சமுதாயத்தைத் திருத்துவதற்கான கல்லூரிகள்

சமுதாயத்தைத் திருத்துவதற்கான கல்லூரிகள்

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
கலி யுகத்தின் சீரழிந்த சமுதாயத்தை திருத்துவதற்கு கிருஷ்ண பக்தியைக் கற்றுக் கொடுக்கும் கல்லூரிகள் தேவை என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்களுடன் உரையாடுகிறார். மார்ச், 1974—விருந்தாவனம், இந்தியா ஸ்ரீல பிரபுபாதர்: இந்த கலி யுகத்தில் அரசியல்வாதிகளின் தொழில் ஏழை மக்களைச் சுரண்டுவதாகவே இருக்கும். குடிமக்கள் பல்வேறு சங்கடத்திற்கும் தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்படுவர். ஒருபுறம் மழை பற்றாக்குறையால் உணவிற்குத் தட்டுப்பாடு ஏற்படும், மறுபுறம் அரசாங்கம் அதிகப்படியான வரியை வசூலிக்கும். இவ்வண்ணம் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி, வீடுகளைத் துறந்து வனத்திற்குச் சென்று விடுவர். ஆத்ரேய ரிஷி தாஸ்: இப்போதுகூட அரசு பணம் வசூலிக்கிறதே தவிர, வேறு ஒன்றும் செய்வதில்லை. ஸ்ரீல பிரபுபாதர்: ஒவ்வொருவருக்கும் அவரவரது திறமைக்கேற்ப வேலைவாய்ப்பு அமைத்துக் கொடுப்பது அரசின் கடமையாகும். வேலையில்லா திண்டாட்ட...
வேத ஞானமெனும் மரத்தின் கனிந்த பழம்

வேத ஞானமெனும் மரத்தின் கனிந்த பழம்

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் நிகம–கல்ப–தரோர் கலிதம் பலம்  ஷுக–முகாத் அம்ருத–த்ரவ–ஸம்யுதம் பிபத பாகவதம் ரஸம் ஆலயம்  முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா: “சிந்தனை நிறைந்த வல்லுநர்களே, வேத இலக்கியங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகிய ஸ்ரீமத் பாகவதத்தை அனுபவியுங்கள். அமிர்தம் போன்ற இந்த ஸ்ரீமத் பாகவத ரஸம், முக்தி பெற்ற ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் ஏற்கனவே அனுபவிக்கக்கூடியதாக இருந்தபோதிலும், தற்போது ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமியின் திருவாயிலிருந்து மலர்ந்திருப்பதால் மேலும் சுவையுடையதாகியுள்ளது.” (ஸ்ரீமத் பாகவதம் 1.1.3) கற்பக விருட்சம் ஸ்ரீமத் பாகவதம் வேத இலக்கியங்களின் கனிந்த பழமாகும். வேத இலக்கியம் கற்பக மரத்துடன் (கல்ப–தருவுடன்) ஒப்பிடப்படுகின்றது. கல்ப என்றால் “விருப்பம்” என்றும், தரு என்றால் “மரம்” என்றும் பொருள். பௌதிக உலகில் வாழும் நமக்கு கல்ப–...
துன்பத்தை இன்பமாக எண்ணுதல்

துன்பத்தை இன்பமாக எண்ணுதல்

பக்தி யோக - Tips
நான் இந்த உடலல்ல, இந்த உடலானது என்னைச் சுற்றியுள்ள ஆடையைப் போன்றது,” என்பதை உணர்ந்து, இந்த பிறப்பு இறப்பு எனும் தொடர் சுழற்சியை நிறுத்துவது எவ்வாறு என்பதுகுறித்து ஒருவன் வினவ வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நவீன கால மக்கள் இத்தகைய வினாக்களை எழுப்புவதில்லை. அவர்கள் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளபடி, புலனின்பத்தின் பின்னால் பித்துபிடித்து அலைகின்றனர். புலனின்பத்தில் பித்துப்பிடித்தவர்கள் அனைத்துவித அபத்தங்களையும் செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தங்களது தொடர்ச்சியான பிறப்பு இறப்பினை உறுதி செய்வதோடு, அனைத்துவித துன்பத்திற்கும் உள்ளாகின்றனர். உடலானது எப்போதும் துன்பத்தைத் தருகின்றது, ஆனால் இதனை நாம் புரிந்துகொள்வதில்லை. சில நேரங்களில் நாம் இன்பத்தை உணர்ந்தாலும், உண்மையில் இந்த உடலானது துன்பத்தின் இருப்பிடமாகும். இது தொடர்பான ஒப்புமை ஒன்று உள்ளது. முன்பெல்லாம் அரசாங்க அதிகாரிகள் க...

Kolavecha Sridhar (Tamil) / கோலாவேசா ஸ்ரீதர்

வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பதிவு
கோலாவேசா ஸ்ரீதர்__________________________________ ஸ்ரீதரர் மிகவும் ஏழ்மையான பிராமணர், தொன்னைகளைச் செய்வதற்கான வாழை மரப்பட்டைகளை விற்று வாழ்ந்து வந்தார். பெரும்பாலும் அவருக்கு ஒரு வாழைத் தோட்டம் இருந்திருக்கலாம்; அதிலிருந்து இலைகள், பட்டைகள் மற்றும் பழங்களைச் சேகரித்து தினமும் சந்தையில் விற்று வந்தார். தமது வருமானத்தில் பாதியினை அவர் கங்கையை வழிபடுவதில் செலவிட்டார், மீதியினை வாழ்வாதாரத்திற்காக உபயோகித்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காஜியினை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, ஸ்ரீதரர் குதூகலத்தினால் ஆடினார். அவருடைய கமண்டலத்திலிருந்து மஹாபிரபு நீர் அருந்துவது வழக்கம். சைதன்யர் சந்நியாசம் ஏற்பதற்கு முன்பாக ஸ்ரீதரர் ஸச்சி தேவியிடம் பகவானுக்குச் சமைப்பதற்காக கீரை வழங்கினார். ஆண்டுதோறும் அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைக் காண்பதற்காக ஜகந்நாத புரிக்குச் சென்றார். கவி-கர்ணபூரரின் கருத்து ...

Krishna Prasadam (Tamil) I ஸ்ரீ கிருஷ்ண பிரசாதம்

பக்தி யோக - Tips
உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகா மருந்து உணவினால் வரும் பாதிப்புகள் ஆஹார ஷுத்தௌ ஸத்வ ஷுத்திஒருவனது ஆகாரம் சுத்தமானதாக இருந்தால் அவனது உள்ளமும் உடலும் தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, உண்ணும் உணவு குறித்து நாம் எப்போதுமே கவனத்துடனும் கண்டிப்புடனும் இருத்தல் வேண்டும். உணவை சமைப்பவரின் அல்லது பரிமாறுபவரின், மனநிலையும் உணர்வு களும் உணவைப் பாதிக்கும். தீய உணர்வுடையோரால் வழங்கப்படும் உணவை உண்பதால், உண்பவரின் மனநிலை பாதிக்கப்படுகிறது. அதுமட்டு மின்றி, உணவு வழங்குபவரின் பாவகர மான கர்மாக்களிலும் (தீவினைகளிலும்) உண்பவர் பங்கெடுத்துக்கொள்ள நேரிடும். மஹாபாரதத்தில் இது குறித்த ஒரு சம்பவம் உள்ளது. மகாஜனங்களில் ஒருவரான பீஷ்மரிடம் திரௌபதி, துரியோதனனால் தான் அரசவையில் அவமானப்படுத்தப்பட்டபோது தன்னைக் காப்பாற்றத் தவறியது குறித்து வருத்தம் தெரிவித்தாள். அப்போது...

பகவான் ஜெகன்நாதருக்கு விஷ்ணுபிரியா எழுதிய கடிதம்

ஸ்ரீ ஜெகந்நாத்
பூரியில் வசிக்கும் பாண்டாக்கள் ( பூஜாரிகள்) இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து, பகவான் ஶ்ரீ ஜெகன்னாதர், ரத யாத்திரையில், ரத வீதியில் பவனி வரும்போது, அவரை தரிசிக்க இயலாத மக்களுக்கும் பகவான் ஜெகன்நாதருக்கும் இடையில் ஒரு தொடர்பை உண்டாக்குகிறார்கள். பகவான் ஶ்ரீ ஜெகநாதரின் பிரசாதத்தை அவர்களுக்கு கொடுத்தும், அவர்களால் நேரடியாக சமர்ப்பிக்க முடியாத ( நன்கொடை , பரிசு பொருட்கள், நைவேத்திய பொருட்கள் போன்றவை )பொருட்களை இந்த சேவாதாரிகள் பெற்று வருவது வழக்கம். அவர்கள் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் பிரியமான பக்தர்கள் அவருக்கு சமர்ப்பித்த நன்கொடையை பூரிக்கு கொண்டு வந்து பிரபு ஜெகந்நாதரின் திருபாதங்களில் சமர்ப்பிப்பார்கள். இன்றும் ஒரிசாவில் இது பழக்கத்தில் உள்ளது. சில நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பாண்டா, ராஜ்புதனாவிற்கு (இன்று ராஜஸ்தான்) பிரயாணம் செய்தார். அந்த மாகாணத்தின் மன்னன் ஒரு விஷ்ணு பக்தர். அச்சமயம...

Jagadish Pandit (Tamil) / ஜெகதீஷ பண்டிதர்

வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பதிவு
கதீஷ பண்டிதரைப் பற்றிய விளக்கங்கள் சைதன்ய பாகவதம் ஆதி காண்டம், அத்தியாயம் ஆறு, மற்றும் சைதன்ய சரிதாம்ருதம், ஆதிலீலை, அத்தியாயம் 14ல் காணப்படுகிறது. இவர் சாகதஹ இரயில் நிலையத்திற்கு அருகில் நதீயா மாவட்டத்திலுள்ள யஷடா என்னும் ஊரைச் சார்ந்தவர். அவரது தந்தையான கமலாக்ஷர், பட்ட நாராயணன் என்பவரின் மகனாவார். ஜெகதீஷருடைய தாய், தந்தையர் இருவரும் பகவான் விஷ்ணுவின் சிறந்த பக்தர்களாவர். அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு ஜெகதீஷர், அவருடைய மனைவி துக்கினி, சகோதரர் மகேஷர் ஆகிய மூவரும் சொந்த ஊரைவிட்டு ஶ்ரீ மாயாபூருக்கு  வந்தனர். அங்கே ஶ்ரீ ஜகந்நாத மிஸ்ரர் மற்றும் இதர வைஷ்ணவர்களின் சங்கத்தில் அவர்கள் வாழ தொடங்கின்ர். சைதன்ய மகாபிரபு ஜெகதீஷரை ஜகந்நாத புரிக்குச் அழைத்துச் செல்லுமாறும் ஹரி நாம ஸங்கீர்த்தன இயக்கத்தை பிரச்சாரம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். ஜகந்நாத புரியிலிருந்து திரும்பிய பின்னர், பகவா...

இறுதியில் வெற்றி நிச்சயமே

ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி-உபன்யாசம்
ஸ்ரீல பிரபுபாதாவின் குருவான பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூரின் உரையிலிருந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் அறிவிக்கின்றார் சற்றும் மாறாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் யோகப் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்றுயோகப்பயிற்சியாளன் உறுதியான தீர்மானம்முடையவன் மாறாமல் பயிற்சியை பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இறுதி வெற்றியில் நிச்சயம் கொண்டு மிகப் பொறுமையுடன் அவ்வழியில் முன்னேற்ற முடியும். வெற்றியடைவதில் என்ன தாமதம் ஏற்பட்டாலும் மனம் தளரக்கூடாது முறையாகக் கடைப்பிடிப்பவனுக்கு வெற்றி நிச்சயமே பக்தி யோகத்தை பற்றி ரூப கோஸ்வாமி பின்வருமாறு கூறுகிறார். இதயப்பூர்வமாக உற்சாகம் பொறுமை உறுதி பக்தர்களின் உறவில் விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்றுவதாலான நிச்சயம் சாத்வீக செயலில் இடையறாது ஈடுபடுதல் பக்தி யோகம் முறை இவற்றால் வெற்றிகரமாக பின்பற்றப்பட முடியும். உறுதியை பொருத்தவரை கடல் அலையில் தனது முட்டைகளை பறிகொட...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question