
மின்னுவதெல்லாம் பொன் அல்ல! வேஷதாரிகள் எல்லாம் சாதுக்கள் அல்ல!! / All that glitters is not gold
மஹாபாரதப் போர் ஆரம்பிக்கும் முன், மன்னன் துரியோதனன், தன்னுடைய பாசறையில் கர்ணன், துச்சாதனன், சகுனி மற்றும் சகுனியின் மகனான சுவாலா ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினான். பின் சகுனியின் மற்றொரு மகனான உலுக்காவை அழைத்து, பாண்டவரிடம் தூது செல்லக் கூறினான். மேலும் தான் கூறும் பின்வரும் வார்த்தைகளை மாறாமல் அப்படியே யுதிஷ்டிரரிடம் கூறுமாறும் கேட்டுக் கொண்டான்.
“ஓ பரத குலத் தோன்றலே, யுதிஷ்டிரா! எவ்வாறு உன்னுடைய இதயத்தை, அதர்மத்தில் நிலை நாட்டி உள்ளாய். நீ எல்லா ஜீவன்களின் துன்பத்தையும் நீக்குவதற்கு பதிலாக, பிரபஞ்சத்தின் அழிவை நீ எவ்வாறு விரும்பலாம்?" என்று கூறுமாறு துரியோதனன் உலுக்காவை கேட்டுக் கொண்டான்.
மேலும், "தேவர்களால் அவருடைய ராஜ்யம் கைப்பற்றப்பட்ட போது, பிரகலாத மகாராஜா பாடிய பாடல் ஒன்று நான் கேட்டுள்ளேன்" என்று மேலும் பின்வரும் வரலாறை கூறினான்.
பிரகலாத மகாராஜா தேவர்களிடம், "தேவ...