Sunday, November 10

புத்த பூர்ணிமா I Buddha Purniama (Tamil)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

புத்த பூர்ணிமா


– பகவான் ஸ்ரீ புத்தர் அவதார தினம்

கலியுக ஆரம்பத்தில், கயா மாநிலத்தில், அஞ்சனாவின் புதல்வரான புத்த பகவான் தோன்றினார். நம்பிக்கையுள்ள ஆஸ்திகர்களிடம் பொறாமை கொண்டவர்களை தந்திரமாக வழிப்படுத்துவதே அவருடைய அவதார நோக்கமாகும். (ஸ்ரீமத் பாகவதம் – 1.3.24)

பொருளுரைமுழுமுதற் கடவுளின் ஒரு சக்திவாய்ந்த அவதாரமான பகவான் புத்தர், அஞ்சனா தேவியின் புதல்வராக கயா (பீகார்) மாநிலத்தில் தோன்றினார். அவர் தமது சொந்த கருத்தான அகிம்சையைப் பிரச்சாரம் செய்து, வேதங்களில் அனுமதிக்கப்பட்ட மிருக பலியையும் கூட நிராகரித்தார். புத்த பகவான் தோன்றிய சமயத்தில், மக்கள் பொதுவாக நாஸ்திகத் தன்மை கொண்டவர்களாகவும், மிருக மாமிசத்தை விரும்பி உண்பவர்களாகவும் இருந்தனர். யாக பலி என்ற பெயரில், கிட்டத்தட்ட ஒவ்வொரு இடமும் ஒரு கசாப்புக் கூடமாக மாற்றப்பட்டு இருந்தது. மேலும் மக்கள் மிருக பலியில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஈடுபட்டனர். நிராதரவான மிருகங்களின் மீது இரக்கம் கொண்ட புத்த பகவான் அகிம்சையை பிரச்சாரம் செய்தார். வேதக் கொள்கையில் தமக்கு நம்பிக்கையில்லை என்பதை அவர் வலியுறுத்தினார். மிருக வதையால் நேரிடும் தீய விளைவுகளையும் அவர் வலியுறுத்தினார். கடவுள் நம்பிக்கை அற்றவர்களான, குறைந்த அறிவுள்ள கலியுக மக்கள் அவரது கொள்கையைப் பின்பற்றினர். மேலும் இடைக் காலத்தில் அவர்கள் நல்ல ஒழுக்கத்திலும், அகிம்சையிலும் பயிற்றுவிக்கப்பட்டனர். இது பகவானை உணரும் பாதையில் தொடர்ந்து முன்னேறுவதற்கான ஆரம்பப் படியாகும். நாஸ்திகர்களை அவர் ஏமாற்றினார். ஏனெனில் அவரது கொள்கைகளைப் பின்பற்றிய அத்தகைய நாஸ்திகர்கள் கடவுளை நம்பவில்லை. ஆனால் தங்களது பரிபூரண நம்பிக்கையை அவர்கள் புத்த பகவானிடம் கொண்டிருந்தனர். புத்தர் பகவானுடைய அவதாரம் என்பதால், பகவான் புத்தரின் வடிவிலுள்ள கடவுளிடம், நம்பிக்கை இல்லாதவர்கள் நம்பிக்கை கொள்ளும படி மாற்றப் பட்டனர். அதுவே புத்த பகவானின் கருணையாகும். அவர் நம்பிக்கையற்றவர்களை தம்மிடம் நம்பிக்கை கொள்ளும்படி செய்தார்.புத்த பகவானின் அவதாரத்திற்கு முன்பு மிருகங்களைக் கொல்வதே சமுதாயத்தின் மிகவும் முக்கியமான செயலாக இருந்து வந்தது. மக்கள் இவற்றை வேதபலிகள் என கூறிக் கொண்டனர். அதிகாரப்பூர்வமான சீடப் பரம்பரையின் வாயிலாக வேதங்கள் ஏற்றுக் கொள்ளப்படாத போது, தற்செயலாக வேதங்களைப் படிப்பவர்கள், மலர் மொழியால் வழிதவறிச் செல்கின்றனர். அத்தகைய மூட பண்டிதர்களைப் பற்றிய ஒரு விளக்கம் பகவத் கீதையில் உள்ளது (அவிபஸ்சித:). தெய்வீகமான செய்தியை, உணர்ந்தறியப்பட்ட சீடப் பரம்பரையின் ஆன்மீக பக்தர்களிடமிருந்து பெறுவதில் அக்கரை கொள்ளாமல், வேத இலக்கியங்களைப் பயிலும் மூட பண்டிதர்கள் குழப்பமடைவது உறுதி. அவர்கள் சமயச் சடங்குகளே அனைத்தும் என்று கருதுகின்றனர். அவர்களுக்கு ஆழ்ந்த அறிவு இல்லை. பகவத் கீதையின்படி (15.15), ‘வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய:’ வேதங்களில் உள்ள எல்லா முறைகளும் ஒருவரை படிப்படியாக பரம புருஷரை அடையும் பாதையை நோக்கி அழைத்துச் செல்பவையாக உள்ளன. பரம புருஷர், தனிப்பட்ட ஆத்மா, பிரபஞ்ச சூழ்நிலை மற்றும் இவற்றிற்கு இடையிலுள்ள உறவு ஆகியவற்றை அறிவதே வேத இலக்கியத்தின் முழு நோக்கமாகும். உறவு அறியப்பட்டவுடன் அது செயற்படத் துவங்குகின்றது. அத்தகைய செயலின் பலனாக, பகவானிடம் திரும்பிச் செல்லுதல் எனும் வாழ்வின் இறுதி நோக்கம் மிகச் சுலபமாக நிறைவேறுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, அங்கீகரிக்கப்படாத வேதப் பண்டிதர்கள் தூய்மை அடைவதற்குரிய சடங்குகளால் மட்டுமே கவரப்படுபவர்களாக உள்ளனர். இதனால் இயற்கையான முன்னேற்றம் தடைப்படுகின்றது.நாஸ்திகத் தன்மை கொண்ட அத்தகைய குழப்பமடைந்த மக்களுக்கு புத்த பகவான் இறை நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறார். ஆகவே முதலாவதாக அவர் மிருகங்களைக் கொல்லும் பழக்கத்தைத் தடுக்க விரும்பினார். பகவானிடம் திரும்பிச் செல்லும் வழியில் மிருகங்களைக் கொல்பவர்கள் ஆபத்தான பேர் வழிகளாக உள்ளனர். ஆத்மா சிலசமயங்களில் “மிருகம்” அல்லது ஜீவராசி என்று அழைக்கப்படுகிறது. ஆகவே, மிருக வதை செய்பவர்கள், மற்றும் ஆத்மாவின் தனித்தன்மையை இழந்தவர்கள் ஆகிய இருவருமே மிருக வதை புரிந்தவர்களாவர்.மிருகங்களைக் கொல்பவர்களால் பரம புருஷரின் உன்னத செய்தியை சுவைத்து அனுபவிக்க முடியாது என்று பரீட்சித்து மகாராஜன் கூறினார். ஆகவே பகவானை அடையும் வழியில் மக்களை பயிற்றுவிக்க வேண்டுமானால், முதலில் அவர்களுக்கு மேலே கூறியவாறு மிருக வதையைக் கைவிடுமாறு கற்பிக்க வேண்டும். ஆன்மீகத் தன்னுணர்வு பெறுவதற்கும், மிருக வதைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறுவது புத்திகெட்ட தனமாகும். கலியுகத்தின் கோளாறினால் ஆபத்தான இந்த தத்துவத்தை ஆதரிக்கும் பெயரளவேயான சந்நியாசிகள் பலர் முளைத்துள்ளனர். வேதங்களின் பெயரில் இவர்கள் மிருக வதையைப் பிரச்சாரம் செய்கின்றனர். பகவான் ஸ்ரீ சைதன்யருக்கும், மௌலானா சந்த் காஜி சாகிப் என்பவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலில் இவ்விஷயம் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு உள்ளது. வேதங்களில் கூறப்பட்டுள்ள மிருக பலியானது, கசாப்பு கூடத்தில் நிகழும் கட்டுப்பாடற்ற மிருக வதையிலிருந்து வேறுபட்டதாகும். அசுரர்கள் அல்லது பெயரளவேயான வேதப் பண்டிதர்கள் வேதங்களில் உள்ள மிருகபலியை ஆதாரமாகக் காட்டுவதால், புத்த பகவான் வேதங்களின் அதிகாரத்தை போலியாக மறுத்துள்ளார். மிருகவதை எனும் துர்க்குணத்திலிருந்து மக்களைக் காக்கவும், உலகளாவிய சகோதரத்துவம், அமைதி, நேர்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றைப் பற்றி கூச்சலிடும் மூத்த சகோதரர்களால் நிராதரவான மிருகங்கள் கொல்லப்படுவதை நிறுத்தவுமே பகவான் புத்தர் வேதங்களை ஏற்க மறுத்தார். மிருக வதை இருக்கும்போது நீதி இருக்காது. பகவான் புத்தர் அதை முற்றிலும் நிறுத்திவிட விரும்பினார். இதனால்தான் அவரது அகிம்சைக் கொள்கை இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட பரப்பப்பட்டது.பொதுவாக பகவான் புத்தரின் தத்துவம் நாஸ்திகம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், அது பரம புருஷரை ஏற்கவில்லை என்பதுடன் அந்த தத்துவ முறை வேதங்களின் அதிகாரத்தையும் ஏற்கவில்லை. ஆனால் அது உண்மை நிலையை மறைக்க பகவானால் கையாளப்பட்ட ஒரு சாதனமாகும். ஆனால் புத்தர் பகவானின் ஓர் அவதாரம் என்பதால், அவரே வேத அறிவை ஸ்தாபித்த மூல புருஷராவார். ஆகவே, வேத தத்துவத்தை அவரால் விலக்கிவிட முடியாது. ஆனால் மேலுழுந்த வாரியாக அதை அவர் விலக்கினார். ஏனெனில், ‘ஸுர-த்விஷர்கள்’, அல்லது பகவத் பக்தர்களிடம் எப்பொழுதும் விரோதம் கொண்டுள்ள அசுரர்கள், வேதங்களை சான்றாகக் கொண்டு பசுவதை அல்லது மிருகவதையை ஆதரிக்க முயல்கின்றனர். இது நவீன காலத்து சந்நியாசிகளால் இப்போது செய்யப்பட்டு வருகின்றது. பகவான் புத்தர் வேதங்களின் அதிகாரத்தை முற்றிலும் மறுக்க வேண்டியிருந்தது. காரணத்தோடுதான் அவர் இப்படிச் செய்தார். இல்லையெனில் அவர் பகவானின் அவதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கமாட்டார். அல்லது ஒரு வைஷ்ணவ ஆசார்யரான, ஜெயதேவரின் தெய்வீகமான பாடல்களால் அவர் துதிக்கப்பட்டிருக்கவும் மாட்டார். பகவான் புத்தர் வேதங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்க்காக, காலத்திற்குப் பொருந்தும் வகையில், வேதங்களின் ஆரம்ப நிலையிலுள்ள கொள்கைகளை பிரச்சாரம் செய்தார். (சங்கராசார்யரும் கூட அவ்வாறுதான் செய்தார்). ஆகவே புத்த பகவான் மற்றும் சங்கராச்சார்யர் ஆகிய இருவருமே தெய்வ நம்பிக்கைக்கு வழியமைத்தனர். மேலும் வைஷ்ணவ ஆசார்யர்கள், குறிப்பாக பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, முக்தியடையும் தன்னுணர்வுப் பாதையில் மக்களை வழிநடத்திச் சென்றனர்.பகவான் புத்தரின் அகிம்சை இயக்கத்தில் மக்கள் ஆர்வம் காட்டுவது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அனால் இவ்விஷயம் மிகவும் முக்கியமானதென கருதி, கசாப்புக் கூடங்களை அவர்கள் முற்றிலும் மூடிவிடுவார்களா? இல்லையெனில், அகிம்சைக் கொள்கையில் (இயக்கத்தில்) அர்த்தமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question