Thursday, April 18

ஸ்ரீ கௌரங்க அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

வழங்கியவர் :- ஸார்வபௌம பட்டாச்சாரியர்

Audio

  1. ஓம் விஸ்வம்பரா நம :
    – இந்த பிரபஞ்சத்தை தக்கவைப்பவர் 

2. ஓம் ஜித க்ரோத நம :
– பௌதிக க்ரோதத்தை வென்று காட்டுபவர் 

3. ஓம் மாயா மனுஷ விக்ராஹ நம :
–  மானுடரைப்போல் மாயை தோற்றத்தில் காட்சியளிப்பவர் 

4. ஓம் அமாயி நம :
– ஏமாற்றும் தன்மை இல்லாதவர்

5. ஓம் மாயினாம் சிரேஷ்ட நம :
– பல லீலைகள் புரிவதில் மன்னர் 

6. ஓம் வர தேச நம :
– பூமிகளில் சிறந்த பூமியில் அவதரித்தவர் 

7. ஓம் ட்வீஜோத்தம நம :
–  பிராமணர்களுள் சிறந்தவர்

8. ஓம் ஜெகந்நாத ப்ரியாஸுதா நம :
– ஜெகநாத் மிஷ்ராவின் பிரியமான புத்திரன் 

9. ஓம் பித்ர் பக்தோ நம :
– ஜெகன்னாத் மிஸ்ராவின் பக்தர் 

10. ஓம் மஹா மனாக நம :
– புத்தி கூர்மை உடையவர் 

11. ஓம் லட்சுமி காந்த நம :
–  அதிர்ஷ்டத்தின் உறைவிடமான லட்சுமி தேவியின் பிரியமான கணவர் 

12 . ஓம் சச்சி புத்ரஹா நம :
– சச்சி மாதாவின் புதர்வர் 

13. ஓம் ப்ரேமதோ பக்தி நம :
–  ப்ரேமையை வாரிவழங்குபவர்

14. ஓம் பக்த வத்சலா நம :
–  பக்தர்களுக்கு மிகவும் ப்ரியமானவர்

15. ஓம் த்விஜ ப்ரியா நம :
– இரண்டாம் தீக்ஷை பெற்ற பிராமணர்களுக்கு மிகவும் ப்ரியமானவர் 

16. ஓம் த்விஜ வர நம :
– பிராமணர்களுள் சிறந்தவர் 17. வைஷ்ணவ ப்ராண நாயாக – பக்தர்களின உடலுக்கும் ஆத்மாவிற்கும் நாயகர் 

18. ஓம் த்விஜ ஜாதீ பூஜக நம :
– பிராமணர்களின் வணக்கத்திற்குரியவர் 

19. ஓம் சாந்த நம :
– அமைதியும் ஆன்மீகமயமும் கொண்டவர் 

20. ஓம் ஸ்ரீவாச ப்ரியா நம :
– ஸ்ரீவாச பண்டிதருக்கு மிகவும் ப்ரியமானவர்

21. ஓம் ஈஸ்வர நம :
– பரம ஆளுனர்

22. ஓம் தப்த காஞ்சன கௌரங்க நம :
– உருகிய பொன்னிறத்தை போன்ற திருமேனி உடையவர் 

23. ஓம் சிம்ம க்ரீவ நம :
– சிங்கத்தை போன்ற கழுத்துடையவர்

24. ஓம் மஹா புஜா நம :
–  வலிமையான தோள்களை உடையவர் 

25. ஓம் பித வாசா நம :
–  கிரஹஸ்தராக இருந்தபோது மஞ்சள் நிற ஆடையணிந்தவர் 

26. ஓம் ரக்த பட்ட நம :
–  சந்நியாசியாக இருந்தபோது சிவப்பு நிற ஆடையணிந்தவர் 

27. ஓம் சத் புஜா நம :
– ஆறு கரங்களுடன் காட்சியளிப்பவர் 

28. ஓம் சதுர் புஜா நம :
– மேலும் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பவர்

29. ஓம் த்வி புஜஸ் நம :
–  இரு கரங்களுடன் காட்சியளிப்பவர்

 30. ஓம் கதா பாணி நம :
– கதையை தாங்கி நிற்பவர் 

31. ஓம் சக்ரி நம :
– சுதர்ஷன சக்கரத்தை உடையவர் 

32. ஓம் பத்ம தரா நம :
– தாமரை மலரை தாங்கி நிற்பவர் 

33. ஓம் அமலா நம :
– பாவங்களுக்கு அப்பாற்பட்டவர் 

34. ஓம் பாஞ்சஜன்ய தாரா நம :
–  பாஞ்சஜன்யம்  பெயருடைய சங்கை கொண்டவர் 

35. ஓம் சாரங்கி நம :
– அம்பை உடையவர்

36. ஓம் வேணு பாணி நம :
–  புல்லாங்குழலை உடையவர் 

37. ஓம் சுரோத்தம நம :
–  தேவர்களுக்கெல்லாம் முன்னோடி

 38. ஓம் கமலாக்ஷேஸ்வர நம :
– தாமரை போன்ற கண்களை உடைய லட்சுமி தேவியின் கணவர் 

39. ஓம் ப்ரீதா நம :
– அணைத்து உயிர்வாழிகளுக்கும் ப்ரியமானவர் 

40. ஓம் கோப லீலாதரா நம :
–  கோபியர்களுடன் லீலைகள் புரிபவர் 

41. ஓம் யுவ நம :
– என்றும் இளமையானவர் 

42. ஓம் நீல ரத்னா தாரா நம :
– நீல நிற கற்களை அணிபவர் 43. ரூபியா ஹரி  – வெள்ளி மாலைகளை அணிய விரும்புபவர் 

44. ஓம் கௌஸ்துப பூஷண நம :
–  கௌஸ்துப கல்லை கொண்டு அலங்கரிக்கப்படுபவர்

45. ஓம் ஸ்ரீவட்ச லாஞ்சன நம :
– ஸ்ரீவட்ச குறியீடு கொண்டுள்ளவர்

46. ஓம் பாஸ்வன் மணி த்ரீக் நம :
– பல வகையான கண்கவர் ஆபரணங்களை அணிந்துள்ளவர் 

47. ஓம் கஞ்ச லோச்சனா நம :
– தாமரை இதழ் போன்ற கண்கள் உடையவர் 

48. ஓம் தாத்தன்க நீல ஸ்ரீ நம :
– நீல நிற கற்களை கொண்டுள்ள குண்டலங்களை அணிந்துள்ளவர் 

49. ஓம் ருத்ர லீலா காரி நம :
– சிலசமயங்களில் பகவான் சிவபெருமானுடைய லீலைகள் புரிபவர் 

50. ஓம் குரு ப்ரியா நம :
– தன் ஆன்மீக குருவிற்கு மிகவும் ப்ரியமானவர்

51. ஓம் ஸ்வ நாம குண வக்த நம :
– தன்னுடைய திருநாமங்களின் சக்திகளை அறிந்தவர் 

52. ஓம் நாமோபதேச தாயக நம :
– திருநாமங்களை பிரச்சாரம் செய்பவர் 

53. ஓம் ஆச்சண்டாள ப்ரியா நம :
– மிலேச்சர்களுக்கும் கூட மிகவும் ப்ரியமானவர் 

54. ஓம் சுத்த நம :
-முற்றிலும் தூய்மையான குணங்களை உடையவர்

55. ஓம் ஸ்பிராணி ஹிதே ரதா நம :
– அணைத்து உயிர்வாழிகள் மீதும் அன்பு செலுத்துபவர்

56. ஓம் விஸ்வரூபானுஜா நம :
– கௌரங்க மஹாப்ரபு, விஸ்வரூபாவின் இளைய சகோதரர்.

57. ஓம் சந்தியாவதாரா நம :
– அவர் சந்தியா வேளையில் அவதரித்தவர்

58. ஓம் சீதாலாசய நம :
– உயிர்வாழிகளிடையே எரிந்துகொண்டிருக்கும் துன்பங்களை நீக்கி அவர்களை குளிர்விப்பவர்

59. ஓம் நிஷிமா கருணோ நம :
– அவர் காரணமற்ற கருணையுடையவர்

60. ஓம் குப்தா நம :
– அவர் அமைதியான குணமுடையவர்

61. ஓம் ஆத்ம பக்தி ப்ரவர்தக நம :
– அவர் தன்நிலையறிபவர்க்கு பக்தி தொண்டை போதிப்பவர்.

62. ஓம் மகா நந்தோ நம :
– கௌரங்க மஹாப்ரபு எப்பொழுதும் ஆன்மீக ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்

63. ஓம் நதோ நம :
– அவர் ஒரு நாடக நடிகரை போல் பாவனை செய்கிறார்

64. ஓம் நிருத்ய கீதா நாம ப்ரியா நம :
– அவர் பகவானுடைய திருநாமங்களை உச்சரிப்பதிலும், ஆடுவதிலும், பாடுவதிலும் அதீத நாட்டம் கொண்டுள்ளார்

65. ஓம் கவி நம :
– அவர் மிகப்பெரிய பண்டிதர் மற்றும் கவிஞர்.

66. ஓம் ஆர்த்தி பிரியா நம :
– அவர் துன்பப்படுபவர்களுக்கு மிகவும் ப்ரியமானவர்

67. ஓம் சுசி நம :
– அவர் எப்பொழுதும் சுத்தமாக உள்ளார் 

68. ஓம் சுதோ நம :
– அவர் தூய்மையாகவும் உள்ளார்

69. ஓம் பாவதோ நம :
– அவர் பகவானின் மீதுள்ள அன்பின் காரணமாக ஆன்மீக ஆனந்தத்தின் உச்சமான உணர்ச்சிகளை நமக்கு அள்ளி வழங்குகிறார்

70. ஓம் பகவத் பிரியா நம :
– அவர் உயரிய பக்தர்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.

71. ஓம் இந்திராதி சர்வ லோகேஷ வந்தித ஸ்ரீ பாதாம்புஜ நம :
– கௌரங்க மஹாப்ரபுவின் தாமரை திருவடிகள், தேவேந்திரராலும் மற்ற தேவர்களாலும் எப்பொழுதும் பூஜிக்கப்படுகின்றன. 

72. ஓம் ந்யாஸி சூடாமணி நம :
– துறவிகளில் அவர் சூடாமணியை போன்றவர்.

73. ஓம் கிருஷ்ணா நம :
– அவர் வசீகரமான முழுமுதற் கடவுள்.

74. ஓம் சன்யாசாச்ரம பாவனா நம :
– துறவு மேற்கொள்பவர்களை தூய்மைப்படுத்துபவர்.

75. ஓம் சைதன்யா நம :
– படைக்கப்பட்ட அனைத்திற்கும், கௌரங்க மஹாப்ரபுவே வசீகரமான பரமாத்மா 

76. ஓம் கிருஷ்ணா சைதன்யோ நம :
– அவரே வசீகரமான பரமாத்மா 

77. ஓம் தண்ட தர்க் நம :
– துறவற வாழ்வின் பிரதிநிதி ஆவார்.

78. ஓம் ந்யஸ்த தண்டக நம :
– துறவற வாழ்வை எதிர்ப்பவர் ஆவார்.

79. ஓம் அவதூத ப்ரியா நம :
– ஆன்மீக பித்து பிடித்துள்ள நித்யானந்த மஹாப்ரபுவிற்கு மிகவும் ப்ரியமானவர். 

80. ஓம் நித்யானந்த சத் புஜ தர்சக நம :
– நித்யானந்த மஹாப்ரபுவிற்கு தனது ஆறு கை ரூபத்தை காட்டியவர்.

81. ஓம் முகுந்த சித்தி தோ நம :
– தன்னுடைய பக்தரான முகுந்தருக்கு முழுமையை வழங்கியவர். 

82. ஓம் தீணா நம :
– அவர் மிகவும் சாதுவான மற்றும் தன்னடக்கம் கொண்ட குணமுடையவர் 

83. ஓம் வாசுதேவாமரித ப்ரத நம :
– தொழுநோய் கொண்ட தன்னுடைய பக்தரான வாசுதேவருக்கு ஆன்மீக அமிர்தத்தை வழங்கியவர்

84. ஓம் கதாதர பிராண நாத நம :
– கதாதர பண்டிதரின் உயிர் நாடி ஆவார்.

85. ஓம் ஆர்த்தி ஹா நம :
– பக்தர்களின் துயர் தீர்ப்பவர்.

86. ஓம் சரண ப்ரத நம :
– தன்னுடைய பக்தர்களுக்கு உன்னத அடைக்கலத்தை வழங்குபவர்.

87. ஓம் அகிஞ்சன பிரியா நம :
– தன்வசம் ஏதுமில்லாதவர்களை, கௌரங்க மஹாப்ரபு மிகவும் விரும்புகிறார். 

88. ஓம் பிரானோ நம :
– உயிர்வாழிகள் அனைத்திற்க்கும் உயிர் மற்றும் ஆத்மா அவர். 

89. ஓம் குண க்ராஹி நம :
– அடுத்தவர்களின் நற்பண்புகளை மட்டுமே ஏற்கக்கூடியவர் அவர்

90. ஓம் ஜிதேந்திரா நம :
–  பௌதிக புலன்களின் தாக்கத்திலிருந்து வெற்றிவாகை சூடுபவர்

91. ஓம் தோஷ தர்சி நம :
– அடுத்தவர் செய்யும் தவறுகளை கண்காணாதிருப்பவர். 

92. ஓம் சுமுகோ நம :
– என்றும் மலர்ந்த முகமுடையவர்.

93. ஓம் மதுரா நம :
–  அவர் முழுவதுமாக இனிமையானவர். 

94. ஓம் பிரியா தரிசன நம :
– அவர் விலைமதிப்பற்றவர்.

95. ஓம் பிரதாப ருத்ர சம்தராத நம :
– மஹாராஜா பிரதாபருத்ராவை தடங்கல்களிலிருந்து விடுவித்தவர். 

96. ஓம் ராமானந்த ப்ரியா நம :
– ராமானந்த ராயாவிற்கு மிகவும் ப்ரியமானவர்.

97. ஓம் குரு நம :
– அணைத்து உயிர்வாழிக்கும் ஆன்மீக குருவாவார். 

98. ஓம் அனந்த குண சம்பன்னஹ நம :
– எண்ணிலடங்காத நற்பண்புகளை உடையவர்.

99. ஓம் சர்வ தீர்த்தைக பாவனக நம :
– அணைத்து தீர்த்த ஸ்தலங்களையும் புனிதப்படுத்துபவர்.

100. ஓம் வைகுண்ட நாதோ நம :
–  துன்பங்களற்ற ஆன்மீக உலகிற்கு கௌரங்க மஹாப்ரபுவே முழுமுதற்கடவுள்.

101. ஓம் லோகேஷ நம :
– பௌதிக உலகங்களுக்கும் அவரே முழுமுதற் கடவுள்

102. ஓம் பக்த பீமத ரூபா தர்க் நம :
– பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கு காட்சியளிப்பவர்

103. ஓம் நாராயனோ நம :
– அணைத்து உயிர்வாழிகளுக்கும் உன்னத அடைக்கலமாவார். 

104. ஓம் மகா யோகி நம :
–  யோகத்தில் சிறந்து விளங்குபவர்.

105. ஓம் ஞான பக்தி ப்ரத நம :
– பக்தியின் அறிவுசார் ஞானத்தை வழங்குபவர்

 106. ஓம் பிரபு நம :
– அனைவருக்கும் தலைவர் மற்றும் கடவுள் அவரே.

107. ஓம் பியூச வசன நம :
– கௌரங்க மஹாப்ரபுவின் வார்த்தைகள் ஆன்மீக அமிர்தத்தை அள்ளி வழங்கும்.

 108. ஓம் ப்ரித்வி பாவனா நம :
– அண்டத்தை காப்பவர் அவர். 


109. ஓம் சத்யா வாக் நம :
– அவர் உண்மையை உரைப்பவர். 

110. ஓம் சக நம :
– அணைத்து துன்பங்களையும் போக்கக்கூடியவர்

111. ஓம் ஓட தேச ஜனாநந்தி நம :
– ஒரிசா மக்களை ஆனந்தப்படுத்துபவர். 

112. ஓம் ஸந்தோஹம்ரித ரூபா தர்க் நம :
-அணைத்து அமிர்தங்களிலும் வீற்றிருக்கக்கூடியவர்.

+10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question