
Gita Saaram (Tamil) / கீதாசாரம்
வழங்கியவர்: தெய்வத்திரு. அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியர்தெய்வீக ஞானத்தை அங்கீகரிக்கப்பட்ட சீடப் பரம்பரையின் மூலம் பெறாமல், அனுபவ அறிவை அடிப்படையாகக் கொண்ட விவாதங்களால் கவரப்பட்டு, வழிதவறிச் செல்லும் நபர்களுக்காக பகவத் கீதையின் முக்கிய கருத்துக்களை இங்கு சுருக்கமாக கீதாசாரம் என்னும் தலைப்பில் தொகுத்துள்ளோம். (1940களில் வைராக்ய வித்யா எனும் தலைப்பில் ஸ்ரீல பிரபுபாதரால் வங்காள மொழியில் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளில் ஒன்று)பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பரம் பொருள். அவரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள். அவரே எல்லா காரணங்களுக்கும் காரணம் "யாரிட மிருந்து இவ்வுலகம் தோன்றியதோ, யாரால் இவ்வுலகம் தோற்றுவிக்கப் பட்டதோ, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் யார் கட்டுப் படுத்துகின்றாரோ, அவரே கடவுள்" என்று கடவுளைப் பற்றி வேதாந்த சூத்திரம...