Tuesday, November 19

ஆன்மீகப் பதிவு

Improve in Bhakti step by step (Tamil) / படிப்படியாகப் பக்தியில் முன்னேறுதல்

Improve in Bhakti step by step (Tamil) / படிப்படியாகப் பக்தியில் முன்னேறுதல்

கதைகள், ஆன்மீகப் பதிவு
மனிதனாக பிறவி எடுத்த அனைவருக்குமே ஐடம் புலன் இன்பத்தில் கூடநாட்டம் உண்டு. புலனின்பத்தை முற்றிலுமாகத் தவிர்த்து, கிருஷ்ண பக்தியை நேரடியாகவோ அல்லது முழு மையாகவோ ஏற்றுக் கொண்டு பயிற்சி செய்வது என்பது எல்லோருக்கும் இயலாத ஒரு காரியம்.ஜடப் புலனின்பத்தை விரும்பித் தான் அனை வரும் இவ்வுலகில் செயல்படுகின்றனர். புலன் இன்பத்தை விரும்பும் இவர்கள், முழு கிருஷ்ண பக்தியில் ஈடுபட இயலாமல் போகலாம். ஆனால், தங்களுடையப் புலனின்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேதங்களால் ஒழுங்குபடுத்தப் பட்ட வகையில், வேதங்கள் பயிலல், யாகங்கள், தவங் கள், தான தர்மங்கள் செய்தல் ஆகியவற்றைப் பக்தி யுடன் செய்யலாம்.இவ்வாறு செய்வதால் படிப்படியாகக் கிருஷ்ண உணர்வில் அவர்கள் முன்னேற வாய்ப்பு உண்டு. சிறிதளவாகிலும் இவ்வாறு கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொண்டுள்ள ஒருவனை, நேரடியாகக் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தி விடலாம்.ஆகையால், கிருஷ்ண...
A biography of Lord Krishna (Tamil) / கிருஷ்ணரின் வாழ்க்கைக் குறிப்பு

A biography of Lord Krishna (Tamil) / கிருஷ்ணரின் வாழ்க்கைக் குறிப்பு

ஸ்ரீ கிருஷ்ணர், ஆன்மீகப் பதிவு
மாதவன் அவதரித்த மதுராபிறப்பற்ற இறைவன் இவ்வுலகிற்கு இறங்கி வரும்போது, அவதாரம் என்று அறியப்படுகிறார். ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திலிருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (மாதவன்) தனது பக்தர்களைக் காப்பதற்காகவும் துஷ்டர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு இப்பூவுலகில் தற்போதைய டில்லி நகரத்திலிருந்து 150 கிமீ தெற்கிலுள்ள மதுரா நகரில் தோன்றினார். இதனால் மதுரா நகரம் மிகவுயர்ந்த புண்ணிய பூமியாகும்.கி.மு. 3228, ஜூலை 19ம் நாள், ஸ்ரவன மாத தேய்பிறையின் அஷ்டமி திதியின் நள்ளிரவில், மதுராவின் சிறைச்சாலையில் கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்தார், அன்றிரவே கோகுலம் சென்றடைந்தார்.3 வருடம், 4 மாதங்கள் வரை கோகுலத்தில் வசித்த பின், விருந்தாவனம் சென்றார். மேலும் 3 வருடம் 4 மாதங்களை விருந்தாவனத்தில் கழித்த பின், 6 வருடம் 8 மாத வயதில், நந்தகிராமத...
Tulasi Mahima – Glories of Tulasi (Tamil) / துளசி மஹிமா

Tulasi Mahima – Glories of Tulasi (Tamil) / துளசி மஹிமா

Most Viewed, ஆன்மீகப் பதிவு
துளசி பாடல்கள்துளசி வழிபாடு என்பது தொன்று தொட்டு செய்யப்பட்டு வரும் வழிபாடுகளுல் ஒன்று. லக்ஷக்கணக்கான மரம், செடி, கொடிகள் இருக்கை யில் துளசிக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு?கல்வியறிவு இல்லாத பிராமணர் கண்ட துளசி வனம்நீண்ட காலத்திற்கு முன்பு, கல்வியறிவு இல்லாத பிராமணர் ஒருவர் விவசாயத் தொழில் புரிந்து வந்தார். அவர் எந்த வித மதச் சடங்குகளையும் செய்ததில்லை. வாட்ட, சாட்டமான அவர் ஒரு முறை, விற்பனை செய்வதற்காக புல் சேகரிக்க கயிறு ஒன்றுடன் காட்டிற்குச் சென்றார். போது மான அளவு புல் சேகரித்து இருந்தாலும், இன்னும் அதிகப் புல்லைத் தேடி காட்டினுள் அழைந்தார் அவர்.அப்போது அழகிய துளசி வனம் ஒன்றை அவர் கண்டார். பச்சை மரகதம் போல் அது ஒளிர் விட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியே அவருக்கு தூய்மையை அளித்து, மனதில் ஆனந்தத்தை அளித் தது. "இந்தச் செடி பசுக்களுக்கும், மனிதர்களுக் கும் உணவாகுமானால்,...
Understanding Bhagavad Gita (Tamil) / பகவத் கீதையைப் புரிந்துகொள்ளுதல்

Understanding Bhagavad Gita (Tamil) / பகவத் கீதையைப் புரிந்துகொள்ளுதல்

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
12 செப்டம்பர் 1973ல், லண்டன் நகரில், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் சில பத்திரிகை நிருபர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி.நிருபர்: பகவத் கீதையில் போதிக்கப்படும் மையக் கருத்து என்ன?ஸ்ரீல பிரபுபாதர்: பகவானைப் புரிந்து கொள்வதே மையக் கருத்தாகும். மக்கள் மூடர்களாகி விட்டார்கள். அவர்கள் பகவானைப் பற்றி தெரிந்து கொள்வதையும். தான் யார் என்பதை தெரிந்துகொள்வதையும் மறந்துவிட்டனர். ஒவ்வொருவரும் "நான் இந்த உடல்" என்று தவறாக எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஆன்மீக ஆத்மாக்கள். ஆத்மாவை அறிவதற்கான கல்வியறிவு அவர்களிடம் இல்லை. அனைவரும் அறியாமையில் உள்ளனர். மிகப்பெரிய பேராசிரியர்கள்கூட அறியாமையில் உள்ளனர். இந்த உடல் முடிந்த பிறகு, எல்லாமே முடிந்து விடும்" என்று ரஷ்யாவின் பேராசிரியர் கோட்டாவ்ஸ்கி என்னிடம் கூறினார். ஆனால் அஃது உண்மை அல்ல.நிருபர்: ஸ்ரீ கிருஷ்ண...
Gita Saaram (Tamil) / கீதாசாரம்

Gita Saaram (Tamil) / கீதாசாரம்

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
வழங்கியவர்: தெய்வத்திரு. அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியர்தெய்வீக ஞானத்தை அங்கீகரிக்கப்பட்ட சீடப் பரம்பரையின் மூலம் பெறாமல், அனுபவ அறிவை அடிப்படையாகக் கொண்ட விவாதங்களால் கவரப்பட்டு, வழிதவறிச் செல்லும் நபர்களுக்காக பகவத் கீதையின் முக்கிய கருத்துக்களை இங்கு சுருக்கமாக கீதாசாரம் என்னும் தலைப்பில் தொகுத்துள்ளோம். (1940களில் வைராக்ய வித்யா எனும் தலைப்பில் ஸ்ரீல பிரபுபாதரால் வங்காள மொழியில் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளில் ஒன்று)பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பரம் பொருள். அவரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள். அவரே எல்லா காரணங்களுக்கும் காரணம் "யாரிட மிருந்து இவ்வுலகம் தோன்றியதோ, யாரால் இவ்வுலகம் தோற்றுவிக்கப் பட்டதோ, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் யார் கட்டுப் படுத்துகின்றாரோ, அவரே கடவுள்" என்று கடவுளைப் பற்றி வேதாந்த சூத்திர...
மனிதனுக்கும், கடவுளுக்கும் உள்ள வித்தியாசம்? / Different b/w Human & God?

மனிதனுக்கும், கடவுளுக்கும் உள்ள வித்தியாசம்? / Different b/w Human & God?

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
பொதுவாக மாயாவதிகள் என்பவர்கள் 'எல்லாம் மாயை, மற்றும் கிருஷ்ணரும் மாயை' என்று கூறுவார்கள். கிருஷ்ணர் செயல்முறையில் இதெல்லாம் மாயை அல்ல என்று காட்டினாலும், இது முழுமையாக ஆன்மீகமானது என்று கூறினாலும் அவர்களுடைய மந்த புத்தி 'கிருஷ்ணர் தலையாய பூரண உண்மை' என்று ஏற்றுக் கொள்ளாது.கிருஷ்ணர் 'மன்மனாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு' (ப.கீ. 18.65) 'என்னுடைய பக்தன் ஆவாய். எனக்கு உன் வந்தனைகளை சமர்ப்பிப்பாய். எப்போதும் என்னை நினைத்து இரு' என்று கூறுகிறார்.இதற்கு அந்த அறிஞர்கள் என்று கூறப்படுபவர்கள், "இது கிருஷ்ணர் என்ற நபருக்கு அல்ல. இது அவருள் பொதிந்திருக்கும் ஒன்று'' என்று கூறுவர். இந்த மூடர்களுக்கு கிருஷ்ணரின் அகத்திற்கும் புறத்திற்கும் வித்தியாசம் இல்லை என்று தெரியாது.நமக்கும், கிருஷ்ணருக்கும் வித்தியாசம்?கிருஷ்ணர் பூரணமானவர். இருமைக்கு அங்கு இடமில்லை, இந்த அறிவு அவர்களுக்கு கி...
மின்னுவதெல்லாம் பொன் அல்ல! வேஷதாரிகள் எல்லாம் சாதுக்கள் அல்ல!! / All that glitters is not gold

மின்னுவதெல்லாம் பொன் அல்ல! வேஷதாரிகள் எல்லாம் சாதுக்கள் அல்ல!! / All that glitters is not gold

ஆன்மீகப் பதிவு, கதைகள்
மஹாபாரதப் போர் ஆரம்பிக்கும் முன், மன்னன் துரியோதனன், தன்னுடைய பாசறையில் கர்ணன், துச்சாதனன், சகுனி மற்றும் சகுனியின் மகனான சுவாலா ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினான். பின் சகுனியின் மற்றொரு மகனான உலுக்காவை அழைத்து, பாண்டவரிடம் தூது செல்லக் கூறினான். மேலும் தான் கூறும் பின்வரும் வார்த்தைகளை மாறாமல் அப்படியே யுதிஷ்டிரரிடம் கூறுமாறும் கேட்டுக் கொண்டான்.“ஓ பரத குலத் தோன்றலே, யுதிஷ்டிரா! எவ்வாறு உன்னுடைய இதயத்தை, அதர்மத்தில் நிலை நாட்டி உள்ளாய். நீ எல்லா ஜீவன்களின் துன்பத்தையும் நீக்குவதற்கு பதிலாக, பிரபஞ்சத்தின் அழிவை நீ எவ்வாறு விரும்பலாம்?" என்று கூறுமாறு துரியோதனன் உலுக்காவை கேட்டுக் கொண்டான்.மேலும், "தேவர்களால் அவருடைய ராஜ்யம் கைப்பற்றப்பட்ட போது, பிரகலாத மகாராஜா பாடிய பாடல் ஒன்று நான் கேட்டுள்ளேன்" என்று மேலும் பின்வரும் வரலாறை கூறினான்.பிரகலாத மகாராஜா தேவர்களிடம், "தேவ...
உங்கள் இயக்கத்தில் இளம் வயதினர் அதிகம் ஏன்? / Why more young people in ISKCON?

உங்கள் இயக்கத்தில் இளம் வயதினர் அதிகம் ஏன்? / Why more young people in ISKCON?

ஆன்மீகப் பதிவு, பக்தி யோக - Tips
பிரபுபாதாவை யாரெல்லாம் முதல் முறையாக பார்க்கிறார்களோ அவர்களது வாழ்க்கையில் அது மிகவும் முக்கியமான நிகழ்வாக இருக்கும்.அப்படி ஒரு நிகழ்வு, ஸ்ரீல பிரபுபாதா கெய்ன்ஸ்வெல நகரத்திற்கு வந்த போதும் நடந்தது. புளோரிடாவில் உள்ள இந்த 'கெய்ன்ஸ்வெல' நகரம் மிக மிகச் சிறிய இடமாகும். அதே போல் இங்கிருந்த இஸ்கான் மையமும் சிறியது தான்.உலகளவிலான இஸ்கான் கோயில் பட்டியலில் கூட இதன் பெயர் இடம் பெற வில்லை. இருந்தும் பிரபுபாதா வந்தது எங்களுக்கு மிகவும் சந்தோசம்             வந்ததும் பிரபுபாதா ஒரு அறிமுக உரையை அளித்தார்.அந்த உரையில் பிரபுபாதா "ஸ்ரீ சைதன்ய மஹாப்பிரபுவின் பிறப்பிடத் திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் இந்த இடத்தில் இருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷம்" என்றார்.தொடர்ந்து பிரபுபாதா பேசுகையில், 'எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இந...
இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ? / Duty of  a Person

இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ? / Duty of a Person

ஆன்மீகப் பதிவு, பக்தி யோக - Tips, வாழ்க்கை தத்துவம்
இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ?உயிர் வாழ்பவனின் கடமை என்ன? உயிர் பிரியப் போகிறவனின் கடமை என்ன? என்ற இரண்டு கேள்விகள் மனித சமுதாயத்திற்கு மிகவும் ஆர்வத்தை தூண்டும் இரு கேள்விகளாகும். இந்த இரண்டு கேள்விகளே ஸ்ரீமத் பாகவதத்தின் மூல அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.பரிக்ஷித்து சாபம் பெறுதல்"மரியாதை இன்றி என்னுடைய தந்தையை (கழுத்தில் செத்த பாம்பை மாலையாக இட்டு) அவமதித்த குலத்துரோகியை (பரிக்ஷித்து மகாராஜனை), இன்றிலிருந்து ஏழாவது நாள் தக்ஷகன் கடிக்கட்டும்'' என்று சமீக மகரிஷியின் புத்திரனான சிறுவன் ஸ்ருங்கி தன் தவ வலிமையால் பரிக்ஷித்து மகாராஜனுக்கு சாபம் இட்டான்.ஸ்ருங்கி இட்ட சாபத்தால் தக்ஷகன் தன்னை தீண்டப் போவதையும், அதனால் தனக்கு திடீர் மரணம் விளையப் போவதையும் அறிய வந்த பரிக்ஷித்து மகாராஜா, தான் உலகைத் துறந்து விடுவதற்கு இதுவே சரியான காரணமாக இருக்கப் போகிறது என்பதை உண...
Varuthini Ekadashi (Tamil) / வருத்தினி ஏகாதசி

Varuthini Ekadashi (Tamil) / வருத்தினி ஏகாதசி

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய வருத்தினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்ட்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கூறினார். ஓ! வாசுதேவா, எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து (ஏப்ரல்/மே) மாதங்களின் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் பெருமைகளை பற்றியும் எனக்கு விளக்குங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தருமை மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தரமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகி...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question