
இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ? / Duty of a Person
இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ?உயிர் வாழ்பவனின் கடமை என்ன? உயிர் பிரியப் போகிறவனின் கடமை என்ன? என்ற இரண்டு கேள்விகள் மனித சமுதாயத்திற்கு மிகவும் ஆர்வத்தை தூண்டும் இரு கேள்விகளாகும். இந்த இரண்டு கேள்விகளே ஸ்ரீமத் பாகவதத்தின் மூல அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.பரிக்ஷித்து சாபம் பெறுதல்"மரியாதை இன்றி என்னுடைய தந்தையை (கழுத்தில் செத்த பாம்பை மாலையாக இட்டு) அவமதித்த குலத்துரோகியை (பரிக்ஷித்து மகாராஜனை), இன்றிலிருந்து ஏழாவது நாள் தக்ஷகன் கடிக்கட்டும்'' என்று சமீக மகரிஷியின் புத்திரனான சிறுவன் ஸ்ருங்கி தன் தவ வலிமையால் பரிக்ஷித்து மகாராஜனுக்கு சாபம் இட்டான்.ஸ்ருங்கி இட்ட சாபத்தால் தக்ஷகன் தன்னை தீண்டப் போவதையும், அதனால் தனக்கு திடீர் மரணம் விளையப் போவதையும் அறிய வந்த பரிக்ஷித்து மகாராஜா, தான் உலகைத் துறந்து விடுவதற்கு இதுவே சரியான காரணமாக இருக்கப் போகிறது என்பதை உணர...