Tuesday, December 3

Chaturmas (Tamil) / சாதுர்மாஸ்யம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

சாதுர்மாஸ்ய காலம் என்பது ஆஷாட (ஜுன் – ஜுலை ) மாதத்தில் வளர்பிறை ஏகாதசியான ஷயன ஏகாதசியிலிருந்து தொடங்கி, கார்த்திக ( அக்டோபர்- நவம்பர்) மாதத்தின் வளர்பிறை ஏகாதசியான உத்தான ஏகாதசியன்று முடிகிறது. இந்த நான்கு மாத காலமானது “சாதுர்மாஸ்யம்” என்று அறியப்படுகிறது. வைஷ்ணவர்கள் சிலர் இதனை ஆஷாட மாதத்தின் பெளர்ணமி நாளிலிருந்து கார்த்திக மாதத்தின் பெளர்ணமி நாள் வரை அனுசரிக்கின்றனர். இதுவும் நான்கு மாத காலமாகும். சந்திர மாதங்களை வைத்து கணக்கிடப்படும் இந்த காலம் சாதுர்மாஸ்யம் எனப்படுகிறது. சூரிய மாதத்தினைப் பின்பற்றுவோர் சிராவண மாதத்திலிருந்து கார்த்திக மாதம் வரை சாதுர்மாஸ்யத்தை அனுசரிக்கின்றனர். சூரிய மாதமோ சந்திர மாதமோ, ஒட்டு மொத்த காலமும் மழைக்காலத்தின்போது வருகிறது.

 சாதுர்மாஸ்யம் எல்லாத் தரப்பட்ட மக்களாலும் அனுசரிக்கப்பட வேண்டும். கிரஹஸ்தரா (குடும்பத்தினர்) சந்நியாசியா என்பது பொருட்டல்ல. இதை அனுசரிப்பது எல்லா ஆஷ்ரமங்களுக்கும் கடமையாகும். இந்த நான்கு மாத காலத்தின்போது மேற்கொள்ளப்படும் விரதத்தின் உண்மையான குறிக்கோள் புலனுகர்ச்சியின் அளவைக் குறைத்துக்கொள்வதாகும். இது கடினமானதல்ல.

*சிராவண மாதத்தில் கீரை (கருவேப்பிலை, மல்லி இலை, புதினா) உண்ணக் கூடாது.
*பாத்ர மாதத்தில் தயிர் உண்ணக் கூடாது.
*ஆஸ்வின மாதத்தில் பால் அருந்தக் கூடாது.
*கார்த்திக மாதத்தில் மீன் மற்றும் இதர அசைவ பொருட்களை உண்ணக் கூடாது. அசைவ உணவு என்பது மீன் மற்றும் மாமிசத்தினைக் குறிக்கின்றது. அதுபோலவே, மசூர் பருப்பும் உளுத்தம் பருப்பும் அசைவ உணவாகக் கருதப்படுகின்றன. இந்த இரண்டு பருப்புகளிலும் அதிகளவில் புரதச்சத்து உள்ளது. புரதம் அதிகமாகக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள் அசைவமாகக் கருதப்படுகின்றன. மொத்தமாகப் பார்த்தால், சாதுர்மாஸ்யத்தின் நான்கு மாத காலத்தின்போது, புலனின்பத்திற்கான எல்லா உணவையும் கைவிடுவதற்குப் பயிற்சி செய்ய வேண்டும் .

2 Comments

  • Kadamba

    சாதுர்மாஸ்ய காலம் என்பது ஆஷாட (ஜூன் – ஜூலை) மாதத்தில் வளர்பிறை ஏகாதசியான ஷயன ஏகாதசியிலிருந்து தொடங்கி, கார்த்திக (அக்டோபர் – நவம்பர் )மாதத்தின் வளர்பிறை ஏகாதசியான உத்தான ஏகாதசியன்று முடிகிறது. இந்த நான்கு மாத காலமானது சாதுர்மாஸ்யம் என்று அறியப்படுகிறது. வைஷ்ணவர்கள் சிலர் இதனை ஆஷாட மாதத்தின் பௌர்ணமி நாளிலிருந்து கார்த்திக மாதத்தின் பௌர்ணமி நாள் வரை அனுசரிக்கின்றனர். இதுவும் நான்கு மாத காலமாகும். சந்திர மாதங்களை வைத்துக் கணக்கிடப்படும் இந்த காலம் சாதுர்மாஸ்யம் எனப்படுகிறது. சூரிய மாதத்தில் பின்பற்றுவோர் சிராவண மாதத்திலிருந்து கார்த்திகை மாதம் வரை சாதுர்மாஸ்யத்தை அனுசரிக்கின்றனர். சூரிய மாதமோ சந்திர மாதமோ, ஒட்டுமொத்த காலமும் மழைக்காலத்தின்போது வருகிறது. சாதுர்மாஸ்யம் எல்லா தரப்பட்ட மக்களாலும் அனுசரிக்கப்பட வேண்டும். கிருஹஸ்தரா சந்நியாசியா என்பது பொருட்டல்ல. இதை அனுசரிப்பது எல்லா ஆஷ்ரமங்களுக்கும் கடமையாகும். இந்த நான்கு மாத காலத்தின்போது மேற்கொள்ளப்படும் விரதத்தின் உண்மையான குறிக்கோள் புலனுகர்ச்சியின் அளவை குறைத்துக் கொள்வதாகும். இது கடினமானதல்ல.

    * இந்த விரத காலங்களில் அசைவம் உண்ணக்கூடாது

    * சிரவண மாதத்தில் கீரை உண்ணக்கூடாது .

    *பாத்ர மாத்தில் தயிர் உண்ணக்கூடாது .

    *ஆஸ்வின மாதத்தில் பால் அருந்தக் கூடாது.

    *கார்த்திக மாதத்தில் மீன் மற்றும் இதர அசைவ பொருட்களை உண்ணக் கூடாது. அசைவ உணவு என்பது மீன் மற்றும் மாமிசத்தினைக் குறிக்கின்றது. அதுபோலவே, மசூர் பருப்பும் உளுத்தம் பருப்பும் ( இந்த மாதம்)அசைவ உணவாகக் கருதப்படுகின்றன. இந்த இரண்டு பருப்புகளிலும் அதிகளவில் புரதச்சத்து உள்ளது. புரதம் அதிகமாகக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள் அசைவகமாகக் கருதப்படுகின்றன. மொத்தமாக பார்த்தால் சாதுர்மாஸ்யத்தின் நான்கு மாத காலத்தின்போது , புலனின்பத்திற்கான எல்லா உணவையும் கைவிடுவதற்குப் பயிற்சி செய்ய வேண்டும்.

    ( ஶ்ரீல பிரபுபாதர் / பொருளுரை / ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / மத்யலீலை 4.169 )
    சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் வழிமுறை

    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🍁அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் (சூரிய உதயத்திற்கு 1 1/2 மணி நேரத்திற்கு முன்பு) எழுந்து குளித்த பிறகு, மங்கள ஆரத்தி செய்து அதன் பின்னர் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

    🍁தினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு நெய் தீபமேற்றி வணங்கி வர வேண்டும்.

    🍁உயர்ந்த வைஷ்ணவர்களின் சங்கத்தில் தினமும் ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்க முயற்சி செய்தல் நன்று.

    🍁ஜபம் செய்யும் போதும் கீர்த்தனத்தின் போதும் கிருஷ்ணரின் திருநாமத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிகமாக ஜபம் செய்வதும், குடும்பத்தினருடன் இணைந்து கீர்த்தனம் செய்வதும் சிறந்தது.

    🍁மாதம் முழுவதும் பிரம்மசரிய விரதம் கடைபிடித்தல் அவசியம்.

    🍁 நான்கு விதிமுறைகளை பின்பற்றுதல்
    ********
    (1) மது அருந்தாமை

    ( மது அருந்துபவன் தவ வலிமையை இழந்துவிடுகிறான். அதாவது, புலன்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழக்கின்றான். )

    (2) தகாத பாலுறவில் ஈடுபடாமை

    ( சிற்றின்ப வெறியின் காரணத்தால் தகாத உடலுறவில் ஈடுபடுபவன் அகத்தூய்மை, புறத்தூய்மை என இரண்டையும் இழக்கிறான். )

    (3) மாமிசம் உண்ணாமை

    ( வயிற்றை நிரப்புவதற்காக அப்பாவி மிருகங்களைக் கொன்று உண்பவன் தயை (கருணை) என்னும் நற்குணத்தை இழந்துவிடுகிறான். )

    (4)சூதாடாமை

    ( சூதாட்டத்தில் ஈடுபடுபவன் உண்மை என்னும் உயர்ந்த குணத்தைக் கைவிடுகிறான்.

    (இதனால் இந்த நான்கு தீய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பது நியமமாக உள்ளது.)

    🍁 உங்களுக்குப் பிடித்தமான உணவு வகையினை இந்த மாதங்களில் கைவிடுதல் நன்று. நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தால், தினசரி ஒருவேளை மட்டும் சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

    🍁 விரத காலங்களில் அசைவம் உண்ணக்கூடாது

    🍁துளசி தேவிக்கு தினமும் ஆரத்தி செய்து கீர்த்தனம் பாடி, ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுவதற்கு பிரார்த்தனை செய்யவும்.

    🍁தூய பக்தர்களுக்கு தானம் வழங்குதல் நன்று.

    🍁தினமும் சுவையான பதார்த்தங்களைப் படைத்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question