Friday, August 22

Author: பக்தி யோகம் குழு

பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

ஆன்மீகப் பதிவு, Festivals-Tamil, திருவிழாக்கள்
கிருஷ்ணருக்கும் பக்தனுக்கும் இடையில் நிகழும் அன்புப் பரிமாற்றங்கள் மிகவும் இனிமையானவை. பகவானின் சொல்லை பக்தன் தட்ட மாட்டான் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். ஆனால் பக்தனின் சொல்லையும் பகவான் தட்ட மாட்டார் என்பதை நீங்கள் அறிவீர்களா?அன்னை யசோதையால் உரலில் கட்டிப்போடப்பட்ட கிருஷ்ணர் அந்த உரலுடன் நகர்ந்து இரண்டு மரங்களை வீழ்த்தி குபேரனின் இரண்டு மகன்களை விடுவித்தார். இந்த லீலையில் கிருஷ்ணர் எவ்வாறு தனது அன்பிற்குரிய பக்தரான நாரதரின் வார்த்தைகளை நிரூபித்தார் என்பதை சற்று காணலாம்.கிருஷ்ணர் செய்த குறும்புச் செயல்"அம்மா பசிக்குது," என்றபடி கிருஷ்ணர் தயிர்கடைந்து கொண்டிருந்த அன்னை யசோதையின் முந்தானையைப் பிடித்து அன்புடன் இழுக்கின்றார். குழந்தையைத் தடுக்க முடியாமல் அவனை எடுத்து மடியில் கிடத்தி அந்த அழகிய திருமுகத்தை ரசித்தபடி யசோதை பால் கொடுக்கத் தொடங்கினாள். கிருஷ்ணரும் அன்னையின் அன்பில...
இவுலகத்தின் துல்லியமும், நேர்த்தியும் யார் தந்தது?

இவுலகத்தின் துல்லியமும், நேர்த்தியும் யார் தந்தது?

வாழ்க்கை தத்துவம், New Posts
`இதில் குறிப்பாக அமெரிக்காவின் லீஹை யுனிவர்சிட்டியின் பேராசிரியர் 'மைக்கேல் பெஹே' எனும் விஞ்ஞானி தனது உலகப்புகழ்பெற்ற "டார்வின்ஸ் பிளாக்பாக்ஸ்" எனும் புத்தகத்தில் இவ்வுலகம் தானாகத் தோன்றியது என்று கூறுவதை கடுமையாக கண்டித்துள்ளார்.இதில் அவர் பல நடைமுறை உதாரணங்களை மேற்கோள் காட்டுகிறார்.அதாவது, நாம் ஒரு புல்லை செதுக்கும் இயந்திரத்தை (Lawn Mower) எடுத்துக் கொள்வோம். அந்த இயந்திரம் இயங்குவதற்கு பெட்ரோல் மற்றும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. பெட்ரோல் மற்றும் ஆக்ஸிஜன் இரண்டும் சேர்ந்து எரிந்து அந்த இயந்திரத்தை இயக்க வைக்கிறது.இப்போது ஒருவர் கூறலாம், "இந்த இயந்திரம் இயங்க வேண்டுமானால் எலக்ட்ரான் சார்ஜ் (electron charge) வேறுபடாமல் இருக்க வேண்டும். எரிபொருள் மற்றும் ஆக்ஸிஜனின் கெமிகல் ரியாக்டிவிட்டி சரியாக இருக்க வேண்டும். இவையெல்லாம் சரியாக இல்லையென்றால் வேலை செய்யாது' என்று.இதற்கு ...
செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு? / How to make a profession noble?

செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு? / How to make a profession noble?

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
சாதாரண மக்களால் செய்யப்படும் செயலுக்கும் பக்தனால் செய்யப்படும் செயலுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் ஓர் உரையாடல்.சீடன்: நாம் பற்றற்று இருக்க வேண்டும் என பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லும்போது என்ன நோக்கத்தோடு சொல்கிறார்?ஸ்ரீல பிரபுபாதர்: நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்வதை மட்டுமே விரும்ப வேண்டும் என்ற பொருள்பட சொல்கிறார். ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம் வா ஜகத் ஈஸ காமயே, "எனக்கு பொருள் தேவையில்லை. சீடர்கள் தேவையில்லை, அழகான பெண்கள் தேவையில்லை. என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். அப்போது அவருக்கு என்ன வேண்டுமென கோருகிறார்? "நான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும். என்கிறாரே தவிர, “எனக்கு எதுவும் தேவையில்லை. நான் ஒன்றுமில்லாத சூன்யமாக விரும்புகிறேன் என்று அவர் கூறவில்லை.சீடன்: பக்தரல்லாதவர்கூட தன்னுடைய தேவை என்ன என்பதை அறிந்துள்ளான். ஆனால் கிருஷ்ண...
திருநாமத்தின் மகிமை

திருநாமத்தின் மகிமை

ஹரி நாம மகிமை
கோலோகத்திலிருந்து வரக்கூடிய ஹரி நாமம்வழங்கியவர்: தவத்திரு ஜெயபதாக ஸ்வாமிஇந்த வாரம். திருநாம வாரம். இந்தத் திருநாமம் பகவானிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதால். விருந்தாவனத்திலுள்ள பக்தர்கள் அனைவரும் கிருஷ்ணரின் திருநாமத்தை எப்போதும் உச்சரிக்கின்றனர். கோபியர்கள் ராஸ் நடனத்தின்போது ஹரே கிருஷ்ண மந்திரத்தை உரைக்கின்றனர். அன்னை யசோதை தயிர் கடையும்போது கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கிறாள். விருந்தாவனவாசிகள் அனைவரும் கிருஷ்ண நாமத்தை எப்போதும் உரைக்கின்றனர். எனவே, இந்த கிருஷ்ண நாம ஸங்கீர்த்தனம், கோலோகேர ப்ரேம தன ஹரி-நாம ஸங்கீர்தன, கோலோக விருந்தாவனத்திலிருந்து கிருஷ்ண பிரேமையைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.கிருஷ்ண மந்த்ர ஹைதே ஹபே ஸம்ஸார மோசனகிருஷ்ண-நாம ஹைதே பாபே கிருஷ்ணேர சரண“கிருஷ்ண நாமத்தை உச்சரிப்பதால் பௌதிக வாழ்விலிருந்து எளிதாக விடுதலை பெற முடியும். உண்மையில், ஹரே கிருஷ்ண மந்திரத்த...
எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும்

எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும்

ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
நெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது சீடர்களில் ஒருவருடன் 1974ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரத்தில் பரிமாறிக் கொண்ட கருத்துகள்சீடர்: சமீபத்தில் இந்தியாவிலுள்ள ஓர் அரசியல்வாதி, தமது சொற்பொழிவில், இந்திய மக்களில் எட்டு சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வசிப்பதாகவும். விளைநிலங்களில் தொழில் நுட்பத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும். கோதுமையைக் கையால் அறுவடை செய்வதற்குப் பதிலாக அறுவடை இயந்திரத்தையும் காளைகளைப் பூட்டி ஏர் உழுவதற்குப் பதிலாக டிராக்டர்களையும் பயன்படுத்த வேண்டுமென்றும் கூறியுள்ளார்.ஸ்ரீல பிரபுபாதர்: இந்தியாவிலுள்ள பலர் ஏற்கனவே வேலையின்றி இருப்பதால், அதிகமான இயந்திரங்களைப் புகுத்துவது நல்ல திட்டமல்ல. நூறு மனிதர்களால் செய்யப்படும் ஒரு வேலையை இயந்திரத்தைக் கொண்டு ஒரு மனிதன் செய்துவிடமுடியும். ஆனால் மீதமுள்ளமனிதர்கள் வேலையின்ற...
Pavitropana Ekadashi (Tamil) / பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி

Pavitropana Ekadashi (Tamil) / பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி

ஏகாதசி
பவித்ரோபன ஏகாதசியின் விரத மகிமையைப் பற்றிப் பார்ப்போமா:- இந்த பவித்ரோபன ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி மஹாவிஷ்ணுவே யுதிஷ்டிரரிடம் கூறியிருக்கிறார்.மஹாராஜாவான ஸ்ரீ யுதிஷ்டிரர், கிருஷ்ண பரமாத்மாவிடம் "அரக்கன் மதுவை அழித்ததால் "மதுசூதனன்" என்ற திருநாமம் பெற்றவரே சிரவண மாதம், சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி அறிய விரும்புகிறேன். ஆகையால் கிருஷ்ண பரமாத்வாவே தயை கூர்ந்து இந்த ஏகாதசி விரதத்தின் மகத்துவத்தை விரிவாக சொல்லுங்கள்" என்று வேண்டிக் கொண்டார்.முழுமுதற் கடவுளான கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரிடம், "மஹாராஜனே, இந்த ஏகாதசி தினத்தைப் பற்றி நீ அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஏகாதசியின் மகத்துவத்தைப் பற்றி சொல்கிறேன் கேள்! என்று கிருஷ்ண பரமாத்மா விரத மகிமையை எடுத்துரைத்தார்.பரமாத்மா கிருஷ்ணர் கூறுதல்:-இந்த ஏகாதசியானது மிகவும் புனிதமானது. இந்...
கம்யூனிச ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி எவ்வாறு பரவியது? / Krishna Consciousness in Russia

கம்யூனிச ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி எவ்வாறு பரவியது? / Krishna Consciousness in Russia

ஆன்மீகப் பதிவு
ஹரே கிருஷ்ண இயக்கம் என்று பரவலாக அறியப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) மிகவும் குறுகிய காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். தற்போது இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் கிருஷ்ண பக்தர்கள் வாழும் நாடாக ரஷ்யா திகழ்கிறது. ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போரினால் உலக நாடுகளெல்லாம் அச்சம்கொள்ளும் அளவிற்கு ரஷ்யா வலிமையாக இருந்த காலகட்டத்தில், கடவுள் மறுப்புக் கொள்கை வேரூன்றியிருந்த கம்யூனிச நாடான ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி விதைக்கப்பட்டு வளர்ந்த விதம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கக்கூடியதாகும். இத்தகு அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது? அறிந்துகொள்ளலாம் வாருங்கள்!ஸ்ரீல பிரபுபாதரின் ரஷ்ய விஜயம்அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) 1966ஆம் ஆண்டு தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதரால் அமெரிக்காவில் ஸ்த...
நம்பிக்கை / Faith (Tamil)

நம்பிக்கை / Faith (Tamil)

ஆன்மீகப் பதிவு
நம்பிக்கைஆன்மீக வாழ்வின் அஸ்திவாரம்நம்பிக்கை ஆன்மீக முன்னேற்றத்தின் அஸ்திவாரம். நம்பிக்கையுடன் இருப்பது நமது இயற்கையாகும். ஆனால் அந்த நம்பிக்கை எப்படி பட்டதாக இருக்க வேண்டும்?பொதுவாக நம்பிக்கையில் பல வகைகள் இருக்கின்றன. இருப்பினும் நம்பிக்கையை குறிப்பாக இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று ஆன்மீக நம்பிக்கை, மற்றொன்று பௌதிக நம்பிக்கை.ஆன்மீக நம்பிக்கைஸ்ரீலரூப கோஸ்வாமி அவர்கள் இந்த ஆன்மீக நம்பிக்கையை 'ஆஷா பந்த' என்று குறிப்பிடுகிறார். ஆன்மீக நம்பிக்கை இருக்கக் கூடிய ஒரு பக்தர், “நான் என்னால் முடிந்தவரை பக்தி நெறிகளை கடைபிடித்து வருகின்றேன். ஆகவே எப்படியாவது என்றைக்காவது நான் பகவானின் கருணையை பெறுவேன். கண்டிப்பாக என்னால் பகவானிடம் திரும்பிச் செல்ல முடியும். எனக்கு எந்த விதமான தகுதியும், ஞானமும், பகவானின் மேல் அன்பும் இல்லை என்றாலும், நான் பகவானிடம் செல்ல விரும்புகின்றேன். அதற்க...
பரம ஏகாதசி / Parama Ekadashi (Tamil)

பரம ஏகாதசி / Parama Ekadashi (Tamil)

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
தற்போது வரக்கூடிய ஏகாதசி, 32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் #பரம ஏகாதசி ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த வருடம் 'அதிக' மாதம் வந்துள்ளது.யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார். "பரம்பொருளே, மதுஸூதனா! 'அதிக' மாதத்தில், கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம். பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள்" என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "ஓ யுதிஷ்டிரா,...
கடவுள் இருக்கின்றார் என்றால்,ஏன் பல்வேறு துன்பங்கள்? / If God exists, Why the various sufferings (Tamil) ?

கடவுள் இருக்கின்றார் என்றால்,ஏன் பல்வேறு துன்பங்கள்? / If God exists, Why the various sufferings (Tamil) ?

வாழ்க்கை தத்துவம்
தலைமுடியை வெட்டி தாடியைச் சீர்படுத்த ஒருவன் முடிதிருத்தகத்திற்குச் சென்றான். சவரத் தொழிலாளி தனது பணியை செய்யத் தொடங்கியவுடன் அவர்கள் இருவரும் பேசத் தொடங்கினர். பல்வேறு விஷயங்களைப் பேசி வந்த அவர்கள் கடவுளைப் பற்றியும் பேசத் தொடங்கினர். “எனக்குக் கடவுளின் மீது நம்பிக்கைக் கிடையாது, என்று சவரத் தொழிலாளி கூறினான்.‘ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?" என வாடிக்கையாளர் வினவ, “நீங்கள் தெருவில் நடந்து சென்றால் போதும், கடவுள் இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். கடவுள் இருப்பதாக இருந்தால், ஏன் இத்தனை மக்கள் வியாதியுடன் வாழ்ந்து வருகின்றனர்? ஏன் அனாதைக் குழந்தைகள் இருக்கின்றனர்? கடவுள் இருக்கின்றார் என்றால், வலியோ துன்பமோ இருக்கக் கூடாது. அன்புமிக்க கடவுள் இதையெல்லாம் அனுமதிக்கின்றார் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை, என்று பதில் கிடைத்தது.ஒரு நிமிடம் யோசித்த வாடிக்கை யாளர், வீண் வாத...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.