Monday, November 2

Author: பக்தி யோகம் குழு

Papamochani Ekadashi (Tamil) / பாபமோசனி ஏகாதசி

Papamochani Ekadashi (Tamil) / பாபமோசனி ஏகாதசி

ஏகாதசி
பாபமோசனி ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.அர்ஜூனன், பரமாத்மா கிருஷ்ணரிடம்," மதுசூதனா ! ஒவ்வொரு ஏகாதசி விரத மஹாத்மிய கதைகளைக் கேட்டு, மனம் ஆனந்தத்தால் உற்சாகம் அடைவதுடன் மற்ற ஏகாதசி மஹாத்மிய கதைகளையும் அறிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது.ஸ்ரீ கிருஷ்ண கோபாலா!, தாங்கள் கிருபை புரிந்து சித்திரை (சைத்ர) மாதம், கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி விரத மஹாத்மியத்தை பற்றி கூற வேண்டுகிறேன். அந்த ஏகாதசி, எந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றது, அன்று எந்த தெய்வத்திற்கு பூஜை ஆராதனை செய்ய வேண்டும், விரதம் அனுஷ்டிப்பதற்கான விதிமுறை, இவற்றைப் பற்றி தாங்கள் கருணையுடன் விஸ்தாரமாக எடுத்துரைக்க வேண்டும்," என்று வேண்டி நின்றான்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜூனனின் வேண்டுகோளுக்கு இணங்கி," பாண்டு நந்தனா! ஒரு சமயம் ப்ருத்வியை (பூமி) ஆண்ட ராஜா மாந்தாதா, ரிஷி லோமசரிடம் இதே கேள்வியை கேட்டான். ராஜனின் கேள்விக்கு லோமச ரிஷி அளி...
ஸ்ரீவாஸ பண்டிதர்

ஸ்ரீவாஸ பண்டிதர்

வாழ்க்கை வரலாறு
பஞ்ச தத்துவத்தில் ஐந்தாவது ஸ்ரீவாஸ பண்டிதர், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், பிரபு நித்யானந்தர், ஸ்ரீ அத்வைதர், கதாதரர், ஸ்ரீவாஸாதி, கௌர பக்த பிருந்தர்கள். பகவான் சைதன்யரின் அவதாரத்திற்கு முன்பே நவதீபத்தில் வாழ்ந்து வந்தனர். ஸ்ரீவாஸர் தனது சகோதரர்களான ஸ்ரீ ராமர், ஸ்ரீ நிதி மற்றும் ஸ்ரீபதியை கிருஷ்ணரின் நாமங்களைப் பாடுதல், பகவானை வழிபடுதல் மற்றும் தினமும் மூன்று முறை கங்கையில் நீராடுதல் போன்ற அவர்களின் பக்தி வாழ்க்கையில் வழிநடத்தினார். ஸ்ரீ அத்வைத ஆச்சார்ய பிரபுவைச் சந்தித்த அவர்கள், பாகவதத்தைப் படித்தனர் மற்றும் முழுமுதற் கடவுளின் அவதாரத்திற்காகப் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் ஏன் பிரார்த்தனை செய்தார்கள்? ஏனென்றால், அந்த நேரத்தில் நதியாவில் (Nadia) தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த தீவிர நாத்திகர்கள், தர்க்கவாதிகள் மற்றும் கர்வம் கொண்ட பண்டிதர்களிடையே வைணவத்தை கிருஷ்ணரின் அவதாரத்தால் மட்டுமே மீண்டும் ந...
Sri Madhavendra Puri

Sri Madhavendra Puri

வாழ்க்கை வரலாறு
ஸ்ரீல மாதவேந்திர பூரிஸ்ரீல மாதவேந்திர பூரி 14 ஆம் நூற்றாண்டில் தோன்றினார். நான்கு வைணவப் பரம்பரைகளில் (பிரம்மா, ஸ்ரீ, ருத்ர மற்றும் சனக) ஒன்றான பிரம்மா அல்லது மத்வ சம்பிரதாயத்தின் குருவாக அவர் திகழ்ந்தார். மாதவேந்திர பூரி லக்ஷ்மிபதி-தீர்த்தரின் சீடர் ஆவார். மாதவேந்திர பூரியின் சீடர்களில் ஈஸ்வர பூரி, அத்வைத ஆச்சாரியர், பரமானந்த பூரி (திர்ஹு பகுதியைச் சேர்ந்த ஒரு பிராமணர்), பிரம்மானந்த பூரி, ஸ்ரீ ரங்க பூரி, புண்டரீக வித்யானிதி, ரகுபதி உபாத்யாயா மற்றும் பலர் அடங்குவர். நித்தியானந்த பிரபு மாதவேந்திர பூரியின் சீடர் என்று சிலர் கூறுகிறார்கள், மற்றவர்கள் லக்ஷ்மிபதி அவரது குரு என்று கூறுகிறார்கள், அதே சமயம் 'பிரேம-விலாசம்' என்ற நூல் அவர் ஈஸ்வர பூரியின் சீடர் என்று கூறுகிறது.இவ்வுலகை விட்டுப் பிரியும் போது, மாதவேந்திர பூரி கிருஷ்ணருடனான பிரிவின் ஏக்கத்தினால் முழுமையாக மூழ்கி, தொடர்ந்து ஒரு ...
Amalaki Ekadasi (Tamil) / ஆமலாகீ ஏகாதசி (நெல்லிக்கனி ஏகாதசி)

Amalaki Ekadasi (Tamil) / ஆமலாகீ ஏகாதசி (நெல்லிக்கனி ஏகாதசி)

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
பால்குண மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை ஆமலாகீ ஏகாதசியாக கொண்டாடுவர். ஆமலாகீ ஏகாதசிவிரத மகிமையை நாம் காண்போம். 80,000 ,ரிஷி முனிவர்கள் சூத முனிவரின் உபன்யாசத்தைக் கேட்பதற்காக கூடியிருந்த பொழுது சூதர் "முனிவர்களே,முன்பொரு முறை நடந்த சம்பவம் இது. மஹான் ராஜா மாந்தாதா வசிஷ்டரிடம் கேட்டார்," பிரம்மரிஷி வசிஷ்டரே, தாங்கள் என்னை ஆசீர்வதிக்க நினைத்தால், மங்களமான நன்மை அளிக்கும் விரதம் ஏதாவது உண்டென்றால், அந்த விரதத்தைப் பற்றிய கதை, அதன் மஹிமை இவற்றைப் பற்றி கூறிஅருளுங்கள்." என்றார். மஹரிஷி வசிஷ்டர்," ராஜன், உத்தமமானதும், மோட்சப்பிராப்தியை அளிக்கக் கூடியதும் ஆன ஆமலாகீ ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களிலும் மேலானது ஆகும்." என்றார்.ராஜா மாந்தாதா வசிஷ்டரிடம், "வேதங்களில் பாண்டித்யம் பெற்ற முனி சிரேஷ்டரே, அமலாகீ விரதம் உருவானகதை, விரதம் அனுஷ்டிக்கும் விதிமுறை இவற்றைப் பற்றி கருணையுடன் விஸ்தாரம...
கிருஷ்ண லீலையில் கௌர லீலையின் சகாக்கள் யார் யார்?

கிருஷ்ண லீலையில் கௌர லீலையின் சகாக்கள் யார் யார்?

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீ கிருஷ்ணர்
கிருஷ்ண லீலையில் கௌர லீலையின் சகாக்கள் யார் யார்?ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் சுந்தரரின் சகாக்கள், ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் நித்திய லீலைகளில் உள்ள அதே ஆன்மீக அடையாளங்களைக் கொண்டவர்கள் ஆவர்.ஸ்ரீல நரோத்தம தாச தாக்கூர் தனது 'பிரார்த்தனா' நூலில் "சுவர்ண ஸ்ரீ கௌர மஹிமா" (ஸ்ரீ கௌராங்கரின் மகிமைகள்) என்ற பாடலில் ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் சகாக்களின் முழு மகிமைகளையும் பின்வருமாறு விவரிக்கிறார்:கௌராங்கேர சங்கி-கணே, நித்ய-சித்த கரி மானே, ஸே ஜாய வ்ரஜேந்திர-சுத பாஷ ஸ்ரீ-கௌட-மண்டல-பூமி, யேபா ஜானே சிந்தாமணி தார ஹய வ்ரஜ-பூமே வாஸபொருள்: ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சகாக்களை நித்ய-சித்தர்கள் என ஏற்றுக்கொள்பவர், பரம புருஷ பகவானின் சகாவாக ஆன்மீக லோகத்திற்கு உயர்வது உறுதி. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தங்கியிருந்த வங்காளத்தில் உள்ள கௌர-மண்டல-பூமி வ்ரஜபூமி அல்லது பிருந்தாவனத்திற்கு சமமானது என்பதையும் ஒருவர் அறிய வேண...
Four Regulative Principle

Four Regulative Principle

வாழ்க்கை தத்துவம்
நான்கு ஒழுங்குமுறை கொள்கைகள் (Four Regulative Principles)மனித சமுதாயம் நான்கு தூண்களின் மீது நிற்கிறது. அவை: கருணை, உண்மைத்தன்மை, தவம் மற்றும் தூய்மை. இந்த குணங்களை அனைவரும் மதிக்கின்றனர். இந்த நான்கு ஒழுங்குமுறை கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், நாம் இந்தத் தூண்களை வலுப்படுத்துகிறோம், மேலும் துன்பங்களிலிருந்தும் மற்றவர்களுக்கு வேதனை ஏற்படுத்துவதிலிருந்தும் நம்மை நாமே விடுவித்துக் கொள்கிறோம். 'ஹரே கிருஷ்ணா' மந்திரத்தை உச்சரிப்பதோடு சேர்த்து, இந்தக் கொள்கைகளைப் பின்பற்றுவதுமே கிருஷ்ண உணர்வு (Krishna consciousness) பயிற்சியின் அடிப்படையாகும்.1. இறைச்சி, மீன், முட்டை உண்ணக் கூடாது. விலங்குகளைக் கொல்வது கருணை என்ற குணத்தை அழிக்கிறது. இறந்த விலங்குகளை உட்கொள்வதன் மூலம் ஒருவன் தன் உடலையே இடுகாடாக மாற்றுகிறான். இந்த உணவுகள் ரஜோ குணம் (passion) மற்றும் தமோ குணங்களால் (ignorance) நிரம்பியுள...
Rasikananda Prabhu

Rasikananda Prabhu

வாழ்க்கை வரலாறு
ஸ்ரீ ரசிகானந்த பிரபுவின் வாழ்க்கை வரலாறுதமது குருவான ஸ்ரீ சியாமானந்தரின் கட்டளையைத் தலைமேற்கொண்டு, ரசிகானந்தர் ஏறத்தாழ 16 ஆண்டுகள் ஸ்ரீ கௌரசுந்தரரின் போதனைகளை இவ்வுலகில் பிரச்சாரம் செய்தார். அதன்பிறகு, ரேமுனாவில் உள்ள கோபிநாதரின் தாமரைத் திருவடிகள் மூலம் அவர் தனது நித்திய லீலைக்குள் (இறைவனின் நிரந்தரத் திருவிளையாடல்கள்) நுழைந்தார். சாகப்தம் 1574 (கி.பி 1652), பங்குனி மாதத்தின் வளர்பிறை முதல் நாளில், ரசிகானந்தர் யாருக்கும் தெரியாமல் அமைதியாக சாந்தா கிராமத்திலிருந்து வெளியேறி ரேமுனாவிற்கு நடந்து சென்றார். அங்கு வந்ததும், அங்கிருந்த பக்தர்களுடன் சிறிது நேரம் கிருஷ்ண-கதையைப் பற்றிப் பேசினார். மேலும் அனைவரையும் பக்தியுடன் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சேவை செய்யுமாறு அறிவுறுத்தினார். பின்னர், சங்கீர்த்தனத்தைத் தொடங்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டு, அவர் ஸ்ரீ கோபிநாதர் ஆலயத்திற்குள் நுழைந்தார். முழும...
Jagannatha Dasa Babaji

Jagannatha Dasa Babaji

வாழ்க்கை வரலாறு
ஸ்ரீல ஜெகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜாஸ்ரீல ஜெகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜா நூற்று நாற்பத்தி நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் ஸ்ரீ மதுசூதன தாஸ பாபாஜியிடமிருந்து தீக்ஷை (ஆன்மீக உபதேசம்) பெற்று, பிருந்தாவனத்தில் உள்ள சூர்ய குண்டத்தில் பல ஆண்டுகள் பஜனை செய்தார். தாகூர் பக்திவினோத, ஜெகந்நாத தாஸ பாபாஜியிடமிருந்து தூய பக்தி சேவையைப் பற்றிய மதிப்புமிக்க உபதேசங்களைப் பெற்றார்.அவர் ஸ்ரீ நவத்வீப தாமத்தில் ஆறு மாதங்களும், விரஜ மண்டலத்தில் ஆறு மாதங்களும் வசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். "அவரது காலத்தில், ஸ்ரீ ஜெகந்நாத தாஸ பாபாஜி கௌர மற்றும் விரஜ மண்டலங்களிலும், புருஷோத்தம க்ஷேத்திரத்திலும் (ஜெகந்நாத பூரி) மிகவும் முன்னேறிய ரசிக வைஷ்ணவராக இருந்தார்" என்று தாகூர் பக்திவினோத கூறியுள்ளார். பக்திவினோத தாகூர் அவருக்கு 'ஸார்வபௌமா' (வைஷ்ணவர்களின் தலைவர்) என்ற பட்டத்தை வழங்கினார்.தீவிர பக்தி மற்றும் லீ...
Sri Ishvara Puri

Sri Ishvara Puri

வாழ்க்கை வரலாறு
ஸ்ரீ கிருஷ்ணதாச கவிராஜ கோஸ்வாமி, ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில், பக்தி கற்பக விருட்சத்தின் முதல் கிளை ஸ்ரீ மாதவேந்திர பூரியின் ரூபத்தில் வெளிப்பட்டது என்றும், அந்த கிளை ஸ்ரீ ஈஸ்வர் பூரியின் ரூபத்தில் ஒரு மரக்கன்றாக வளர்ந்தது என்றும் விவரித்துள்ளார். பின்னர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் (அவரே தோட்டக்காரராகவும் இருந்தார்) ரூபத்தில், அந்த மரக்கன்று பக்தி கற்பக விருட்சத்தின் பிரம்மாண்டமான மரமாக மாறியது. [C. C. Adi 9.10-11]ஸ்ரீ ஈஸ்வர் பூரி ஜேஷ்டா மாதத்தின் (ஆனி மாதம்) பௌர்ணமி நாளில் இந்த உலகில் தோன்றினார். அவர் தனது குருவான ஸ்ரீ மாதவேந்திர பூரிக்கு மிகவும் நம்பிக்கையுடன் சேவை செய்தார், குறிப்பாக வாழ்க்கையின் இறுதி நாட்களில் அவர் செய்த சேவை குறிப்பிடத்தக்கது. [C. C. Antya 8.26]"அந்த உயரிய மனம் கொண்ட மகான் எப்போதும் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தி ரசத்தில் மூழ்கியிருந்தார். இதனால் அவர் ஸ்ரீ கிருஷ்ணருக்...
Vijaya Ekadashi (Tamil) / விஜய ஏகாதசி

Vijaya Ekadashi (Tamil) / விஜய ஏகாதசி

ஏகாதசி
மாசிமாதம் - கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை விஜய ஏகாதசியாக ‌கொண்டாடுவர். விஜய ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.ஏகாதசிவிரத மஹாத்மிய கதைகள் அர்ஜூனனின் மனதிற்கு அளவில்லாத ஆனந்தம் அளித்தாலும், திருப்தி அடையாமல், ஜெயா ஏகாதசி விரத மஹிமையை கேட்டு முடித்தவுடன், ஸ்ரீகிருஷ்ணரிடம், " ஹே மதுசூதனா! தாங்கள் கிருபை புரிந்து, பால்குண மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிக்கும் விதி, இவற்றைப்பற்றி விஸ்தாரமாக கூற வேண்டுகிறேன்." என்றான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "ஹே பார்த்தா! மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி, விஜய ஏகாதசி என்னும் பெயரால்அழைக்கப்படுகிறது. இவ் விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பிரபாவத்தால் அனைத்திலும் வெற்றி கிட்டுகிறது. மிகவும் மேன்மை வாய்ந்த இவ்விரத மஹாத்மியகதையைக் கேட்பதாலும், படிப்பதாலும் அனைத்து பாபங்களும் அழியப் பெறுகின்றன....
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.