Friday, September 20

இவுலகத்தின் துல்லியமும், நேர்த்தியும் யார் தந்தது?

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

`

இதில் குறிப்பாக அமெரிக்காவின் லீஹை யுனிவர்சிட்டியின் பேராசிரியர் ‘மைக்கேல் பெஹே’ எனும் விஞ்ஞானி தனது உலகப்புகழ்பெற்ற “டார்வின்ஸ் பிளாக்பாக்ஸ்” எனும் புத்தகத்தில் இவ்வுலகம் தானாகத் தோன்றியது என்று கூறுவதை கடுமையாக கண்டித்துள்ளார்.

இதில் அவர் பல நடைமுறை உதாரணங்களை மேற்கோள் காட்டுகிறார்.

அதாவது, நாம் ஒரு புல்லை செதுக்கும் இயந்திரத்தை (Lawn Mower) எடுத்துக் கொள்வோம். அந்த இயந்திரம் இயங்குவதற்கு பெட்ரோல் மற்றும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. பெட்ரோல் மற்றும் ஆக்ஸிஜன் இரண்டும் சேர்ந்து எரிந்து அந்த இயந்திரத்தை இயக்க வைக்கிறது.

இப்போது ஒருவர் கூறலாம், “இந்த இயந்திரம் இயங்க வேண்டுமானால் எலக்ட்ரான் சார்ஜ் (electron charge) வேறுபடாமல் இருக்க வேண்டும். எரிபொருள் மற்றும் ஆக்ஸிஜனின் கெமிகல் ரியாக்டிவிட்டி சரியாக இருக்க வேண்டும். இவையெல்லாம் சரியாக இல்லையென்றால் வேலை செய்யாது’ என்று.

இதற்கு மைக்கேல் பெஹே பதிலளிக்கையில், “நீங்கள் சொல்வதெல்லாம் சரி. இந்த இயந்திரம் வேலை செய்வதற்கு இதெல்லாம் சரியாக இருக்க வேண்டும். ஆனால் இதைவிட முக்கியமானது என்னவென்றால் எப்படி இந்த இயந்திரம் இப்படி அமைக்கப்பட்டது அல்லது உருவாக்கப்பட்டது. அது மற்ற விஷயங்களை விட முக்கியமானது. நீங்கள் சொல்லும் பிரபஞ்ச சட்ட திட்டங்கள் (Univer- sal laws & constants) எல்லாம் அது இயங்குவதற்கு தேவைப்படுகிறதே தவிர நாம் எப்படி இது உருவாக்கப்பட்டது என்பதற்கு நம்மிடம் ஒன்றும் இல்லை” என்கிறார்.

மேலும் இதனை தெளிவாக புரிந்து கொள்ளும் வண்ணம் மற்றொரு உதாரணத்தையும் குறிப்பிடுகிறார்.

mount rushmore

அமெரிக்காவின் சௌத் டாகோடாவில் மவுண்ட் ரஷ்மோர் (Mount Rushmore) இருக்கிறது. மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மலையின் மேல் பகுதியில் நான்கு முன்னாள் அமெரிக்க அதிபர் களின் முகங்கள் பிரம்மாண்டமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. பார்ப்பவர் யாராயினும் ஆச்சர்யப் படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் வடிவமைப்பை காண்பித்து, சிந்திக்கத் தகுந்த சில வினாக்களை நம்மிடம் எழுப்புகிறார்.

எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆனாலும் இந்த உள்ள மலையில் உள்ள முகங்கள் தானாகத் தோன்றுவதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்ன?

விஞ்ஞான ரீதியின் படி சிலர் கூறலாம். இயற்கையில் மலைகள் தோன்றி நிற்பதற்கு பிரபஞ்சத்தின் சக்திகள் (strong and weak forces of universe) மற்றும் மின் காந்த சக்திகள் (electromagnetic forces) ஒரு குறிப்பிட்ட அமைப்பில் இருப்பதால் தான்” என்று.

ஆனால் அவர் கேட்பது என்னவென்றால் அதில் உள்ள முகங்கள் எப்படி தோன்றியது?என்பது தான்.

 வெறும் மின்காந்த சக்திகள் மூலம் இதனை விளக்க முடியாது. இதை விளக்க வேண்டும் என்றால், ‘குறிப்பிட்ட சிலர் திட்டமிட்டு பல சாதனங்கள் உதவியுடன் வடிவமைத்து உள்ளனர்” என்று கூறுவது தான் சரி.

ஆக, இதே போன்று இப்பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா விஷயங்கள், புத்தசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது (Intelligent Design).

உதாரணமாக நமது கண்களின் அமைப்பு, கண்களுக்கும் மூளைக்கும் நடக்கும் தகவல் பரிமாற்றம், நம் உடலில் இருக்கும் 75 ட்ரில்லியன் செல்களின் செயல்பாடு, புரோட்டின் உற்பத்தி இவையெல்லாம் எப்படி இது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நம்மால் கூற முடிவதில்லை. இது தான் இண்டலிஜென்ட் டிசைன் என்று அழைக்கப்படுகிறது என்றுகூறுகிறார்.

இப்படி பேராசிரியர் மைக்கேல் பெஹே கூறுவது போல, மற்றும் பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரபஞ்சத்தில் நடக்கும் பல புகழத் தக்க, அதிசயிக்கத் தக்க விஷயங்கள் எல்லாம் தானாக உருவானது அல்ல என்றும், அதற்கான சரியான விளக்கங்கள் நவீன விஞ்ஞானத்தில் இல்லை என்றும் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆனால் வேதசாஸ்திரங்களில் இதற்கான தெளிவான விடை உள்ளது. அதன்படி, முதல் அறிவுரையே எல்லாவற்றையும் படைத்தது, பகவான் தான் என்பது தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

இதனை வலியுறுத்தும் வண்ணம் விஞ்ஞானி நியூட்டன் அவர்களும், “சூரியன், கிரகங்கள் மற்றும் நட்சத்திங்கள் கொண்ட இந்த பிரபஞ்சம் அறிவிற்சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த கடவுளால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமல்லாது கடவுளின் நிர்வாகத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், ஜெர்மானிய விஞ்ஞானியும் நியூட்டனின் நண்பருமான லீப்னிட்ஸ் (Leibnitz) கூறுகையில், “கடவுள் இந்த பிரபஞ்சத்தை படைத்தது மட்டுமல்ல. அவர் தலையீடு இல்லாமல் தனது சக்திகள் மூலம் தொடர்ந்து நிர்வகிக்கவும் செய்கிறார்” என்று விளக்குகிறார்.

எனவே தான் பகவத் கீதை 10.41ல், “அழகான, புகழத்தக்க வைபங்கள் அனைத்தும், என்னுடைய சக்தியின் சிறு பொறியிலிருந்து தோன்றுபவையே என்பதை அறிவாயாக” என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

இது தொடர்பாக ஸ்ரீலபிரபுபாதா 1975ல் அமெரிக்காவின் அட்லாண்டாவில் பேசும் போது கூறுகிறார்.

“பகவத்கீதையின் படி எல்லாவற்றையும் தோற்றுவித்தவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரே ஆவார். அதைப் புரிந்து கொண்டால் நமது ஞானம், பூரண ஞானமாகும். இது தான் வாஸுதேவ ஸர்வம் இதி. நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ அதற்கு மூலம் வாசுதேவனே ஆவார். இந்த அருமையான மலர், ஒரு நல்ல மூளை இல்லாமல் வந்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா என்ன? சில விஞ்ஞானிகள் இதற்கு பெரிய பெரிய வார்த்தைகளை கொடுத்து, விளக்கம் கூறுகின்றனர். ஆனால் அது யாருக்கும் புரிவதில்லை. அவர்களுக்கு மட்டுமே அது புரியும். அவர்கள் விளக்காமல் அது யாருக்கும் புரியாது. அவர்கள் கூறுவது என்னவென்றால், எல்லாமே இயற்கையில் தானாக நடக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை கிடையாது.

இயற்கை என்பது ஒரு கருவி மட்டுமே. இப்போது இந்த கம்ப்யூட்டரை எடுத்துக் கொள்ளுங்கள். இது அருமையான எந்திரம். ஆனால் இதற்கு ஆப்ரேட்டர் தேவைப்படுகிறார். ஏதாவது ஒரு இயந்திரம், ஆப்ரேட்டர் இல்லாமல் செயல்படுகிறதா என்ன? தங்கள் அனுபவத்தில் அப்படி எந்த இயந்திரம் இருக்கிறது ? பிறகு எப்படி இயற்கை தானாக செயல்படுகிறது என்று கூறமுடியும். இயற்கை என்பது ஒரு அருமையான இயந்திரம். ஆனால் அதை இயக்குபவர், பகவான் ஸ்ரீகிருஷ்ணர். இது தான் உண்மையான அறிவு.


இக்கட்டுரை ஸ்ரீல பிரபுபாதாவின் சீடரான தவத்திரு.பக்தி ஸ்வரூப தாமோதர ஸ்வாமி (Dr.T.D.Singh)அவர்களுக்கும், விஞ்ஞானி மைக்கேல் பெஹேவிற்கும் இடையே நடந்த உரையாடலில் இருந்து தொகுக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question