நீங்கள் கடவுளா?
கடவுளுக்கும் கடவுளின் சக்திக்கும் இடையிலான வேற்றுமையை உணராமல், அனைவரும் கடவுள் என்று வாதிட்ட சில விருந்தினர்களுடன் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், அமெரிக்காவின் போஸ்டன் நகரில் டிசம்பர் 23, 1969இல் நடத்திய உரையாடல்.ஸ்ரீல பிரபுபாதர்: ஒருவர் எந்த வழிமுறையைப் பின்பற்றினாலும், கடவுளின் மீதான அன்பை வளர்த்துக் கொண்டால் அது நல்லது. இல்லையெனில் அது தேவையற்ற கால விரயமே. ஒரு குருவினை அல்லது கொள்கையினை சோதனை செய்வதற்கு இதுவே வழியாகும். எனக்குத் தெரிந்த வரையில், யோகிகள் தம்மைத் தாமே கடவுள் என்று கூறுவர். மேலும், "எல்லோரும் கடவுள்' என்று கூறுவர். அப்படியெனில், இந்த நாய் யார்? கடவுளா? இவர்களது கருத்து உகந்ததல்ல. எல்லோரும் எவ்வாறு கடவுளாக முடியும்? எல்லோரும் கடவுள் என்றால், கடவுள் என்பதன் பொருள் என்ன?கடவுள் என்றால் என்ன என்பதற்கு நீங்கள் விளக்கமளிக்க வேண்டும். உங்களால் வி...