Friday, July 26

நீங்கள் கடவுளா?

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கடவுளுக்கும் கடவுளின் சக்திக்கும் இடையிலான வேற்றுமையை உணராமல், அனைவரும் கடவுள் என்று வாதிட்ட சில விருந்தினர்களுடன் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், அமெரிக்காவின் போஸ்டன் நகரில் டிசம்பர் 23, 1969இல் நடத்திய உரையாடல்.


ஸ்ரீல பிரபுபாதர்: ஒருவர் எந்த வழிமுறையைப் பின்பற்றினாலும், கடவுளின் மீதான அன்பை வளர்த்துக் கொண்டால் அது நல்லது. இல்லையெனில் அது தேவையற்ற கால விரயமே. ஒரு குருவினை அல்லது கொள்கையினை சோதனை செய்வதற்கு இதுவே வழியாகும். எனக்குத் தெரிந்த வரையில், யோகிகள் தம்மைத் தாமே கடவுள் என்று கூறுவர். மேலும், “எல்லோரும் கடவுள்’ என்று கூறுவர். அப்படியெனில், இந்த நாய் யார்? கடவுளா? இவர்களது கருத்து உகந்ததல்ல. எல்லோரும் எவ்வாறு கடவுளாக முடியும்? எல்லோரும் கடவுள் என்றால், கடவுள் என்பதன் பொருள் என்ன?

கடவுள் என்றால் என்ன என்பதற்கு நீங்கள் விளக்கமளிக்க வேண்டும். உங்களால் விளக்கமளிக்க முடியாவிடில், கடவுள் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியவில்லை என்று பொருள். இஃது ஒரு பெரிய விஞ்ஞானம். பகவத் கீதையையும் வேத சாஸ்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட இந்த விஞ்ஞானம் கற்பனையல்ல. இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விருந்தினர் 1: நான் எல்லோரையும் நேசிக்க விரும்புகிறேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: அது போலித்தனமான ஒன்று. எல்லோரையும் உங்களால் நேசிக்க முடியாது. மாறாக, கடவுளை நேசிக்க உங்களால் முடிந்தால். பின்னர் எல்லோரையும் நேசிக்க முடியும். ஏனெனில், கடவுள் அனைத்துமாக உள்ளார்.

விருந்தினர் 1: கடவுள் அனைத்துமானவர் என்றால், நீங்கள் ஏன் ஒவ்வொருவரையும் நேசிக்கக் கூடாது?

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் ஒரு மரத்தை நேசித்தால், அதன் வேருக்கு நீர் ஊற்ற வேண்டும், இலைகளுக்கு அல்ல. நீங்கள் உடலைப் பராமரிக்க வேண்டுமெனில் வயிற்றிற்கு உணவளிக்க வேண்டும். கண்களுக்கோ செவிகளுக்கோ அல்ல. உங்களுக்கு ஒரு சுவையான பண்டம் கிடைத்தால். அதனை நீங்கள் செவிக்கு அளிக்கமாட்டீர்கள். எங்கு அளிப்பீர்கள்? நிச்சயம் வாய்க்கு அளிப்பீர்கள். அதுவே முறை. உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன. இருப்பினும், வாய்

என்னும் துவாரத்தில் மட்டும் உணவை வழங்குவது ஏன்?

விருந்தினர் 1: ஆனால்…

ஸ்ரீல பிரபுபாதர்: முதலில் இதற்கு பதில் அளியுங்கள்.

விருந்தினர் 1: நல்லது, நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால்…

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் சரியான வழிமுறையைப் பின்பற்ற வேண்டும், அப்போது உண்மையான அன்பை அடைவீர்கள்,

விருந்தினர் 1: வேரை அணுக வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே சமயத்தில் இதர பகுதிகளை ஒதுக்கி விடக்கூடாது. நான் கூறுவது…

ஸ்ரீல பிரபுபாதர்: வேரை ஒதுக்கிவிட்டு இலையை எடுத்துக்கொண்டால், நீங்கள் வெறுமனே நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று பொருள்.

விருந்தினர் 1: இல்லை. நான் கூறவருவது என்னவெனில், கடவுளின் மீதான அன்பு ஏன் ஜடத்தின் மீதும் வெளிப்படக் கூடாது?

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் கடவுளை நேசித்தால், ஜடத்தை நேசிப்பதும் அதில் அடங்கும். ஏனெனில், ஜடப்பொருள் கடவுளின் சக்தியே.

விருந்தினர் 1: ஆனால், கடவுளின் மீதான அன்பு அதிகரித்து, ஜடவுலகின் மீதான மோகம் குறையும்போது அதுவே முன்னேற்றத்தின் அறிகுறி என்று நீங்கள் கூறினீர்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: அனைத்தையும் நாம் கடவுளுடனான

சூரியனும் சூரிய ஒளியும் ஒன்றே, அதே சமயத்தில் அவை வேறுபட்டுள்ளன. சூரிய ஒளியை நீங்கள் சூரியனாக ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் சூரிய ஒளியில் நிற்கும்போது, சூரிய கிரகத்தில் நிற்பதாகக் கூற இயலாது. அதுபோல, அனைத்தும் கடவுளின் சக்தியே, ஆனால் அனைத்தும் கடவுள் அல்ல.

உறவில் காண வேண்டும். ஜடம் என்றால் என்ன? ஜடப்பொருள் என்பது கடவுளின் மற்றொரு சக்தி. நீங்கள் உங்களது உடலை நேசித்தால். இயற்கையாகவே உடலின் அங்கமாகிய விரலையும் நேசிப்பீர்கள். கடவுள் பூரணமானவர். நீங்கள் கடவுளை நேசித்தால். எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதையும் புரிந்துகொள்வீர்கள்.

விருந்தினர் 2: கடவுள் என்றால் என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களால் விளக்க முடியுமா?

விருந்தினர் 2: இல்லை. கடவுள் என்பது ஒரு சக்தியா அல்லது நபரா?

ஸ்ரீல பிரபுபாதர்: சக்தி கடவுளல்ல. சக்தி கடவுளுக்குச் சொந்தமானது. சூரியனையும் சூரிய ஒளியையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். சக்தியான சூரிய ஒளியும், சூரியனும் ஒன்றல்ல; அதே சமயத்தில் அவை முற்றிலும் வேறுபட்டவையும் அல்ல. சக்தியான சூரிய ஒளியில் நீங்கள் திருப்தியடையலாம். ஆனால் அது சூரியனாகாது. இதனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

விருந்தினர் 2: சக்தியே கடவுள் என்று கூறுகிறார்களா. அல்லது கடவுள் என்பது…

ஸ்ரீல பிரபுபாதர்: சக்தி என்பது கடவுளிடமிருந்து வேறுபடாததால். ஒரு விதத்தில் பார்த்தால், சக்தியும் கடவுளே. அதே சமயத்தில் சக்தி கடவுளல்ல. சூரிய ஒளியானது சூரியனின் சக்தி. ஆனால் சூரிய ஒளி உங்களின் அறைக்குள் புகுந்தால். சூரியனே அறைக்குள் புகுந்துவிட்டதாக நீங்கள் நினைப்பீர்களா? இல்லை. ஏனெனில், சூரிய ஒளி சூரியனிடமிருந்து ஒரே சமயத்தில் வேறுபட்டும் ஒன்றுபட்டும் உள்ளது.

விருந்தினர் 2: வெறுமனே ஜபம் செய்வதால், நிரந்தர ஆனந்தத்தை அடையலாம் என்று நீங்கள் கூறுவது மிகவும் எளிமையாக தோன்றுகிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: தன்னுணர்விற்கான வழிகளில் இதுவும் ஒன்றாகும். தன்னுணர்விற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இருப்பினும், கலி யுகத்திலுள்ள மக்களின் அறிவுத்

திறன் குறைவாக இருப்பதால், இந்த வழிமுறையே (பகவானின்

திருநாமத்தை உச்சரிக்கும் வழிமுறையே) சரியானதாகும்.

விருந்தினர் 1: ஜபத்தின் மூலம் நீங்கள் அடைவது, ஒரு

விதமான…

ஸ்ரீல பிரபுபாதர்: ஜபம் செய்யுங்கள், புரிந்துகொள்வீர்கள்.

குழந்தை பெற்றுக் கொள்ளாதவர்கள் பிரசவ வலியை எவ்வாறுபுரிந்துகொள்ள முடியும்?

விருந்தினர் 2: இதுவரை கிணற்றில் குதிக்காதவனுக்கு குதித்தால் என்னவாகும் என்பது தெரியாது என்றும் கூறலாம்.

ஸ்ரீல பிரபுபாதர்: முதலில் உங்களுக்கு உங்களைப் பற்றியே தெரியாது. அறியாமையின் முதல் அறிகுறி நீங்கள் உங்களை உடலுடன் அடையாளம் கண்டுகொள்வதே. நீங்கள் இந்த உடலல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பின்னர் கடவுளைப் புரிந்துகொள்வீர்கள்.

விருந்தினர் 2: ஆனால் நான் ஒரு கடவுள், சரிதானே? நான் கடவுள் (God). நீங்களும் கடவுளே.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, நீங்கள் ஒரு நாய் (Dog).

விருந்தினர் 2: ஆனால் நீங்களே நான். நானே நீங்கள். நாம் இருவரும் கடவுள். சரிதானே?

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. இல்லை.

விருந்தினர் 2: ஏன்?

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுக்கு கடவுள் என்றால் என்னவென்று அர்த்தம் தெரியவில்லை. கடவுள் என்றால் என்ன என்று கூறுங்கள் பார்க்கலாம்.

விருந்தினர் 2: எல்லாமே கடவுள்.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. இது சரியான விளக்கம் அல்ல. எல்லாம் கடவுள் அல்ல.

விருந்தினர் 2: கடவுளே எல்லாம். இது சரிதானே?

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. எல்லாம் கடவுளின் சக்தி. ஆனால் எல்லாம் கடவுள் அல்ல.

விருந்தினர் 2: அஃது எப்படி?

ஸ்ரீல பிரபுபாதர்: முன்னரே சூரிய ஒளியையும் சூரியனையும் உதாரணமாகக் கொடுத்தேன். சூரியனும் சூரிய ஒளியும் ஒன்றே. அதே சமயத்தில் அவை வேறுபட்டுள்ளன. சூரிய ஒளியை நீங்கள் சூரியனாக ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் சூரிய ஒளியில் நிற்கும்போது. சூரிய கிரகத்தில் நிற்பதாகக் கூற இயலாது. அதுபோல, அனைத்தும் கடவுளின் சக்தியே. ஆனால் அனைத்தும் கடவுள் அல்ல. நாம் அனைவரும் கடவுளின் சக்தியே, ஆனால் நாம் கடவுள் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question