
Srila Vyasadev (Tamil) / பாதராயணர் (வியாசதேவர்)
அவர் கிருஷ்ண, கிருஷ்ண-துவைபாயனர், துவைபாயனர்,சத்தியவதி-ஸூதர், பாராசர்யர், பராசராத்மஜர், பாதராயணர், வேதவியாசர் போன்றபெயர்களால் அறியப்படுகிறார். இவர், சந்தனு சத்தியவதிக்கு நிச்சயதார்த்தம் நடப்பதற்குமுன்பே, அவளுக்கும் பராசர மகாமுனிவருக்கும் பிறந்தவராவர். சந்தனு மகாராஜன்மிகச்சிறந்த தளபதியும், பாட்டானாருமான பீஷ்மதேவரின் தந்தையாவார். வியாசதேவர்நாராயணனின் சக்தி வாய்ந்த அவதாரமாவார். அவர் வேத ஞானத்தை உலகில் பரப்புகிறார்.இதனால் வேத நூல்களைப் படிக்கும் முன்பாக, முக்கியமாக புராணங்களைப் படிக்கும்முன்பாக முதலில் வியாசதேவர் வணங்கப்படுகிறார். சுகதேவ கோஸ்வாமி அவரது மகனாவார்.மேலும் வைசம்பாயனரைப் போன்ற ரிஷிகள், வேதங்களின் வெவ்வேறுபிரிவுகளுக்குரிய அவரது சீடர்களாவர். மிகச்சிறந்த இதிகாசமாகிய மகாபாரதத்திற்கும்,மிகச்சிறந்த தெய்வீக இலக்கியமாகிய பாகவதத்திற்கும் அவரே ஆசிரியராவார். பிரம்மசூத்திரங்கள் (வேதாந்த சூ...








