Tuesday, November 3

Author: பக்தி யோகம் குழு

Lord Vamanadeva (Tamil) / ஸ்ரீ வாமனதேவர்

Lord Vamanadeva (Tamil) / ஸ்ரீ வாமனதேவர்

ஸ்ரீ வாமன தேவ்
குள்ள - அவதாரமான பகவான் வாமனதேவர்பகவான் வாமனதேவர் இவ்வுலகில், சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றுடன் அதிதியின் கருவிலிருந்து தோன்றினார். அவரது தேகம் கருமை நிறம் கொண்டதாக இருந்தது. அவர் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருந்தார். அபிஜித் நட்சத்திரம் உதயமாகியிருந்த சமயத்தில், ஸ்ரவண - துவாதசி எனும் மங்களகரமான வேளையில் பகவான் விஷ்ணு தோன்றினார். அப்போது ( உயர் கிரக அமைப்பு, பரவெளி மற்றும் இந்த பூமி ஆகியவை உட்பட) மூவுலகங்களிலும், தேவர்கள், பசுக்கள், பிராமணர்கள் மற்றும் பருவ காலங்களும் கூட பகவானின் தோற்றத்தால் மகிழ்ச்சியடைந்தனர். எனவே மங்களகரமான இந்நாள் “விஜயா” என்று அழைக்கப்படுகிறது. சத்-சித்-ஆனந்த உடலைக் கொண்டவரான முழுமுதற் கடவுள் கஸ்யபருக்கும், அதிதிக்கும் புதல்வராகத் தோன்றியபோது, அவரது பெற்றோர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். அவரது தோற்றத்திற்குப்பிறகு. பகவான் குள்ளமான (வாமன) ரூபத்தை மேற்க்கொ...
Srila Prabhupada (Tamil) / ஸ்ரீல பிரபுபாதர்

Srila Prabhupada (Tamil) / ஸ்ரீல பிரபுபாதர்

ஸ்ரீல பிரபுபாதர்
தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 1896ம் வருடம் கொல்கத்தாவில் முரையான வைஷ்ணவ குடும்பத்தில் தோன்றினார். பக்தித் தொண்டின் நெறிகளை சிறு வயதிலிருந்தே கற்று வந்த அவர்,தனது ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கேஸ்வாமியை 1922ம் வருடம் கொல்கத்தாவில் முதன்முறையாக சந்தித்தார். அறுபத்து நாங்கு கெளடீய மடங்களை நிறுவியிருந்தவரும் புகழ்பெற்ற ஆச்சாரியருமான ஸ்ரீல பக்திசித்தாந்தருக்கு இந்த படித்த இளைஞனை மிகவும் பிடித்திருந்தது, வேதஞானத்தை பிரச்சாரம் செய்யும் பணிக்கு, அதிலும் குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்வதற்கு, வாழ்வை அர்ப்பணிக்கும்படி அந்த இளைஞனைக் கேட்டுக் கொண்டார், பின்னர், 1933இல் ஸ்ரீல பிரபுபாதர் முறையாக அவரிடம் தீட்சை பெற்று சீடரானார்.        ஸ்ரீல பிரபு...
Krishna & Balarama went to Vrindavan (Tamil) / கிருஷ்ண, பலராமரின் பிருந்தாவன விஜயம்

Krishna & Balarama went to Vrindavan (Tamil) / கிருஷ்ண, பலராமரின் பிருந்தாவன விஜயம்

பகவான் பலராமர்
 யாதவர்களும், வேறு பல அரசர்களும் ஒரு சூரிய கிரகணத்தின் போது குருட்சேத்திரத்தில் சந்தித்ததையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களை விவாதித்ததையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. கிருஷ்ணர் தந்த மகாராஜனையும், மற்ற பிருந்தாவன வாசிகளையும் குருட்சேத்திரத்தில் சந்தித்து அவர்களை மகிழ்வித்ததையும் இது விவரிக்கிறது. முழு சூரிய கிரகணம் நிகழப்போவதை அறிந்து யாதவர்கள் உட்பட்ட பாரத-வர்ஷ மக்கள், விசேஷ புண்ணிய பலன்களைப் பெற குருட்சேத்திரத்தில் திரண்டனர். யாதவர்கள் நீராடி மற்ற கிரியைகளையும் நிறைவேற்றியபின், மத்ஸ்யம், உசீனரம் முதலான தேசத்தரசர்களும் அங்கு வந்திருப்பதைக் கண்டனர். மேலும், எப்பொழுதும் கிருஷ்ணரின் ஆழ்ந்த பிரிவுத் துயரை அனுபவித்துக் கொண்டிருக்கும் நந்த மகாராஜனும், மற்ற விரஜ வாசிகளும்கூட வந்திருப்பதைக் கண்டனர். இப்பழைய நண்பர்களையெல்லாம் கண்டு பெருமகிழ்ச்சியடைந்த யாதவர்கள், அவர்கள...
Lord Balaram’s yatra (Tamil) /பகவான் பலராமரின் தீர்த்த யாத்திரை

Lord Balaram’s yatra (Tamil) /பகவான் பலராமரின் தீர்த்த யாத்திரை

பகவான் பலராமர்
 பகவான் பலராமர் பல்வலனைக் கொன்று பிராமணர்களை மகிழ்வித்ததையும், பல்வேறு யாத்திரை ஸ்தலங்களில் அவர் நீராடியதையும், பீமசேனருக்கும், துரியோதனனுக்கும் யுத்தத்தைக் கைவிடும் படி அவர் புத்தி கூறியதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. நைமிஷாரண்ய வனத்திலுள்ள முனிவர்களின் யாக அரங்கத்தில், வளர்பிறையன்று கடுமையான காற்று வீசத் துவங்கியது. அருவருப் பான சீழ்நாற்றத்தைப் பரவச்செய்த அக்காற்று, அனைத்தையும் புழுதி யால் மறைத்தது. பிறகு அசுரனான பல்வலன் தன் கையில் ஒரு சூலத்துடன் அங்கு தோன்றினான். அவனது பூதாகாரமான உடல் மையிருட்டாகவும், அவனது முகம் மிகவும் பயங்கரமாகவும் இருந்தன. அந்த அசுரனைத் தமது கலப்பையால் பற்றியிழுத்த பகவான் பலராமர், தமது கதையால் அவனது தலையில் கொடூரமாக அடித்து அவனைக் கொன்றார். முனிவர்கள் பகவான் பலராமரின் பெருமைகளைப் பாடி, அவ ருக்கு ஏராளமான சன்மானங்களை அளித்தனர். பகவான் பலராம...

Glories of Guru (Tamil) / குருவின் மகிமை

பக்த விஜயம்
துக்காராம் மகராஜ் ஒருமுறை புண்ய ஸ்தல யாத்ரை சென்றார் பக்தர்களுடன் . வழியெல்லாம் ஊர் ஊராக நடந்து சென்றார்கள். வழியெங்கும் அநேகர் அவரது விட்டல நாம சங்கீர்த்தன மழையில் நனைந்தனர்.பஜனை பிரவாஹமாக அவர்கள் சென்ற தெருவெல்லாம் ஓடி வழிந்து குளிர்வித்தது.ரஞ்சனா என்று சிறிய அழகிய கிராமத்தை அடைந்தார்கள். அங்கு மூலா என்ற நதியும் பிருவா என்ற நதியும் இணைந்து சங்கமமாகிறது. அந்த புண்ய நதியில் ஸ்நானம் செய்து விட்டு அவர்கள் அன்றைக்கு பிக்ஷைக்கு உஞ்சவ்ரித்தி எடுத்தார்கள்.துக்காராம் மறுநாளைக்கு என்று மட்டுமல்ல மறு வேளைக்குக்கூட எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாதவர் அல்லவா?. எனவே அன்றாட பிக்ஷை உஞ்சவ்ரித்தி மூலம் தான். அவர்கள் விட்டல சங்கீர்த்தனம் பண்ணிக்கொண்டு அந்த கிராமத்தின் ஒரு பிரதான வீதியில் வந்து கொண்டிருந்தார்கள்.அங்கங்கு நின்று பிக்ஷாவந்தனம் பெற்றுக்கொள்வார்கள். குறிப்பிட்ட இடத்திற்குப் பிற...
What is Dharma? (Tamil) I எது தர்மம்?

What is Dharma? (Tamil) I எது தர்மம்?

மஹாபாரதம்
எது தர்மம்?ஆதாரம்: மஹாபாரதம் (சபா பர்வம்)யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்திய பின், அதன் வளமையும், செழுமையும் கண்டு, மனம் பொறாமையுற்ற துரியோதனன், பாண்டவர்களின் வளம் அனைத்தையும், குறுக்கு வழியில் பெற சகுனி மற்றும் கர்ணனுடன் கூடிதிட்டம் தீட்டி, சூதில் வல்ல சகுனி உதவியுடன், பாண்டவர்களுடன் பகடை ஆடி , அவர்கள் சொத்தை அபகரிக்க எண்ணினான். அதற்கு அவனுடைய தந்தையான திருதராஷ்டிரையும் இறுதியில் சம்மதிக்க வைத்தான்.எவ்வாறோ அரை குறை மனதுடன் சூதுக்கு ஒத்துக் கொண்ட திருதராஷ்டிரர், இந்ரப் பிரஸ்தம் சென்று, யுதிஷ்டிரமகாராஜாவை பகடை விளையாட்டிற்கு வர அழைப்பு விடுக்குமாறு விதுரரிடம் கூறினான்.யுதிஷ்டிரரிடம் அவ்வாறே அழைப்பு விடுத்த விதுரரிடம் யுதிஷ்டிரர், " திருதராஷ்டிரரிடமிருந்து இவ்வித அழைப்பு வந்ததற்கு நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். ஏனெனில், இவ்விளையாட்டு எங்களுக்கும், அவர்கள் பிள்ளைகளுக்கும் இடையே பிர...
Hera Panchami (Tamil) / ஹேரா-பஞ்சமி

Hera Panchami (Tamil) / ஹேரா-பஞ்சமி

ஸ்ரீ ஜெகந்நாத், ஆன்மீகப் பதிவு
"ஜகந்நாதர் கோயிலிலிருந்து குண்டிசாவிற்குச் செல்லும் வீதியை ஒட்டியுள்ள தோட்டத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பல்வேறு லீலைகளை நிகழ்த்தினார். கிருஷ்ணதாஸர் எனும் பிராமணர் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரவிற்கு அபிஷேக நிகழ்ச்சியினை நடத்தினார்.""குண்டிசா கோயிலில் நடனமாடிய பின்னர், மஹாபிரபு தமது பக்தர்களுடன் நீரில் விளையாடினார், ஹேரா-பஞ்சமி தினத்தன்று அவர்கள் அனைவரும் செல்வத் திருமகளான லக்ஷ்மி தேவியின் செயல்களைக் கண்டனர்."- ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் 1.144-145ஹேரா - பஞ்சமி உற்சவம் என்பது ரத யாத்திரைக்கு ஐந்து நாள்களுக்குப் பின்னர் வருகிறது. பகவான் ஜகந்நாதர் தமது மனைவி லக்ஷ்மியினைக் கைவிட்டு குண்டிசா கோயிலான விருந்தாவனத்திற்குச் சென்று விட்டார். பகவானின் பிரிவினால், லக்ஷ்மி தேவி அவரைக் காண்பதற்காக குண்டிசாவிற்கு வர முடிவு செய்கிறாள். லக்ஷ்மி தேவி குண்டிசாவிற்கு வருவது ஹேரா - பஞ்சமி என்று கொண...
Spiritual eyes (Tamil) I தெய்வீகக் கண்கள்!

Spiritual eyes (Tamil) I தெய்வீகக் கண்கள்!

கதைகள், மஹாபாரதம்
ஆதாரம்: மஹாபாரதம்குருக்ஷேத்திர போர்க்களத்தில் ஒருபக்கம் பாண்டவ படைகளும், கெளரவ படைகளும் போருக்குத் தயாராக அணிவகுத்து நின்றனர். பீஷ்மர், கெளரவர் பக்கம் தலைமை தாங்க, திருஷ்டத்யும்னன் பாண்டவ படைக்கு தலைமை தாங்க, போர் ஆரம்பிக்க இருந்த நேரம்.                போரின் மறுபக்கமோ , திருதராஷ்டிரர் அரண்மனையில் கவலைதோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார் . அவரால் செய்யப்பட ஒன்றும் இல்லை. அவருடைய கவலையை பொதுவாக விதுரருடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால் விதுரரும் அங்கிருந்து நீங்கி விட்டதால் , திருதராஷ்டிரர் சஞ்ஜயனை அழைத்தார். சஞ்ஜயனிடம், ஓ சஞ்ஜயா! , என்ன நடக்கிறது என்று எனக்கு கூறு. இரு படைகளும் குருசேத்திரத்தை அடைந்து விட்டனவா ? விதியின் சக்தி, இந்த வயதானவனின் முயற்சிகளை விட சக்தி வாய்ந்தது. என்னுடைய மகனை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும், நான் தோல்வி அடைந்தேன். ஏன் இந்த நிலை? துரியோதனனின் தவறுகளைத...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.