Friday, March 29

Srila Vyasadev (Tamil) / பாதராயணர் (வியாசதேவர்)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

அவர் கிருஷ்ண, கிருஷ்ண-துவைபாயனர், துவைபாயனர்,
சத்தியவதி-ஸூதர், பாராசர்யர், பராசராத்மஜர், பாதராயணர், வேதவியாசர் போன்ற
பெயர்களால் அறியப்படுகிறார். இவர், சந்தனு சத்தியவதிக்கு நிச்சயதார்த்தம் நடப்பதற்கு
முன்பே, அவளுக்கும் பராசர மகாமுனிவருக்கும் பிறந்தவராவர். சந்தனு மகாராஜன்
மிகச்சிறந்த தளபதியும், பாட்டானாருமான பீஷ்மதேவரின் தந்தையாவார். வியாசதேவர்
நாராயணனின் சக்தி வாய்ந்த அவதாரமாவார். அவர் வேத ஞானத்தை உலகில் பரப்புகிறார்.
இதனால் வேத நூல்களைப் படிக்கும் முன்பாக, முக்கியமாக புராணங்களைப் படிக்கும்
முன்பாக முதலில் வியாசதேவர் வணங்கப்படுகிறார். சுகதேவ கோஸ்வாமி அவரது மகனாவார்.

மேலும் வைசம்பாயனரைப் போன்ற ரிஷிகள், வேதங்களின் வெவ்வேறு
பிரிவுகளுக்குரிய அவரது சீடர்களாவர். மிகச்சிறந்த இதிகாசமாகிய மகாபாரதத்திற்கும்,
மிகச்சிறந்த தெய்வீக இலக்கியமாகிய பாகவதத்திற்கும் அவரே ஆசிரியராவார். பிரம்ம
சூத்திரங்கள் (வேதாந்த சூத்திரங்கள், அல்லது பாதராயண சூத்திரங்கள்) அவரால்
தொகுக்கப்பட்டவையே ஆகும். அவரது கடுந்தவத்தின் வலிமையினால், அவர்
முனிவர்களிலேயே மிகவும் மரியாதைக்குரிய ஆசிரியராக மதிக்கப்படுகிறார். கலி யுக
மக்களின் நன்மைக்காக மிகச்சிறந்த இதிகாசமாகிய மகாபாரதத்தை அவர் பதிவு செய்ய
விரும்பினார். அப்பொழுது அவர் சொல்வதை எழுதுவதற்குச் சக்தி வாய்ந்த எழுத்தாளர்
ஒருவர் தேவைப்படுவதை அவர் உணர்ந்தார். பிரம்மதேவரின் உத்தரவுப்படி ஸ்ரீ கணேசர்
அப்பணியைச் செய்யும் பொறுப்பை ஏற்றார். ஆனால் சொல்வதை வியாசதேவர் ஒரு
வினாடி நேரமும் நிறுத்தக்கூடாது என்பது நிபந்தனையாகும். இவ்வாறாக வியாசர் மற்றும்
கணேசரின் இணைந்த முயற்சியினால் மகாபாரதம் தொகுக்கப்பட்டது.
அவரது தாயான சத்தியவதி பிறகு சந்தனு மகாராஜனை திருமணம் செய்து கொண்டாள்.
சத்தியவதியின் கணவரான சந்தனு மகாராஜனின் முதல் மனைவி கங்கையாவாள்.

அவளது மூத்த மகன் பீஷ்மதேவராவார். இவ்வாறாக அவரது தாயான சத்தியவதியின்
கட்டளைப்படியும், பீஷ்மதேவரின் வேண்டுகோளின்படியும், அவர் திருதராஷ்டிரர், பாண்டு
மற்றும் விதுரர் ஆகிய மிகச்சிறந்த மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார். மகாபாரதமானது
குருட்சேத்திர யுத்தத்திற்குப் பிறகும், மகாபாரதத்தின் எல்லா கதாநாயகர்களும் இறந்த
பிறகும், வியாசதேவரால் தொகுக்கப்பட்டதாகும். பரீட்சித்து மகாராஜனின் மகனான
ஜனமேஜய மகாராஜனின் ராஜசபையில் மகாபாரதம் முதன்முதலாக பேசப்பட்டது.

– ஸ்ரீமத் பாகவதம் 1.9.7 (பொருளுரை)

+1

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question