Monday, April 22

Gandhari (Tamil) / காந்தாரீ

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

இவர் உலக சரித்திரத்தில் கற்புக்கரசி எனும் புகழைப் பெற்றவளாவாள். இவள்
காந்தார (இப்பொழுது கபுல் என்னும் இடத்திலுள்ள கந்தஹர்) ராஜனான சுபல
மகாராஜனின் மகளாவாள். இந்துப் பெண்மணிகள் பொதுவாக ஒரு நல்ல கணவனை
அடைவதற்காக சிவபெருமானை வழிபடுகின்றனர். காந்தாரி சிவபெருமானை
திருப்திப்படுத்தினாள். இதனால் திருதராஷ்டிரர் ஒரு நிரந்தரக் குருடர் என்றபோதிலும்
அவரை மணந்து, நூறு மகன்களைப் பெறும் வரத்தை சிவபெருமானிடமிருந்து அவள்
பெற்றாள். தான் மணக்கப் போகும் கணவன் ஒரு குருடர் என்பதை அறிந்த காந்தாரி, தனது
வாழ்க்கைத் துணைவரைப் பின்பற்றும் நோக்கத்துடன் அவளும் ஒரு குருடியாக இருக்க
முடிவு செய்தாள். எனவே துணியால் கண்களைக் கட்டிக்கொண்ட காந்தாரி அவளது மூத்த
சகோதரரான சகுனியின் வழிகாட்டலின்கீழ் திருதராஷ்டிரரை திருமணம் செய்து
கொண்டாள். அவளது காலத்திலேயே அவள்தான் பேரழகியாகத் திகழ்ந்தாள்.
பெண்மைக்குரிய குணங்களிலும் அதற்கு இணையான தகுதிகளை அவள் பெற்றிருந்தாள்.
அக்குணங்களினால் கௌரவ சபையைச் சேர்ந்த ஒவ்வொரு அங்கத்தினரின் அன்பிற்கும்
அவள் பாத்திரமானாள். ஆனால் இத்தனை நற்குணங்களும் அவளிடம் இருந்தபோதிலும்,
ஒரு பெண்ணின் இயற்கையான பலவீனமும் அவளிடம் இருக்கத்தான் செய்தன. இதனால்
ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த குந்தியிடம் அவள் பொறாமை கொண்டாள். இரு
ராணிகளும் கர்ப்பவதிகளாக இருந்தனர். ஆனால் குந்தி முதலில் ஓர் ஆண் குழந்தையைப்
பெற்றாள். இதனால் கோபமடைந்த காந்தாரி தனது சொந்த கர்ப்பப்பை இருந்த இடத்தில்

பலமாக அடித்தாள். இதன் விளைவாக, அவளுக்கு ஒரு சதைத் துண்டம் மட்டுமே பிறந்தது.
ஆனால் அவள் வியாசதேவரின் பக்தை என்பதால், வியாசரின் உபதேசத்தின்படி
அத்துண்டம் நூறு பகுதிகளாக பரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியும் ஓர் ஆண் குழந்தையாக
வளர்ந்தது. இவ்வாறாக நூறு மகன்களுக்குத் தாயாக வேண்டும் என்ற அவளது எண்ணம்
நிறைவேறியது. பிறகு அவளது உயர்ந்த நிலைக்கேற்ப அவள் எல்லா குழந்தைகளையும்
ஊட்டி வளர்க்கத் துவங்கினாள். குருட்சேத்திர யுத்தத்தைப் பற்றிய சதியாலோசனை
நடந்துகொண்டு இருக்கும்பொழுது, பாண்டவர்களுக்கு எதிராக போரிடுவதற்கு அவள்
ஆதரவு தெரிவிக்கவில்லை; மாறாக அத்தகைய ஒரு சகோதர யுத்தத்திற்குக் காரணமாக
இருந்ததற்காக அவளது கணவரான திருதராஷ்டிரரை அவள் குற்றம் கூறினாள்.
இராஜ்ஜியத்தை இரு பாகங்களாகப் பிரித்து, ஒன்றை பாண்டு புத்திரர்களுக்கும், மற்றதை
அவளது சொந்த மகன்களுக்கும் கொடுப்பதையே அவள் விரும்பினாள். குருட்சேத்திர
யுத்தத்தில் அவளது எல்லா மகன்களும் கொல்லப்பட்டதால் அவள் பெரும் பாதிப்படைந்தாள்.
இதனால் பீமசேனரையும், யுதிஷ்டிரரையும் சபிக்க விரும்பிய அவளை வியாசதேவர்
தடுத்துவிட்டார். துரியோதனன் மற்றும் துச்சாதனன் ஆகியோரின் மரணத்தைக் குறித்து
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முன் அவள் புலம்பியது காணப் பரிதாபமாக இருந்தது.
உன்னதமான செய்திகளைக் கூறி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவளை சமாதானப்படுத்தினார்.
கர்ணன் இறந்தபொழுதும் அவள் அவ்வாறே புலம்பினாள். மேலும் கர்ணனுடைய
மனைவியின் துயரத்தையும் அவள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் விவரித்தாள். இறந்துபோன அவளது
மகன்கள் வீர ஸ்வர்கம் அடைந்ததை ஸ்ரீல வியாசதேவர் அவளுக்குக் காட்டியபொழுது, அவள்
சமாதானமடைந்தாள். கங்கையின் தோற்றுவாய்க்கு அருகேயுள்ள இமயமலைக்
காடுகளுக்குள் தன் கணவருடன் அவள் இறந்து போனாள்; ஒரு காட்டுத் தீயில் அவள் கருகி
மாண்டாள். யுதிஷ்டிர மகாராஜன் அவரது பெரியப்பன் மற்றும் பெரியம்மா ஆகியோரின்
ஈமச்சடங்குகளை நிறைவேற்றினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question