Chaturmas (Tamil) / சாதுர்மாஸ்யம்
சாதுர்மாஸ்ய காலம் என்பது ஆஷாட (ஜுன் - ஜுலை ) மாதத்தில் வளர்பிறை ஏகாதசியான ஷயன ஏகாதசியிலிருந்து தொடங்கி, கார்த்திக ( அக்டோபர்- நவம்பர்) மாதத்தின் வளர்பிறை ஏகாதசியான உத்தான ஏகாதசியன்று முடிகிறது. இந்த நான்கு மாத காலமானது “சாதுர்மாஸ்யம்” என்று அறியப்படுகிறது. வைஷ்ணவர்கள் சிலர் இதனை ஆஷாட மாதத்தின் பெளர்ணமி நாளிலிருந்து கார்த்திக மாதத்தின் பெளர்ணமி நாள் வரை அனுசரிக்கின்றனர். இதுவும் நான்கு மாத காலமாகும். சந்திர மாதங்களை வைத்து கணக்கிடப்படும் இந்த காலம் சாதுர்மாஸ்யம் எனப்படுகிறது. சூரிய மாதத்தினைப் பின்பற்றுவோர் சிராவண மாதத்திலிருந்து கார்த்திக மாதம் வரை சாதுர்மாஸ்யத்தை அனுசரிக்கின்றனர். சூரிய மாதமோ சந்திர மாதமோ, ஒட்டு மொத்த காலமும் மழைக்காலத்தின்போது வருகிறது. சாதுர்மாஸ்யம் எல்லாத் தரப்பட்ட மக்களாலும் அனுசரிக்கப்பட வேண்டும். கிரஹஸ்தரா (குடும்பத்தினர்) சந்நியாசியா என்பது பொருட்டல்ல. இத...