Friday, July 12

திருவிழாக்கள்

Jhulan Yatra – Tamil / ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா

Jhulan Yatra – Tamil / ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா

திருவிழாக்கள், Festivals-Tamil
இந்தியாவின் புனித நகரமான பிருந்தாவனத்தில் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்று - 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணர் தோன்றிய இடம் - ஜுலான் யாத்திரையின் கொண்டாட்டம், ராதா-கிருஷ்ணா ஊஞ்சல் திருவிழா. பிருந்தாவனில் உள்ளூர் கிராமவாசிகள் மற்றும் மக்கள் மத்தியில் இந்த திருவிழா 13 நாட்கள் நீடிக்கும். பிருந்தாவனத்தில் இது ஆண்டின் மிகப் பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும், இந்த நேரத்தில் பிருந்தாவனத்தில் மிகவும் நெரிசலாக இருக்கும், அதாவது சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த நூறாயிரக்கணக்கான மக்கள் இந்த காலகட்டத்தில் பிருந்தாவனத்திற்கு வருகை தருகிறார்கள். இது புனிதமான ஸ்ரவண மாதத்தில்(ஜூலை-ஆகஸ்ட்) நடக்கும். ஸ்ரீ பிருந்தாவனத்தில், ஐந்து நாட்கள், அங்குள்ள 5000 கோயில்களில், சிறிய உற்சவ-விக்ரஹங்களை ஊஞ்சலில் வைத்து வழிபடுவார்கள். பாரம்பரிய ஆரத்தி வழிபாட்டைப் பெற்ற பிறகு, ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்க...
புருஷோத்தம மாதத்தின் மஹிமைகள்

புருஷோத்தம மாதத்தின் மஹிமைகள்

திருவிழாக்கள், திருவிழாக்கள்
பல வருடங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான முனிவர்கள் யாகங்கள் செய்வதற்காக நைமிசாரண்யத்தில் ஒன்று கூடினர்.; மாபெரும் முனிவர் சூத கோஸ்வாமியும் அங்கு வந்து சேர்ந்ததை பார்த்து எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். எல்லோரும் அவரை மிக அழகிய வியாஸ ஆசனத்தில் அமரச் செய்தனர். முனிவர்கள் சூத கோஸ்வாமியிடம் இருகரம் கூப்பி கேட்டு கொண்டனர். “சூத கோஸ்வாமியே பகவான் கிருஷ்ணரின் அற்புதமான லீலைகள் பலவற்றில் மிகச்சிறந்த ஓன்றை நாங்கள் இந்த பௌதிக கடலில் இருந்து மீண்டு ஆன்மீக உலகம் திரும்புச்செல்லும் விதமாக தயவு செய்து எடுத்துரையுங்கள்.” சூத கோஸ்வாமி கூறினார். “முனிவர்களே நான் இப்போது ஹஸ்தினாபுரத்தில் சுகதேவ கோஸ்வாமியின் தாமரை திருவாயிலிருந்து ஸ்ரீ மத் பாகவதம் முழுவதையும் பகவானின் எண்ணற்ற லீலைகளையும் கேட்டு வந்துள்ளேன். அதில் முக்கியமான ஒன்றை கூறுகிறேன்.” முன்னொரு நாள் நாரத முனிவர் பத்ரிகாஸ்ரமத்தில் நர நாராயண ...
தாமோதர மாதம்

தாமோதர மாதம்

திருவிழாக்கள், திருவிழாக்கள்
பகவான் ஸ்ரீ கிருஷ்னரை வெண்ணை திருடியதற்க்காக அன்னை யசோதை உரலில்கட்டியதால், அவருக்கு "தாமோதரர்" என்று பெயர் வந்தது. "தாம்" என்றால் "கயிறு ""உதரா" என்றால் 'வயிறு" இந்த மாதத்தில் யாரொருவர் தாமோதரருக்கு திருவிளக்கு ஏற்றி "தாமோதரஷ்டகம்" பாடி வழிபடுகின்றாரோ, அவர் பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர் ஆவார். தாங்கள் வைத்துள்ள தாமோதர பகவானை (படத்தை) தூய்மையான இடத்தில் வைத்துக் கொள்ளவும் பிறகு நெய்தீபம் ஏற்றி.தாமோதர பகவானின் பாதம் – 4 முறைமார்புக்கு – 2 முறைமுகத்திற்கு – 3 முறைமுழுவதும் – 7 முறை இவ்வாறு தாமோதரருக்கு ஆரத்தி செய்தபின் துளசி இலையை அர்ப்பணிப்பது சாலச்சிறந்தது.  "கார்த்திகை மாதத்தில் தாமோதரரை வழிபட்டு, தாமோதர அஷ்டகம் என்று அறியப்படும் இந்த பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும், சத்யவ்ரத முனிவரால் பேசப்பட்ட இது பகவான் தாமோதரரை கவர்கின்றது." - (...
இஸ்கான் (ISKCON) குறிக்கோள்

இஸ்கான் (ISKCON) குறிக்கோள்

திருவிழாக்கள்
ஸ்ரீல பிரபுபாதா, 1966 ஜூலையில் இஸ்கானை (ISKCON) ஆரம்பித்தார். அச்சமயம் ஸ்ரீல பிரபுபாதா, இஸ்கான் நிறுவன ஆவணத்தில் இஸ்கானின் ஏழு குறிக்கோள்களை குறிப்பிட்டிருந்தார். 1. உலகில் உண்மையான அமைதி மற்றும் ஒற்றுமை ஏற்படவும், வாழ்க்கையின் உயர்ந்த மதிப்பை உணராமல் செயல்படுவதை தவிர்க்கவும், ஆன்மீக ஞானத்தை முறைப்படி பரப்பி, ஆன்மீக வாழ்க்கையின் நுணுக்கங்களை பற்றி அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுப்பது. 2. இந்தியாவின் மிகப்பெரும் சாஸ்திரங்களான ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிட்டவாறு, கிருஷ்ண உணர்வை பரப்புவது. 3. இஸ்கான் இயக்கத்தின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அருகே அழைத்து வருவது. இதன் மூலமாக உறுப்பினர்கள் மற்றும் மனித சமுதாயத்தினரிடையே ஒவ்வொருவரும் ஆத்மா மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சம் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்வது. 4. பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரப...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question