Friday, September 20

Srila Prabhupada (Tamil) / ஸ்ரீல பிரபுபாதர்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

 தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 1896ம் வருடம் கொல்கத்தாவில் முரையான வைஷ்ணவ குடும்பத்தில் தோன்றினார். பக்தித் தொண்டின் நெறிகளை சிறு வயதிலிருந்தே கற்று வந்த அவர்,தனது ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கேஸ்வாமியை 1922ம் வருடம் கொல்கத்தாவில் முதன்முறையாக சந்தித்தார். அறுபத்து நாங்கு கெளடீய மடங்களை நிறுவியிருந்தவரும் புகழ்பெற்ற ஆச்சாரியருமான ஸ்ரீல பக்திசித்தாந்தருக்கு இந்த படித்த இளைஞனை மிகவும் பிடித்திருந்தது, வேதஞானத்தை பிரச்சாரம் செய்யும் பணிக்கு, அதிலும் குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்வதற்கு, வாழ்வை அர்ப்பணிக்கும்படி அந்த இளைஞனைக் கேட்டுக் கொண்டார், பின்னர், 1933இல் ஸ்ரீல பிரபுபாதர் முறையாக அவரிடம் தீட்சை பெற்று சீடரானார்.

        ஸ்ரீல பிரபுபாதர் 1950இல் குடும்ப வாழ்விலிருந்து ஓய்வு பெற்று, கற்பதற்கும் எழுதுவதற்கும் அதிக நேரம் வேண்டி, வானபிரஸ்தம் ஏற்றார். புனித ஸ்தலமான விருந்தாவனத்திற்குச் சென்று, அங்குள்ள சரித்திர புகழ்பெற்ற இராதா தமோதரர் கோவிலில், மிகவும் எளிமையான முறையில் வாழ்ந்து வந்தார். ஆழ்ந்த கல்வியிலும் புத்தகம் எழுதுவதிலும் பல வருடங்களை அங்கு கழித்தார், 1959இல் சந்நியாசம் எற்றுக் கொண்டு,அவர் தனது வாழ்வின் முக்கியமான பணியினைத் தொடங்கினார் – 18,000 ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்ரீமத் பாகவதத்தினை மொழிபெயர்த்து விளக்கமளில்க்கத் தொடங்கினார். மேலும், பிற கிரகங்களுக்கு எளிதான பயனம் என்னும் புத்தகத்தையும் எழுதினார்.

        தீட்சை பெற்ற பின்னர், ஸ்ரீல பிரபுபாதர், பகவத் கீதைக்கு விளக்கவுரை எழுதினார், கெளடீய மடத்தின் பணிகளில் உதவி செய்தார், 1944இல் பேக் டு காஹெட் (Back to Godhead) என்ற ஆங்கிலப் பத்திரிகையை மாதம் இருமுறை வெளிவரும்படி தொடங்கினார். அப்பத்திரிகையினை அவரே தனிநபராக தயார் செய்து. தட்டச்சு செய்து, திருத்தியது மட்டுமின்றி தானே விநியோகமும் செய்தார். அப்பத்திரிகை தற்போது அவரது சீடர்களால் தொடர்ந்து ஆங்கிலம் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டு வருகின்றது. 

        பாகவதத்தின் மூன்று பகுதிகளை வெளியிட்ட பின்னர், தனது ஆன்மீக குருவின் கட்டளையைப் பூர்த்தி செய்வதற்காக, செப்டம்பர் 1965இல் அமொரிக்கா சென்றார், அதன் பின்னர், ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களின் வடிவில், இந்தியாவின் தத்துவத்தினையும் மதத்தினையும் அதிகாரம் பொருந்திய வடிவில் தனது மொழிபெயர்ப்புகள் மற்றும் விளக்கவுரைகளின் மூலம் வழங்கினார்.

        சரக்குக் கப்பலிலிருந்து நியூயார்க் நகரில் முதன்முறையாக இறங்கிய போது, அவரிடம் சற்றும் பணமில்லை ஏறக்குறைய ஒரு வருட கால சிரமத்திற்குப் பின், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (The International Society for Krishna Consciousness – ISKCON) 1966 ஆம் வருடம் ஜுலை மாதம் நிறுவினார், 1977, நவம்பர் 14 ஆம் நாள் இவ்வுலகை விட்டுச் செல்வதற்கு முன், நூற்றுக்கணக்கான கோவில்கள், ஆஷ்ரமங்கள், பண்ணைகள் போன்றவற்றை நிறுவி, இவ்வுயக்கத்தினை உலகெங்கிலும் பரவச் செய்தார். மேற்கத்திய நாடுகளில் முதன்முதலில் குருகுலப் பள்ளியைத் திறந்த பெருமையும் அவரையே சாரும்.

        பாரதப் பண்பாட்டைப் பரப்புவதற்காக, உலககெங்கிலும் பல்வேறு கோவிலகளை நிர்மானித்த பிறகு, இந்தியாவிலும் மாபெரும் கோவில்களை உருவாக்க ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினார். மேற்கு வங்காளத்திலுள்ள புனித ஸ்தலமாகிய மாயாப்பூரில், ஒரு மாபெரும் ஆன்மீக நகரத்தை உருவாக்கும் திருப்பணி ஸ்ரீல பிரபுபாதரால் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பல்வேறு நகரங்களிலும் பிரம்மாணமான கோவில்கள் கட்டப்பட்டு உள்ளன, மேலும் பல்வேறு இடங்களில் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீல பிரபுபாதர்

என்றும் உங்கள் நலன் விரும்பி

01-செப்டம்பர்-1896ஸ்ரீல பிரபுபாதர்(அபய சரண்) கொல்கத்தாவில் தோன்றினார்த
ந்தை – கெளர் மோகன் தே
தாய் – ரஜனி தே

1901ரதயாத்திரை நடத்தினார் (சிறுவயதில்)

1902ராதகிருஷ்ண வழிபாடு செய்யத் தொடங்கினர்

1916ஸ்காட்டிஸ் சர்ச் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்

1918திருமண வாழ்க்கையில் நுழைந்தார்

1921பாஷ் ஆய்வகத்தில் துனை மேலாலராக நியமிக்கப்பட்டார் (மகாதமா காந்தி இயக்தில் சேர்ந்தார்)

1922ஆன்மீக குரு  ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூரை சந்தித்தார் 

1925முதன் முறையாக விருந்தாவனம் சென்றார்

1928அலகாபாத்தில் கெளடிய மடம் உருவாக துணை யாற்றினார்

1932ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூரிடம் தீட்சை பெற்றார்

1935ஆன்மீக குரு, புத்தகங்களை அச்சிடவும், கோயில்களை நிறுவவும் அறிவுருத்தினார்

1936மேலை நாடுகளில் பிரச்சாரம் செய்ய ஆன்மீக குரு கட்டளையிட்டார்

1939கெளடிய வைஷ்ணவ சமூகத்தில் “பக்தி வேதாந்த” எனும் பட்டத்தை பெற்றார்

1944“பேக் டூ காஹெட்” எனும் மாத இதழ் தொடங்கினார்

1953ஜான்சியில் “லீக் ஆப் டிவேல்டீஸ்” ஆரம்பித்தார். ஆச்சாரிய பிரபாகருக்கு முதல் தீட்சை வழங்கினார்

1954வனப்பிரஸ்தம் ஏற்றார்

1959சந்நியாசம் ஏற்றார்

1960“பிற கிரகங்களுக்கு செல்ல எளிய வழி” என்ற முதல் புத்தகத்தை வெளியிட்டார்

1962“ஸ்ரீமத் பாகவதம் முதல் காண்டத்தை” வெளியிட்டார்

1965ஆன்மீக குருவின் கட்டளைப்படி மேலை நாடான அமெரிக்க சென்றார்

1966 – ஜுலை“அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவினார்

1967பகவத் கீதை உண்மையுருவில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையை முடித்தார்

1968மேக் மில்லன் நிறுவனத்தால் பகவத் கீதை உண்மயுருவில் வெளியிடப்பட்டது

1972ஸ்ரீல பிரபுபாதாரின் புத்தகங்களை வெளியிட “பக்தி வேதாந்த புத்தக அரக்கட்டளை”(BBT) நிறுவப் பட்டது

1975ஸ்ரீ சைதன்ய சரிதாமிருதத்தின் மொழிபெயர்ப்பை 17 தொகுதிகளாக முடித்து வெளியிடப்பட்டது

1976“விஞ்ஞான ரீத்யான” பிரச்சாரத்திற்கு பக்தி வேதாந்த நிறுவனத்தை நிறுவினார்

14- நவம்பர்-1977இவ்வுலகை விடு பிரிந்தார்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question