Thiruvarangam / Srirangam History (Tamil) / திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம்
இரும்பனன் றுண்ட நீரும்போதருங் கொள்க, என்றன் அரும்பிணி பாவ மெல்லாம்அகன்றன என்னை விட்டுசுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்டகரும்பினைக் கண்டு கொண்டென்கண்ணினை களிக்கு மாறே-திருக்குறுந்தாண்டகம் 13.எந்நேரமும் வண்டுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அழகிய சோலைகள் சூழ்ந்த அரங்கத்தில் பள்ளிகொண்ட கரும்பாகிய என் அரங்கனைக் கண்ட மாத்திரத்தில், சூடான இரும்பில் பட்ட நீர் எவ்வாறு வேகமாக உட்கவரப்பட்டு காணாமல் போகிறதோ அதுபோல், என் பாவமெல்லாம் என்னைவிட்டு பறந்தோடிவிட்டது என்று திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் இன்றைய இந்தியாவிலேயே மிகச் சிறப்பான தலமாகும்.ஸ்ரீரங்கம் ரயில்வே நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீட்டருக்குக் குறைவான தூரமே, திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரமாகும்.திருமாலின் திவ்ய தேசங்கள் 108ல் இத்திருவரங்கம் தலையாயது சோழநாட்...