Tuesday, April 16

துளசி மாலை ஏன் அணிய வேண்டும்?

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

“இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலுள்ள பல விதமான மத நம்பிக்கையுடைய மக்கள், துளசியால் ஆன (துளசி கண்டி மாலையினை) அதாவது (கண்டி என்றால் கழுத்து) அணிகலன்களை கழுத்தணிகலன்களாக அணிகின்றனர். துளசி மரம், பகவான் மற்றும் அவரது பக்தர்களுக்கு மிகவும் புனிதமானது ஆகும்.

Why-Wearing-Tulasi-Mala
 
எவரெல்லாம் துளசி மாலை அணியலாம், அணியக்கூடாது என்பதைப் பற்றிய பல பிரபலமான, தவறான, கருத்துக்கள் உள்ளன.
 
என்றும் வீழ்ச்சியடையாத அதிகாரப்பூர்வமான வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட இக்கட்டுரையின் மூலம் அனைத்து கேள்விகளுக்கும் விடை வழங்கப்பட்டுள்ளது.வேதங்களின் ஸ்ருதி, ஸ்மிருதி, மற்றும் பகவத் கீதை, மகாபாரதம் போன்ற புராணங்களைப் பின் பற்றுவதன் மூலம் நமது ஆன்மீகம் வெற்றிகரமானதாக அமைவதோடு நன்மை பயக்குவதாக அமைவதுடன், ஆன்மீகத்திலும் முன்னேற்றம் அடையும் வாய்ப்புள்ளது.
 
அதுமட்டுமல்லாமல் கெளடிய வைஷ்ணவர்களின் ஆன்மீக நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீல சனாதன கோஸ்வாமியால் எழுதப்பட்ட “ஹரி பக்தி விலாஸ் என்ற புத்தகத்திலுள்ள எடுக்கப்பட்டுள்ள இந்த குறிச்சொற்கள், ஆனது பொதுவாக பல்வேறு புராணங்கள், மற்றும் வேதங்களின் அடிப்படையில், சரியான ஆன்மீக முறைகளை, சரியான வழிகளில் பக்தியோகம் செய்வதற்கு உதவும் ஒரு தொகுப்பு ஆகும்.
 
நாம் இப்போது துளசி மாலையின் புகழைப் பற்றியும், எவரெல்லாம் துளசி மாலை அணியலாம் என்பதைப் பற்றியும் காண்போம்.
 
துளசி மாலை அணிவதால் உண்டாகும் நன்மைகள்
 
1. துளசி மாலை அணிவதால் மிகப் பெரிய பாவங்களானது அழிகின்றது. (மஹா பாதக சம்ஹண்ரிம்) ஸ்கந்த புராணம் 4.3.18
 
2. “ஸ்ரீ ஹரி” எப்போதும் உங்களுடன் இருப்பார். (தேக சதா ஹரி) கருட புராணம் 4.335
 
3. பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் மில்லியன் மடங்கு பூஜை செய்த புண்ணிய பலன்கள் கிட்டும். (பித்ர்னம் தேவதா கிருதம் கோடி குணம்) கருட புராணம் 4.336
 
4. எமராஜர் நம்மை விட்டு தொலைதூரத்திலேயே இருப்பார். (பிரேத ராஜா துடகாத்ருஷ்ட்வ நஸ்யந்தி துரேண) கருட புராணம் 4.337
 
5.கெட்ட கனவுகள், விபத்துக்கள், ஆயுதங்கள் மூலம் தாக்கப்படுதல், மற்றும் எமதூதர்களிடமிருந்தும் முழு பாதுகாப்பு கிடைக்கிறது ( துஷ்வப்னம் துர்னிமித்தும் பயம் சஷ்தரஜம்) கருட புராணம் 4.33.8
 
துளசி மாலையினை எவரெல்லாம அணியலாம்?
பின்வரும் அதிகாரப் பூர்வமான மேற்கோள்கள், தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தாமே கூறுகிறார். ஒருவர் துளசி மாலை அணிவதற்கு எவ்வித தடைகளும், கட்டுப்பாடுகளும் தேவையில்லை. துளசி மாலை அணிவதென்பது, ஒருவர்/ ஒருவளின் தனிப்பட்ட உணர்வினை சார்ந்த அடிப்படை உரிமம், தகுதி, மற்றும் தனக்கு வேண்டும் என்ற தூண்டுதலின் பெயரில் அணிந்து கொள்வதைக் குறிக்கின்றது. ஸ்ரீல சனாதன கோஷ்வாமி பாதா, இவ்வாறு அணிவதைத் தான் “சுவை” அல்லது ஈர்ப்பு என்று அழைக்கிறார். ( யதா ரசி) 4.308
 
விஷ்ணு தர்மோத்தராவில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்,”ஒருவன்/ஒருவள் அசுத்தம் அல்லது கெட்ட குணங்கள் கொண்டவராக இருப்பினும் அவர்களது கழுத்தில துளசி மாலை அணிந்தள்ளார்கள் எனில் நிச்சயமாக என்னை வந்தடைவார்கள்”. (அஸ்ஸவ்கோ அனாச்ஹரோ மாம் ஏவ இதி நா சம்ஸய) 4.322
 
ஸ்ரீ சைதன்யரின் கூட்டாளிகள் என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தின் குறிகள் கூறுவது யாதெனில் “ஸ்ரீல பக்தி வினோத தாகூர் தீட்சை வாங்காத, வைஷ்ணவர்களின் மிகவும் முன் மாதிரியான நடத்தையைப் பின்பற்றாத கல்கத்தா தொழிலதிபருக்கு துளசி மாலையினை வழங்கினார். “திரு. எஸ். கே. கோஸ் அவ்வப்பொழுது பக்தி வினோத தாகூரின் வசிப்பிடமான “பக்தி பவனாவிற்கு” வருகை தந்தார். வைஷ்ணவ நடத்தைக் கொள்கைகளை தம்மால் ஏற்க முடியவில்லை யென்றாலும், ஸ்ரீல பக்தி வினோத தாகூரின் வழிகாட்டுதலின் கீழ் திரு. கோஸ் தனது கழுத்தைச் சுற்றி துளசி மாலை அணியலானார்.
 
மேலும், இஸ்கான் வெளியிட்டுள்ள “வைஷ்ணவ பண்பாடு” என்ற தலைப்பில் உள்ள,” ஹரி பக்தி விலாஸா” வின் மேற்கோள் கூறுவது யாதெனில்,
 
“பத்ம புராணம் கூறுகிறது, ஒருவர் தூய்மை அல்லது தூய்மையற்ற நிலையில் இருந்தாலும் “அவர் எப்பொழுதும் துளசி மாலை அணிதல் வேண்டும்” ஒருவர், குளிக்கும் போதோ, சாப்பிடும் போதோ, மலம் மற்றும் மூத்திரம் செல்லும் போதோ ஒரு போதும் துளசி மாலையினை அகற்றுதல் கூடாது.” வேறு வார்த்தையில் கூற வேண்டும் எனில், துளசி மணிகள் எப்பொழுதும் தூய்மையானது, மற்றும் எவரெல்லாம் அதனுடன் தொடர்பு கொண்டுள்ளனரோ அவர்களையும் அது தூய்மையடையச் செய்யும். 
 
இந்த கட்டுரையானது, ஒருவரை பக்தியுடனும், நேர்மையுடனும், ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் துளசி மாலையினை கழுத்தில் அணிந்து கொள்வதற்கு ஊக்குவிப்பதாக இருக்கும். என்று நாங்கள் நம்புகிறோம்.
 
நீங்கள் இதன் மூலம் சிறந்த பலன்களை அடைந்து, உங்களது வாழ்வில் மிக அற்புதமான அதிசயங்களை அனுபவிப்பீர்கள்.
 
“நாம் இறந்த பின்னரும் கூட துளசியின் அற்புதமான கருணை” :–
 
      இறந்த பிறகும் கூட , எமராஜரின் நீதிமன்றத்தில் இருந்து “துளசி தேவி ஆத்மாக்களை விடுதலை செய்கிறார்.
 
     ஒருவருடைய இறந்த உடல் துளசி மரம் போன்ற எரிபொருள் கொண்டு தீ மூட்டப் பட்டால், அவர்கள் ஆன்மீக உலகினை அடைவது நிச்சயம்.
 
      அவர் மிகப் பெரிய பாவம் செய்தவராயினும் கூட, இருப்பினும் துளசி மரத்தினால் தீ மூட்டப் பட்டவராயின் அந்நபர், அவரின் அனைத்து பாவ வினைகளில் இருந்தும் விடுவிக்கப் பட்டவராகிறார்.
 
     எவர் ஒருவர் மரண நேரத்தில் பகவான் கிருஷ்ணரின் பெயரை உச்சரிக்கின்றாரோ, மற்றும் துளசி தேவியின் மரத்தினை தொடுகின்றனரோ, அவர்கள் ஆன்மீக உலகினை அடைவது நிச்சயம்.
 
      இறந்த உடலை எரிக்கும் வேலையில், துளசி மரத்தின் ஒரு சிறிய துண்டினை தீயில் இட்டால் கூட , அந்த நபர் ஆன்மீக உலகினை அடைவர் ; துளசியினை தொடுதல் மூலம் மற்ற அனைத்து மரங்களும் கூட சுத்திகரிக்கப்படுகின்றது.
 
      விஷ்ணு தூதர்கள் துளசி மரம் கொண்ட தீயில் எரிந்து கொண்டிருக்கும் நபரினைக் கண்டார்கள் எனில் அவர்கள் உடனடியாக அந்த உடலையுடைய நபரினை ஆன்மீக உலகிற்கு அழைத்துச் செல்வர் .
 
     இறந்த உடலானது
துளசி மரம் கொண்டு எரிந்து கொண்டிருக்கும் போது, எமராஜரின் தூதர்கள் அந்த இடத்திற்கு வர மாட்டார்கள். துளசி மரங்களினால் சாம்பலாகின அந்த நபரின் உடல் ஆன்மீக உலகிற்கு செல்லும் போது, வழி நடுவிலும் தேவர்கள் பூமாரி பொழிந்து அந்நபரை வரவேற்பர்.
 
பகவான் விஷ்ணு, மற்றும் சிவன் ஆன்மீக உலகின் வழியில் அந்த நபரினைப் பார்க்கும் போது, அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவரை வாழ்த்துவர். மற்றும் பகவான் கிருஷ்ணர் அவரது முன், தாமே நேரில் வந்து அவரது கையைப் பிடித்து , தனது சொந்த இருப்பிடத்திற்கு அவரை அழைத்துச் செல்வார்.
+13

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question