பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்
கிருஷ்ணருக்கும் பக்தனுக்கும் இடையில் நிகழும் அன்புப் பரிமாற்றங்கள் மிகவும் இனிமையானவை. பகவானின் சொல்லை பக்தன் தட்ட மாட்டான் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். ஆனால் பக்தனின் சொல்லையும் பகவான் தட்ட மாட்டார் என்பதை நீங்கள் அறிவீர்களா?அன்னை யசோதையால் உரலில் கட்டிப்போடப்பட்ட கிருஷ்ணர் அந்த உரலுடன் நகர்ந்து இரண்டு மரங்களை வீழ்த்தி குபேரனின் இரண்டு மகன்களை விடுவித்தார். இந்த லீலையில் கிருஷ்ணர் எவ்வாறு தனது அன்பிற்குரிய பக்தரான நாரதரின் வார்த்தைகளை நிரூபித்தார் என்பதை சற்று காணலாம்.கிருஷ்ணர் செய்த குறும்புச் செயல்"அம்மா பசிக்குது," என்றபடி கிருஷ்ணர் தயிர்கடைந்து கொண்டிருந்த அன்னை யசோதையின் முந்தானையைப் பிடித்து அன்புடன் இழுக்கின்றார். குழந்தையைத் தடுக்க முடியாமல் அவனை எடுத்து மடியில் கிடத்தி அந்த அழகிய திருமுகத்தை ரசித்தபடி யசோதை பால் கொடுக்கத் தொடங்கினாள். கிருஷ்ணரும் அன்னையின் அன்பி...