Spiritual eyes (Tamil) I தெய்வீகக் கண்கள்!
ஆதாரம்: மஹாபாரதம்குருக்ஷேத்திர போர்க்களத்தில் ஒருபக்கம் பாண்டவ படைகளும், கெளரவ படைகளும் போருக்குத் தயாராக அணிவகுத்து நின்றனர். பீஷ்மர், கெளரவர் பக்கம் தலைமை தாங்க, திருஷ்டத்யும்னன் பாண்டவ படைக்கு தலைமை தாங்க, போர் ஆரம்பிக்க இருந்த நேரம். போரின் மறுபக்கமோ , திருதராஷ்டிரர் அரண்மனையில் கவலைதோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார் . அவரால் செய்யப்பட ஒன்றும் இல்லை. அவருடைய கவலையை பொதுவாக விதுரருடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால் விதுரரும் அங்கிருந்து நீங்கி விட்டதால் , திருதராஷ்டிரர் சஞ்ஜயனை அழைத்தார். சஞ்ஜயனிடம், ஓ சஞ்ஜயா! , என்ன நடக்கிறது என்று எனக்கு கூறு. இரு படைகளும் குருசேத்திரத்தை அடைந்து விட்டனவா ? விதியின் சக்தி, இந்த வயதானவனின் முயற்சிகளை விட சக்தி வாய்ந்தது. என்னுடைய மகனை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும், நான் தோல்வி அடைந்தேன். ஏன் இந்த நிலை? துரியோதனனின் தவறுகளை...