Saturday, July 27

ஏகாதசி

Utthana ekadhasi (Tamil) / உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசி

Utthana ekadhasi (Tamil) / உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசி

ஏகாதசி
ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி ஸ்கந்த புராணத்தில் பிரம்மாவிற்கும் நாரத முனிவருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை நாரத முனிவரிடம் பிரம்மா கூறினார். ஓ! முனிவர்களில் சிறந்தோனே! ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அழித்து புண்ணியத்தை அதிகரித்து முத்தியை அளிக்கக்கூடிய உத்தான ஏகாதசியை பற்றி கூறுகிறேன், கேள். ஓ! அந்தணர்களில் சிறந்தோனே! கார்த்திகை மாத (அக்டோபர் / நவம்பர்) வளர்பிறையில் தோன்றக்கூடிய உத்தான ஏகாதசி இந்த உலகில் தோன்றாத வரை கங்கையின் மேன்மை மாறாமல் நிலையாக இருந்தது. மேலும் உத்தான ஏகாதசி தோன்றாதவரை கடல் மற்றும் குளங்களின் புண்ணியத்தின் செல்வாக்கு ஈடு இணையற்று இருந்தது. இதன் பொருள் என்ன வெனில் இந்த உத்தான ஏகாதசி. கங்கையின் மேன்மைக்கும் குளங்களின் புண்ணியத்திற்கும் ஈடானது, இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது. ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் ச...
Rama Ekadashi (Tamil) / ரமா (ராம)  ஏகாதசி

Rama Ekadashi (Tamil) / ரமா (ராம) ஏகாதசி

ஏகாதசி
ரமா ஏகாதசியின், பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! ஜனார்தனா! ஐப்பசி மாத தேய்ப்பிறையில் (அக்டோபர்/ நவம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் எனக்கு விளக்குங்கள்.ஏகாதசியின், பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! ஜனார்தனா! ஐப்பசி மாத தேய்ப்பிறையில் (அக்டோபர்/ நவம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் எனக்கு விளக்குங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிங்கம் போன்றவனே! இந்த ஏகாதசியின் பெயர் ரமா ஏகாதசி. இது ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்துவிடும்...
Pashankusha Ekasashi (Tamil) / பாஸங்குசா ஏகாதசி

Pashankusha Ekasashi (Tamil) / பாஸங்குசா ஏகாதசி

ஏகாதசி
ஐப்பசி மாத வளர்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக் கூடிய பாஸங்குசா ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! மதுசூதனா, ஐப்பசி மாத வளர்ப்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் தயவு செய்து எனக்கு விளக்குங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த ஏகாதசியின் பெயர் பாஸங்குசா ஏகாதசி. ஒருவரின் பாவங்களை அழிக்கக் கூடிய இந்த ஏகாதசியின் பெருமைகளைக் கேள். சிலர் இந்த ஏகாதசியை பாயபங்குஸா ஏகாதசி என்றும் கூறுவர். இந்த ஏகாதசியன்று ஒருவர் விசேஷமாக பத்மநாபரை வணங்க வேண்டும். இந்த ஏகாதசி மேலுலக சுகங்களையும் முக்தியையும் மற்றும் ஒருவர் வேண்டிய பலன்களையும் கொடுக்கிறது. பகவான் விஷ்ணுவின் ...
Indira Ekadashi (Tamil) / இந்திரா ஏகாதசி

Indira Ekadashi (Tamil) / இந்திரா ஏகாதசி

ஏகாதசி
இந்திரா ஏகாதசி பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! கிருஷ்ணா ஓ! மதுசூதனா! ஓ! மது என்ற அரக்கனை கொன்றவரே! புரட்டாசி மாத தேய்பிறையில் (செப்டம்பர்/ அக்டோபர்) தோன்றக் கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறைகள் யாவை? இதை அனுஷ்டிப்பதால் ஒருவர் அடையும் பலன்கள் யாவை? பகவான் கிருஷ்ணர், பதிலளித்தார். இந்த புனிதமான ஏகாதசியின் பெயர் இந்திரா ஏகாதசி. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் எல்லா பாவ விளைவுகளும் அழிக்கப்படும் மற்றும் இழிவடைந்த தன் முன்னோர்கள் விடுதலை பெறுவர்.ஓ! மன்னா! சத்ய யுகத்தில் இந்திரசேனா என்ற ஒரு மன்னர் வாழ்ந்து வந்தார். அவர் தன் எதிரிகளை வெல்வதில் சாமர்த்தியமானவர். அவர் மாஹிஸ்மதிபுரி என்ற தன் இராஜ்ஜியத்தை செழிப்புட...
Pavitropana Ekadashi (Tamil) / பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி

Pavitropana Ekadashi (Tamil) / பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி

ஏகாதசி
பவித்ரோபன ஏகாதசியின் விரத மகிமையைப் பற்றிப் பார்ப்போமா:- இந்த பவித்ரோபன ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி மஹாவிஷ்ணுவே யுதிஷ்டிரரிடம் கூறியிருக்கிறார்.மஹாராஜாவான ஸ்ரீ யுதிஷ்டிரர், கிருஷ்ண பரமாத்மாவிடம் "அரக்கன் மதுவை அழித்ததால் "மதுசூதனன்" என்ற திருநாமம் பெற்றவரே சிரவண மாதம், சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி அறிய விரும்புகிறேன். ஆகையால் கிருஷ்ண பரமாத்வாவே தயை கூர்ந்து இந்த ஏகாதசி விரதத்தின் மகத்துவத்தை விரிவாக சொல்லுங்கள்" என்று வேண்டிக் கொண்டார்.முழுமுதற் கடவுளான கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரிடம், "மஹாராஜனே, இந்த ஏகாதசி தினத்தைப் பற்றி நீ அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஏகாதசியின் மகத்துவத்தைப் பற்றி சொல்கிறேன் கேள்! என்று கிருஷ்ண பரமாத்மா விரத மகிமையை எடுத்துரைத்தார்.பரமாத்மா கிருஷ்ணர் கூறுதல்:-இந்த ஏகாதசியானது மிகவும் புனிதமானது. இந...
பரம ஏகாதசி / Parama Ekadashi (Tamil)

பரம ஏகாதசி / Parama Ekadashi (Tamil)

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
தற்போது வரக்கூடிய ஏகாதசி, 32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் #பரம ஏகாதசி ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த வருடம் 'அதிக' மாதம் வந்துள்ளது.யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார். "பரம்பொருளே, மதுஸூதனா! 'அதிக' மாதத்தில், கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம். பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள்" என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "ஓ யுதிஷ்...
Padmini Ekadasi Tamil / பத்மினி ஏகாதசி

Padmini Ekadasi Tamil / பத்மினி ஏகாதசி

ஏகாதசி
பத்மினி ஏகாதசிதற்போது வரக்கூடிய ஏகாதசி, 32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் பத்மினி ஏகாதசி ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த வருடம் 'அதிக' மாதம் வந்துள்ளது.யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார், "பரம்பொருளே, மதுஸூதனா! 'அதிக' மாதத்தில், சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம். பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள்," என்று யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.பகவான் ஸ்ரீ கிருஷ்...
Kamika Ekadashi / காமிகா ஏகாதசி( கிருஷ்ண‌பட்ச ஏகாதசி)

Kamika Ekadashi / காமிகா ஏகாதசி( கிருஷ்ண‌பட்ச ஏகாதசி)

ஆன்மீகப் பதிவு, ஏகாதசி
காமிகா ஏகாதசியின் விரத மகிமை நாம் காண்போம்.மஹான்களைப் போன்று புண்ணியசீலரான யுதிஷ்டிர மஹாராஜா ஸ்ரீ கிருஷ்ணரிடம் - " மேலான பரம்பொருளே ! ஆஷாட, மாத சுக்லபட்சத்தில் வரும் புண்ணிய திதியான தேவசயனி ஏகாதசியைப் பற்றியும், அந்நாளில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிட்டும் ஒப்பற்ற பலன்களை பற்றியும் அறிந்து கொண்டேன்.இப்பொழுது ஆஷாட ,சிராவண மாதத்தின் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் கோவிந்தா, என் மீது கருணை கொண்டு, அந்த ஏகாதசியின் பெருமைகளை விரிவாக சொல்லுங்கள். முதன்மையான தெய்வமே, வாசுதேவா!, எனது பணிவான நமஸ்காரங்களை தங்களது திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறினார்.ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு பதிலளிக்கையில் - " தர்மத்தை எந்நிலையிலும் விடாது காக்கும் யுதிஷ்டிரா, ஒருவனது பாபங்களை எல்லாம் அழித்து சுபவிளைவுகளை ஏற்படுத்தும் ஏகாதசி உபவாசத்தி...
Apara Ekadashi (Tamil) /அபரா ஏகாதசி

Apara Ekadashi (Tamil) /அபரா ஏகாதசி

ஏகாதசி
 அபரா ஏகாதசி. இதனை அசலா ஏகாதசி என்றும் வழங்குவர்.    இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார்.     ஒ யுதிஷ்டிரா !! அபரா ஏகாதசி விரதம் மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகாவிஷ்ணுவை ஓங்கி உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது இப்பெயர் பெற்றது. மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.அதோடு இந்த அபரா ஏகாதசி விரத பிரபாவத்தால் பிரம்மஹத்தி, பிறரை நிந்திப்பது, ...
Mohini Ekadasi (Tamil) / மோஹினி ஏகாதசி

Mohini Ekadasi (Tamil) / மோஹினி ஏகாதசி

ஏகாதசி
https://youtu.be/vn0hpxEgJXw மோஹினி ஏகாதசியின் மகிமை  மோஹினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி சூர்ய புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். ஓ ஜனார்த்தனா ! மோஹினி ஏகாதசி கடை பிடிப்பது எப்படி? மேலும் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன் என்ன? இவற்றைப்பற்றி எனக்கு விரிவாகக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ தர்மத்தின் மகனே! ஒருமுறை வசிஷ்டமுனிவர் பகவான் இராமச்சந்திரனிடம் கூறிய கதையைப் பற்றி கவனமாகக் கேள்.    நீண்ட காலத்திற்கு முன் ஒருமுறை பகவான் இராமச்சந்திரர் வசிஷ்ட முனிவரிடம் கேட்டார். ஓ மரியாதைக்குரிய முனிவரே! நான் ஜனகராஜரின் மகளான சீதையை விட்டு பிரிந்திருப்பதால் மிகவும் மனவருத்தத்துடன் இருக்கிறேன். தயவு செய்து ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் மனவருத்தத்தையும் அழிக்கக்கூடிய ஒரு விர...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question