
Sat-Tila Ekadashi (Tamil) / சத்தில ஏகாதசி
ஒரு முறை நாரத முனி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இந்த சத்தில ஏகாதசியின் மகிமையைப்பற்றி கேட்க, அதற்கு பகவான் கூறினார். முன்பு ஒரு காலத்தில் ஒரு பிராமணப் பெண் ஒருத்தி என்னை அன்புடன் பூஜித்து வந்தாள். விரதங்களை (ஏகாதசி, கோகுலாஷ்டமி, இராம நவமி…முதலியன) தவறாமல் அனுசரித்தும், வேண்டியவர்களுக்கு தானங்களை கொடுத்தும், எந்த வித பலனையும் எதிர்பாராமல் என்னையும் பூஜித்தும் வந்தாள். ஆனால், அவளிடம் ஒரு பழக்கம் உண்டு. உணவை பிராமணர்களுக்கோ மற்ற தேவர்களுக்கோ அளிக்க மாட்டாள். இதை நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். இவள் தன் கடும் விரதங்களாலும், பூஜைகளாலும் என் உலகை அடையத்தகுந்தவள் என்றாலும் நான் அவளை சோதிக்க எண்ணி, மண்டை ஓடு மாலை அணிந்த சிவணடியார் வேடம் பூண்டு அவளிடம் சென்றேன். அவளிடம் நான் பிச்சை கேட்க, அவள் கோபமுடன் சேற்றை (களிமண்) என் பிச்சை...