
இறக்கும் கலை
இறக்கும் கலை ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை , இறப்பும் இல்லை என்று முன்பே அறிந்திருக்கிறோம் . அது ஆண்டவனுடைய சக்தி என்பதனால் அவருடைய திருலோகம் போய் சேராதவரை இந்த பிரம்மாண்டத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது . தன்னுடைய கர்மங்களுக்கேற்ப சில நேரம் பூலோகத்திலும் சில நேரம் கீழ் லோகத்திலும், சில நேரம் மேல் லோகத்திலும் பிரயாணம் செய்கின்றது.சாஸ்திரத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது .ப்ரம்மாண்ட ப்ரமிதே கோனே பாக்யவான் ஜீவகுரு க்ருஷ்ண ப்ராஸ தே பாய் பக்திலதா பீஜஇந்த பிரமாண்டத்திலேயே அதிக பாக்கியவான் யாரென்றால் குரு மற்றும் கிருஷ்ணரின் அனுக்கிரகம் பெற்றவன். அவன் இந்த உலகில் மறுபடியும் பிறப்பது கிடையாது. அதுவரை இவ்வுலகத்தில் தொடர்ந்து பிறப்பு இறப்பு எனும் சக்கரத்தில் கழல்கின்றான்.பாஸ்கஸ்மாத்து பாவோன்யோ வ்யக்தோவ்யத்தாத் ஸதாதக :ய : ஸ ஸர்வேஷு ...