
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 8 I Gita mahatmiya Chapter-8
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை எட்டாம் அத்தியாயத்தின் மஹிமைசிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, ஸ்ரீமத் பகவத்கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி இப்போது கேட்டு ஆனந்தம் அடைவாயாக". தெற்கே, அமர்த்கபூர் என்ற ஊரில், பவஷர்மா என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விலைமாதுவை திருமணம் செய்தான். அதோடு, மது அருந்துவது, மாமிசம் உண்பது, திருடுவது, வேட்டையாடுவது, பிறர் மனைவியரை அனுபவிப்பது போன்ற அனைத்து பாவகாரியங்களிலும் ஈடுபட்டான். ஒரு முறை விருந்திற்கு சென்ற பவஷர்மா மிகவும் அதிகமாக மது அருந்தினான். அதன் விளைவாக வயிற்றுக்கடுப்பால் மிகவும் அவதிப்பட்டான். மிகவும் துன்புற்ற அவன் ஒரு நாள் இறந்து போனான். அடுத்த பிறவியில் ஒரு பேரீச்ச மரமானான். ஒரு நாள் இரண்டு பிரம்மராட்சசர்கள் அந்த மரத்தடியில் ஓய்வெடுக்க வந்...