பகவத் கீதை – 9.22
அனன்யாஷ் சிந்தயந்தோ மாம்யே ஜனா: பர்யுபாஸதேதேஷாம் நித்யாபி யுக்தானாம்யோக-க்ஷேமம் வஹாம்-யஹம்Synonyms:அனன்யா: — வேறு குறிக்கோள் இன்றி; சிந்தயந்த: — ஒருமுகப்படுத்தி; மாம் — என்னை; யே — எந்த; ஜனா: — ஜனங்கள்; பர்யுபாஸதே — முறையாக வழிபடுகின்றனரோ; தேஷாம் — அவர்களுக்கு; நித்ய — நித்தியமாக; அபியுக்தானாம் — பக்தியில் நிலைபெற்று; யோக — தேவைகள்; க்ஷேமம் — பாதுகாப்பு; வஹாமி — அளிக்கின்றேன்; அஹம் — நான்.Translation:ஆனால் எனது திவ்ய ரூபத்தின் மீது தியானம் செய்துகொண்டு, களங்கமற்ற (அனன்ய) பக்தியுடன் என்னை நித்தியமாக வழிபடுபவர்களுக்கோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், அவர்களிடம் இருப்பவற்றை காத்தும் நான் பாலிக்கின்றேன்.Purport:கிருஷ்ண உணர்வின்றி ஒரு நொடியும் வாழ இயலாதவன், கேட்டல், கூறுதல், நினைத்தல், பிரார்த்தனை செய்தல், வழிபடுதல், பகவானின் தாமைரத் திருவடிகளுக்குத் தொண்டு செய்தல், இ...
