பகவத் கீதை – 2.61
தானி ஸர்வாணி ஸம்யம்யயுக்த ஆஸீத மத் பர:வஷே ஹி யஸ்யேந்த்ரியாணிதஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதாSynonyms:தானி — எவரது புலன்கள்; ஸர்வாணி — அனைத்தும்; ஸம்யம்ய — அடக்கப்பட்டனவோ; யுக்த: — ஈடுபட்டதால்; ஆஸீத — நிலைபெற்று; மத்-பர: — எனது உறவில்; வஷே — முழுமையாக; ஹி — நிச்சயமாக; யஸ்ய — எவனது; இந்த்ரியாணி — புலன்கள்; தஸ்ய — அவனது; ப்ரக்ஞா — உணர்வு; ப்ரதிஷ்டிதா — நிலைபெறுகின்றது.Translation:புலன்களை அடக்கி, அவற்றை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, தனது உணர்வை என்னில் நிறுத்துபவன், நிலைத்த அறிவுடையவன் என்று அறியப்படுகிறான்.Purport:யோகத்தின் உயர்ந்த நிலை கிருஷ்ண உணர்வே என்று இப்பதத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒருவன் கிருஷ்ண உணர்வில் இல்லாவிட்டால் புலன்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல. முன்னரே கூறியது போல, மாமுனிவரான துர்வாஸர், மன்னர் அம்பரீஷருடன் கலகம் ஒன்றை ஏற்படுத்தினார். வீண் கர்வத்தால்...
