பகவத் கீதை – 2.66
நாஸ்தி புத்திர் அயுக்தஸ்யந சாயுக்தஸ்ய பாவனாந சாபாவயத: ஷாந்திர்அஷாந்தஸ்ய குத: ஸுக ம்Synonyms:ந அஸ்தி — இருக்க முடியாது; புத்தி: — உன்னத அறிவு; அயுக்தஸ்ய — (கிருஷ்ண உணர்வுடன்) தொடர்பில் இல்லாதவன்; ந — இல்லை; ச — மேலும்; அயுக்தஸ்ய—கிருஷ்ண உணர்வில்லாதவன், பாவனா—நிலைத்த மனம் (ஆனந்தத்தில்); ந — இல்லை; ச — மேலும்; அபாவயத: — நிலைபெறாதவன்; ஷாந்தி: — அமைதி; அஷாந்தஸ்ய — அமைதியில்லாவிடில்; குத: — எங்கே; ஸுகம் — ஆனந்தம்.Translation:பரமனுடன் (கிருஷ்ண உணர்வின் மூலமாக) தொடர்பு கொள்ளாமல், திவ்யமான அறிவையோ கட்டுப்பாடான மனதையோ அடைய முடியாது. இவையின்றி அமைதிக்கு வழியில்லை. அமைதி இல்லாவிடில் ஆனந்தம் எவ்வாறு உண்டாகும்?Purport:ஒருவன் கிருஷ்ண உணர்வில் இல்லாவிடில், அவன் அமைதியடைய முடியாது. கிருஷ்ணரே எல்லா யாகங்களிலும் தவங்களாலும் வரும் நற்பயனை அனுபவிப்பவர், அவரே எல்லா அகிலங்களுக்கும் உரிமையாளர், அவரே எல்லா ஜீவாத்ம...
