
Yogini Ekadashi (Tamil) I யோகினி ஏகாதசி
( ஆனி - ஆஷாட மாதம் ,கிருஷ்ண பட்ச ஏகாதசி)ஆஷாட மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை யோகினி ஏகாதசியாககொண்டாடுவர். யோகினி ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். இந்த விரதத்தை இருந்தால் அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கும்.மஹாராஜா யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத்மாவை வணங்கி, "பரம் பொருளே, நிர்ஜலா ஏகாதசியின் அபார மகிமையப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆடி மாதத்தில். கிருஷ்ணபட்சத்தில் வரும் யோகினி ஏகாதசி, சுத்த ஏகாதசியைப் பற்றிய விவரம் அறிய விரும்புகிறேன். ஆகையால், மது என்னும் பெயர்கொண்ட அரக்கனை அழித்ததால் மதுசூதனன் என்னும் திருநாமம் பெற்ற கிருஷ்ணா, தயைகூர்ந்து விவரமாகசொல்லவும்" என்று கூறினார்.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரை நோக்கி, ஹே மஹாராஜா, உபவாசம் இருக்கக்கூடிய நாட்களிலேயே மிகச்சிறப்பான நாள் ஏகாதசி திருநாள். அந்த ஏகாதசி நாட்களில் மிகவும் சிறப்பானது ஆஷாட மாதத்தின் க...